அகஸ்தியன் தாய் கருவில் சிசுவாக இருக்கப்படும் பொழுது
அவனின் தாய் தந்தையர்கள் விஷத்தன்மை கொண்ட மிருகங்களிடமிருந்தும் மற்ற
விஷ ஜெந்துக்களிடமிருந்தும் தப்பிக் கொள்ளவும் மின்னல்களில் இருந்து தப்பிக் கொள்ளவும்
பல பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் உபயோகப்படுத்தினார்கள்.
குருநாதர் ஒரு சமயம் என்ன செய்தார்...? அவர் கையிலே பச்சிலையை
வைத்து இருக்கின்றார். அது எனக்குத் (ஞானகுரு) தெரியாது.
நீ மின்னலைப் பார்...! என்று என்னிடம் சொன்னனார்.
அந்தச் சமயத்தில் அவருக்கும் எனக்கும் சண்டை வந்துவிட்டது. அவர் கையில் பச்சிலை
வைத்திருந்தது
எனக்குத் தெரியாது.
ஆனால் என் கையைத் தொடுகிறார். மின்னலைப் பாருடா...! என்று கட்டாயப்படுத்துகின்றார்.
சாமி...!
நான் பிள்ளை குட்டிக்காரன்.
நீங்கள் கூப்பிட்டீர்கள் என்று உங்களுடன் வந்துவிட்டேன். மின்னலைப் பார்த்து என் கண்கள் இல்லாமல்
போய் விட்டால்
நான் என்ன செய்வது...?
என்று சொல்கிறேன்.
நான் (ஈஸ்வரபட்டர்) சொல்வதைக் கேட்கிறேன் என்று சொல்லி வந்தாய் அல்லவா. “சரி”
என்று சொல்லித்
தானே வந்தாய். உன் மனைவியை உடல் நலம் பெறச் செய்தேன்.
அதன்படி நான் சொல்வதைக் கேட்கிறேன் என்று சொல்லி வந்தாய். அப்படியானால் நான் சொல்வதைக் கேட்க வேண்டுமா... இல்லையா...? என்று இப்படிக் கேட்கிறார்.
நான் என்ன செய்யட்டும்...? எனக்கு வேறு வழி இல்லை...!
குருநாதர் பச்சிலையை கையில் வைத்துக்
கொண்டு என்னைத்
தொடுகின்றார். மின்னல் தாக்கப்படும் பொழுது மின்னலைப்
பார் என்று சொல்கின்றார்.
விண்ணிலே விஷத் தன்மைகள் தாக்கும் பொழுது தான் மோதலாகின்றது.
அப்பொழுது பளீர்... என்று மின்னலாகப் பாய்கின்றது.
1.விஷம்
தாக்கப்பட்டுத் தான் வெப்பம் ஆகின்றது...
2.விஷத்தின் தாக்குதலால் தான் நம் உயிரிலும் வெப்பம் உருவாகிறது... அதனுடைய
இயக்கமும் ஆகின்றது
3.ஆனால் அதீத விஷம் தாக்கப்படும்போது இருளாகின்றது.
சாதாரணமாக நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு
அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விஷம் தேவை. விஷம் அதிகம் ஆனால் நம் செயலையே மறக்கச் செய்து விடுகின்றது.
உப்புப்
போட்டால் ருசியாகத் தான் இருக்கின்றது. அதிகமாகப் போட்டால்
ஓ...ய்ய்....!
என்று வாந்தி வருகின்றது. சாப்பிட முடியாது..!
அளவை அறிந்து போட்டால் தான் சாப்பிட முடியும். ஆகவே
அதன் உணர்வுக்கொப்ப மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக இதை எல்லாம்
குருநாதர் அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.
அவர் இதை எல்லாம் விளக்கமாகச் சொன்ன பின்...
1.அவர் சொன்னபடி மின்னலைப் பார்த்தவுடன் மிகவும் ஆனந்தமாக இருந்தது
2.அறிவின் தன்மை எனக்குள் வருகின்றது,...
