ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 15, 2021

வலம்புரிச் சங்கில் உள்ள விசேஷ குணம் என்ன...? - ஈஸ்வரபட்டர்

உயிரணுக்கள் தன் எண்ணச் செயலுக்கொப்ப வீரியம் கொள்ளும் நிலையே நீர் சக்தியில் (கடல் நீரில்) பல வித உயிர் சக்திகள் உருவாகும் செயலில் எல்லாம் தனித்துவம் ஒன்று உண்டு.
 
1.ஆயிரம் ஆண்டுகள் நீர் சக்தியின் தொடரில்
2.சுவாசத்தின் சக்தி கொண்டு பெறப்படும் அந்த அரிய அமில குணங்கள்
3.சூரிய சக்தியின் பலனையே ஈர்க்கும் “சங்காக...!” கடலிலே உருப்பெறுகின்றது.
 
“சங்கு சுட்டாலும் வெண்மை தரும்…!” என்பார்கள்.
 
அதி உஷ்ணத்திலும் அதி உஷ்ண அக்கினி ஜுவாலையிலும் தன் குணம் மாறாமல் (தன்னையே) தன் அமில குணத்தையே காத்துக் கொள்ளும் திட வீரிய அமில குண அணுக்களின் சேர்க்கை அத்தகைய சங்கிலே உண்டு.
 
அத்தகைய சங்கின் குணத்தைப் போல் நம்முடய குணம் இருக்க வேண்டும். நீரானாலும் சரி நெருப்பானாலும் சரி சங்கின் அமில குணம் மாற்றமடையாத சிறப்புடையது.
 
1.ஆயிரம் காலங்களுக்கு மேல் வாழும் பொக்கிஷமாம் அந்த உயிர்ச் சக்தி
2.தன் நிலையில் பரிபூரணத்துவம் பெற்று விட்டு வெளிக் கிளம்பும் சூட்சமத்தில்
3.அந்தச் சங்கு - நீர் மேல் மிதக்கும் முக்கியமான ஈர்ப்பின் செயலை அறிந்துணர வேண்டும்.
 
நக்கீரனைக் கேட்டால் சொல்வார்…!
 
சங்கறுக்கும் குலத்தில் பிறந்து வாழ்ந்து புலமை பெற்ற அவரது திட எண்ணம் வீரியத்தின் குணம் எங்கிருந்து வந்தது..? வலம்புரிச் சங்கின் நீரை அவர் அருந்தினார்.
 
வலம்புரிச் சங்கில் உள்ள விசேஷ குணம் என்ன...?
 
வாக்தேவி நட்சத்திரத்தின் அமில குணம் உயரிய நாதமாகி... ஓங்காரமாகச் சக்தியாக உயிர் சக்தியுடன் ஒன்றி... நாபிக் கமலம் தொட்டு ஓங்கி உயர் சக்தியாகப் பிசிரற்று வெளிப்பட... சங்கு நீர் அமிலக் குணம் நாம் விண்ணுலகம் செல்ல வழி காட்டும்...! சூட்சமப் பொருளை மனதில் கொள்க...!
1.நக்கீரனை எண்ணி சங்கின் குணத்தைப் பெற வேண்டும்.
2.அந்தச் சங்கு அமில குணத்துடன் ஒன்ற வேண்டும்.
3.நெற்றிப் பொட்டில் உயிர் இருக்கும் இடத்தில் குறுகுறுப்பை உண்டாக்கும்.