ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 21, 2021

இந்த வாழ்க்கையில் வரும் துன்பத்தையும் துயரத்தையும் சொந்தமாக்க நாம் பிறவி எடுக்கவில்லை

நமது வாழ்க்கையில் இன்று இந்த உடல் பற்றுடன் தான் வாழ்கின்றோம்... எத்தனையோ ஆண்டுகள் வாழ்கிறோம் என்று...!
 
இந்த உடலுக்காகச் சேமித்து வைக்கும் சொத்தையும் நமது குடும்பத்தையும் பாதுகாக்கும் உணர்வே தான் வருகின்றது.
1.பாதுகாக்கும் உணர்வுகள் அது சிறிது தவறினால் வேதனை என்ற உணர்வுகளே வருகின்றது
2.வேதனை என்ற உணர்வுகள் வளர்ந்தால் தேடிய செல்வத்தையும் பாதுகாக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
 
பாதுகாக்கும் தன்மைகள் இழந்து விட்டால் நம் உடலில் நோயின் தன்மை உருவாகின்றது
1.நோயின் தன்மை உருவானால்
2.இதுவே நாம் தேடிய செல்வம் ஆக மாறுகின்றது.
 
நோயின் உணர்வுகள் விளைந்தால்... “நம் உடலில் அந்தச் செல்வத்தின் வழியே...” உயிர் அடுத்த உடலை உருவாக்குகின்றது. ஆகவே தேடிய செல்வங்கள் நமக்கு சொந்தமல்ல... இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை...!
 
நமக்குச் சொந்தமாக்க வேண்டியது எது...? என்று சிந்தியுங்கள்.
 
வேதனை வெறுப்பு என்பதைச் சொந்தமாக்கினால் அதன் உணர்வு கொண்டு அடுத்த உடலை உருவாக்குகின்றது உயிர். கோபம் குரோதம் என்ற நிலை ஆனால் அதன் வழி அடுத்த உடலைச் சொந்தமாக்கி அந்த உருவாக உயிர் மாற்றிவிடுகின்றது
 
ஒரு நிலம் சரியில்லை என்றால் அதனைப் பண்படுத்துகின்றோம். நிலத்தில் வீடு கட்டினால் சரியில்லை என்றால் மாற்று வீட்டை அதைக் காட்டிலும் நம் செல்வத்திற்குத் தக்க வீடுகளைக் கட்டுகிறோம்.
 
இதைப் போலத் தான் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடலை உயிர் உருவாக்கி விடுகின்றது இதைப்போல அதிலே நரக வேதனையைத் தான் படுகின்றது
 
ஆகவே அத்தகைய வீடுகளை இந்த உடலில் மாற்றுவதற்கு மாறாக
1.உயிர் என்ற உணர்வின் தன்மை கொண்டு என்றும் நிலையான
2.பேரருள் பெறும் உணர்வினைச் சொந்தமாக்கி... பேரருள் என்ற உணர்வினை ஒளியாக்கி
3.இனி நாம் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.