3.அறிந்து கொள்ளக் கூடிய உணர்வுகள் அந்த மின் கதிர்கள் என்னென்ன ஆகின்றதோ அது எல்லாம்
தெரிகிறது
4.வான மண்டலத்தில் உள்ளதை எல்லாம் அறியும்படி செய்தார் குருநாதர்.
மின்னல்
வரும் பொழுது அது எங்கெங்கெல்லாம் ஊடுருவுகிறது என்று
அதையெல்லாம் அறியக்கூடிய சக்தி வந்தது. அதை அப்பொழுது தெரியப்படுத்துகின்றார்.
முதலில்
அவர் பச்சிலையைக் காண்பிக்கவில்லை. கையில் வைத்துக்
கொண்டு என்னைத்
தொடுகின்றார். நான் மின்னலை பார்க்க மாட்டேன் என்று சொல்கின்றேன். பின் தான் விளக்கம் சொல்கிறார்.
ஏனென்றால்
1.உனக்குச் சக்தி கொடுக்கத்தான் நான் இதைச் செய்தேன்
2.இந்த
பச்சிலைகளால் தான் அகஸ்தியன்
அந்த ஆற்றலைப்
பெற்றான்
3.அதன் உணர்வின் துணை கொண்டு தான் ஒளியாக மாறினான்
அதே பச்சிலையின் உணர்வுகளை எடுக்கப்படும்போது அவன் பெற்ற உணர்வை நீயும் பெறும்
பொழுது உனக்குள்ளும் தீமைகள் வராது அந்த விஷத்தை முறிக்கும் சக்தி கிடைக்கின்றது என்று அங்கே தெளிவாக்குகிறார்
குருநாதர்.
குருநாதர் பார்ப்பது போல நானும் மின்னலைப்
பார்த்து அந்த மின்னல்களின் ஒளிக்கற்றைகளை நான் நுகரப்படும் பொழுது அது என்னுடைய இரத்தத்தில் கலக்கின்றது.
இரத்தத்தின் வழி உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தச்
சக்தி கிடைக்கின்றது எல்லா அணுக்களுக்கும் கிடைக்கும் பொழுது ஒளியின்
அணுக்களாக மாறுகின்றது.
இன்று எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று உபயோகப்படுத்தி எத்தனையோ
ஆண்டுகளுக்கு முன் இறந்த
டைனோசர் (DINOSAUR) என்ற உயிரினங்கள் வாழ்ந்த இடங்களையும் அதன் உடல் புதைந்த இடங்களையும் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கின்றனர்.
அதைப் போன்று தான்
1.அகண்ட அண்டமும் அந்த உணர்வும் எப்படி விளைந்தது...? என்று அகஸ்தியன்
ஆதியிலே கண்டான்
2.அவனைப்
போல் நீயும் உனக்குள் அதை எல்லாம் அறிய வேண்டாமா...? என்று வினா எழுப்புகிறார்
3.அதற்காக வேண்டித்தான் உன்னை மின்னலைப்
பார்க்கச் சொன்னேன் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
அவர் சொன்ன வழிப்படி அறிந்து கொண்ட பின் அந்த உணர்வு வருகின்றது. என்னுடைய எண்ணங்களில் அதைப் பதிவு செய்யப்படும் பொழுது
1.இந்த காற்றில் இருக்கும்
அகஸ்தியரின் உணர்வை எடுத்து நானும் அறிய முடிகின்றது
2.அதன் உணர்வை வைத்து நானும் பேச முடிகின்றது
3.பேசும் உணர்வை செவி
வழி நீங்கள்
கேட்டீர்கள் என்றால்...
4.அகஸ்தியன்
கண்ட உண்மைகளை எல்லாம் பெற வேண்டுமென்று ஆசைப்பட்டால்...
5.இந்த
உணர்வின் தன்மை உயிரிலே பட்டபின் உங்களுக்குள்
பிரம்மமாகி
6.அகஸ்தியன்
கண்ட அந்த உண்மைகளை
நீங்களும் நிச்சயம் அறிய முடியும்.