1.சுவாசத்தின் வீரியத்தைக் காட்ட நாசியாக யானைகளையும்
2.சுவாசத்தில் நறுமணத்தை எடுக்க வேண்டியதைக் காட்ட
துதிக்கையில் அமுதக் கலசத்துடன் மலர்களையும்
3.மன எண்ண வீரியத்தின் தூய்மையைக் காட்ட ஏழு எண்ணங்கள்
கலந்த (தூய்மையான எண்ணமாக) வெண்மையான யானையின் நிறத்தையும்
4.சுவாச நிலை முக்தி பெறும் தொடருக்கு ஆதி மூல நீர்
சக்தியைக் காட்டி
5.நீரடி மூல வித்து நீர் மண் தொடர்பில் (மண் வளத்தில்
வளரும் தாவரம் போல்) சித்தன் நிலை பெறும் சித்துக்கள் என்பதைக் காட்ட
6.நீரின் சுவாசத்தை ஈர்த்துச் சமைத்திடும் ஆகார
நியதியைக் கொண்டு முளைத்து... நீர் மேல் கிளைத்தெழும் தாமரை இதழ்களைக் காட்டி
6.பரிபூரணத்தை ஒவ்வொருவரும் பெற்றிடும் வழியாக வண்ண
மலரில் அமர்ந்துள்ளாள் “கஜலக்ஷ்மி…!” என்று அன்று உணர்த்தினார்கள் ரிஷிகள்.
மண்டலமாக உருக்கோலம் பூண்ட நம் பூமித் தாய் பெற்று
வளர்த்திட்ட… இன்னும் வளர்ச்சியின் வலுக்கொள்ளும் ஈர்ப்பின் செயலில்… தன்னை மேன் மேலும்
வளர்த்துக் கொள்கின்றது.
அதைப் போல் பூமித் தாயின் செல்வங்களான ஒவ்வொரு உயிரான்மாவும் ஆதிமூலச் சக்தியின் தொடர் கொண்டு தன்னை வளர்ச்சி நிலைப்படுத்த வேண்டிய தொடருக்கு “கஜலக்ஷ்மியாக அமர்ந்துள்ளாள் பூமித்தாய்…! என்று காட்டினார்கள் அன்றைய சித்தர்கள்.