ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 13, 2021

உயிரின செல்களைக் கலந்து விஞ்ஞானி ரூபமாற்றம் செய்வது போல் மெய் ஞானியின் உணர்வை எடுத்து நாம் ஒளியின் ரூபமாக முடியும்

உதாரணமாக... ஒரு தீமையான உணர்வை நுகரும் பொழுது அதனால் வெறுப்பும் வேதனையும் படுகின்றோம். அத்தகைய உணர்வுகள் நமக்குள் அணுவின் தன்மையாக உடலுக்குள் உருவாகாது தடைப்படுத்த வேண்டும்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வை நம் இரத்தங்களில் கலந்து விட்டால் அதைத் தடைப்படுத்த முடியும்.
1.சமையல் செய்யும் போது பல பொருள்களைச் சேர்த்து
2.நாம் எப்படிச் சுவைமிக்கதாக அதை உருவாக்குகின்றோமோ
3.அதைப் போல அருள் உணர்வைக் கலந்து சுவையாக ஆக்க முடியும்.
 
ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் பலருடைய எண்ணங்களையும்... பலருடைய செயல்களையும்... பலருடைய வேதனைகளையும்... நோயாளிகளையும் மற்றவர்களையும்... சந்திக்க நேர்கின்றது. அந்த உணர்வுகளை எல்லாம் நுகர்ந்து தான் (சுவாசித்து) அறிகின்றோம்.
 
ஆனாலும் காரம் புளிப்பு உப்பு கசப்பு துவர்ப்பு என்று பல சுவைகளை ஒன்றாக்கிச் சுவைமிக்கதாக எப்படி உருவாக்குகின்றோமோ அதைப் போல வெறுப்படையும் நிலையோ சலிப்படையும் நிலையோ சங்கடப்படும் நிலையோ வேதனைப்படும் நிலையோ வந்தாலும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று இதனை அதிகரித்து
2.அந்த வெறுப்படையும் உணர்வுகள் வளராது தடுத்து
3.சமப்படுத்தும் உணர்வாக மகிழ்ச்சியூட்டும் உணர்வாக ஒளியான அணுவாக நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.
 
விஞ்ஞான அறிவு கொண்டு இன்று பல உயிரினங்களின் ரூபங்களை மாற்றுகின்றார்கள். உயிரினங்களின் செல்களை எடுத்து அதை மற்றொன்றுடன் இணைத்துப் புதுவிதமாக உருமாற்றுகின்றார்கள்.
 
உதாரணமாக மூன்று விதமான ஆட்டினங்களை... அந்த மூன்று விதமான உணர்வின் செல்களை எடுத்துப் புது விதமான உருவின் தன்மை கொண்ட ஒரு ஆடாக உருவாக்குகின்றார்கள்.
 
இதைப் போல தான் ஒவ்வொரு மனிதனின் உடலில் விளையும் தீமையின் உணர்வுகளும்... அவர்கள் சொல்லால் வெளிப்படும் அந்த உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அவரின் தீமையின் தன்மைகள் நமக்குள்ளும் உருவாகின்றது.
 
ஆனால் மகரிஷிகளோ தீமைகளை வென்று உணர்வினை ஒளியாகப் பெற்றவர்கள்.  
 
முதலில் சொன்ன மாதிரி... பலருடைய எண்ணங்களையும் பல பல தீமை உருவாக்கும் உணர்வின் தன்மைகளை நாம் நுகர்ந்தறிந்தாலும் தீமையை வென்ற அருள் மகரிஷிகளின் உணர்வை அதனுடன் இணைத்தோம் என்றால் அதை எல்லாம் நல்லதாக மாற்றிக் கொள்ள முடியும்.
 
ஆகவே...
1.இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்குள் தீமைகள் வராது
2.அந்த அருள் மகரிஷி உணர்வை நம் உடலில் இணைத்து இணைத்து இணைத்து
3.அந்த ஒளியின் சரீரமாக மாற்றுதல் வேண்டும்.
 
பல விதமான உயிரினங்கள் அது இயற்கையில் விளைந்ததை விஞ்ஞானிகள் ஒன்றுடன் ஒன்று கலக்கப்பட்டுச் செயற்கையில் உருவாக்கச் செய்த எத்தனையோ நாய் வகைகளையும் மாடு வகைகளையும் இன்று பார்க்கின்றோம்.
 
நாய்களை எடுத்துக் கொண்டால் மனித உருக்கொண்ட நிலைகளாகக் கூட மாற்றுகின்றார்கள்.
 
மனிதனை உருவாக்கும் விந்தின் செல்களை எடுத்து மற்ற நாய்களின் செல்களுடன் சேர்த்து பல பல உணர்வுடன் இணைக்கப்படும் போது இதனின் அளவுகோல் வரப்படும் போது மனித முகத்தைப் போன்றே நாய்கள் வருகின்றது.
 
குரங்குகளின் அணு செல்களைப் பிரித்து எடுத்து அதை மற்ற நாய் இனங்களின் உணர்வுகளிலும் கலந்து... குரங்கு எப்படித் தன்னுடைய விடாப்பிடியாக அடம் பிடிக்கின்றதோ அது போன்ற உணர்வின் குணங்களைப் பெருக்கும் ரூபமாகவும் நாய்களை மாற்றும் தன்மையை மனிதன் செய்கின்றான் தன் ஆறாவது அறிவால்...!
 
ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியனோ விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் வலுப்படுத்தி வாழ்க்கையில் வரும் நஞ்சினை வென்றான். அந்த உணர்வினை அகஸ்தியனும் அவன் மனைவியும் இருவரும் எடுத்து ஒருவருக்கொருவர் அந்த உயர்ந்த மனதைப் பெற வேண்டும் என்று இணைத்து வாழ்ந்தனர்.
 
இவர் கண்ட உண்மையும் அவர் கண்ட உண்மையும் அங்கே இரு மனமும் ஒன்றாகி ஒன்றின் நிலைபெறும் போது
1.கணவன் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்றும்
2.மனைவி உயர்ந்த நிலை பெற வேண்டும் என்றும்
3.விண்ணின் ஆற்றலை நுகர்ந்து அந்த நஞ்சினை ஒடுக்கிடும் உணர்வுகளைப் பெற்று
4.இரு உணர்வும் ஒன்றென இணைந்து உடலில் ஒளியான அணுக்களைப் பெருக்கிப் பெருக்கி
5.எதனை உற்றுப் பார்த்தனரோ அந்த உணர்வின் தன்மையை வளர்த்து
6.உடலை விட்டுச் சென்றபின் பூமியின் துருவப் பகுதியில் இன்றும் அவர்கள் துருவ நட்சத்திரமாக
7.நமது பூமிக்குள் வரும் நஞ்சினை ஒடுக்கி ஒளிச் சுடராக மாற்றிக் கொண்டே வருகின்றனர்
8.அதனின்று வரும் நிலையை நாம் நுகர்ந்து பழக வேண்டும்...!
 
இந்த மனித வாழ்க்கையில் நஞ்சான செயல்களையும் வெறுக்கும் உணர்வுகளையும் வேதனைப்படும் உணர்வுகளையும் எப்பொழுது நுகர்ந்தாலும் அடுத்த கணம் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை அதனுடன் இணைத்து மாற்றி அமைத்திட வேண்டும்...!

உங்களால் முடியும்... உங்களை நீங்கள் நம்புங்கள்.