1.ஆத்மாவாகித்தான்
சரீர பிம்பத்தையே பெறுகின்றோம்
2.சரீர
பிம்பத்தின் சமைப்பைக் கொண்டுதான் ஆத்மாவின் வலுவைக் கூட்ட முடிகின்றது.
சரீர
எண்ண இயக்கத்தின் பிடிப்பு வாழ்க்கை அலையிலேயே நம் எண்ணங்கள் சென்று
கொண்டிருந்தால் அதே அமிலச் சத்தின் குண வலுவை ஆத்மா பெற்றுப் பெற்று… அதன் தொடரிலேயே
தான் செல்லும்.
அத்தகைய
சரீர இயக்க ஈர்ப்பலையின் பிடியிலிருந்து…
1.எண்ணத்தின்
உணர்வை உயர் ஞான ஜெப முறையினால்
2.மேல்
நோக்கிய சுவாசம் கொண்டு விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களின் வலுவை
3.உடலில்
உள்ள எலும்புகளில் அந்த வலுத்தன்மையைக் கூட்டிக் கொண்டால்
4.அந்த
வலுவின் அமிலத்தால் ஆத்ம வலுவும் உன்னத வலுத் தன்மை பெற்று விடும்.
இப்படி…
சரீர இயக்க எண்ண உணர்வையே இவ்வுயர் ஞான ஈர்ப்பலை வலு ஆத்மா பெற்றால் ஆத்மாவானது
தனித்து எங்கும் சென்று செயலாற்றக்கூடிய வலு பெறும்.
1.இவ்வுடலின்
இயக்கத்தால் ஏற்படும் காந்த ஈர்ப்புத் தொடர் அலையால் எங்கும் ஆத்மாவைச் செலுத்தி
2.பால்வெளி
மண்டல எந்நிலையிலும் ஆத்மாவைச் செலுத்தி
3.உடல்
ஈர்ப்பின் தொடரிலேயே எதனையும் அறிய முடியும்.
ஆகவே
இச்சரீர எலும்புக்கூட்டினை வலுவாக்கி அதன் காந்த மின் அலையின் ஈர்ப்பை வலுக்
கொண்டதாகச் செயல்படுத்தி இவ்வாத்மாவை இவ்ஈர்ப்புப் பிடியிலிருந்தே தனித்து அனுப்பி…
உடல் தொடர்புடனே உணரும் பக்குவம் அடைய வேண்டும்.
உடலைச்
சுற்றித் தான் இவ்வாத்மா உள்ளது...!
1.ஆத்மாவின்
அலை மோதலில் உடல் உருவாகிச் செயல் கொண்ட நிலையை
2.உடலின்
இயக்கம் கொண்டே இவ்வாத்ம வலுவால் நாம் பெறும் உயர் ஞானச் சித்து செயலினால்
3.”சகல
சித்துத் தன்மையுமே” நாம் பெற முடியும்.
ஒரு காந்தமானது
எப்படி இரும்பைத் தன் வசத்திற்கு இழுத்துக் கொள்கின்றதோ அதைப் போன்று உயர் ஞான
வசத்தில் (ஈர்ப்பில்) எண்ணத்தின் ஈர்ப்புச் செயல் இருக்குமேயானால் “மனிதனின் உயர்
குணத்தை மனிதனே அறிய முடியும்…!”
ஆனால்
பல காலமாகச் சேமித்த ஆத்ம வலுவினை… இன்றைய செயற்கை முறை வாழ்க்கைக்காக… உன்னத நிலை
பெறும் ஞான வழித் தொடர் அறியும் “உயர் தியான முறையை…” வாழ்க்கையின் செயலுடன்
ஒன்றச் செய்து விட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும்…?
1.மாறு
கொள்ளப் போகும் மண்டல ஈர்ப்புச் சுழற்சி ஓட்ட கதியில்
2.மண்டலச்
சேர்க்கையின் காலங்கள் (கல்கியுகம்) உருவாகும் தருணத்தில்
3.ஞானத்தின்
ஈர்ப்பை எடுக்கவல்ல காற்றலையின் தொடர் நிலையே
4.மண்டல
ஓட்டச் சேர்க்கைக் காலத்தால் பாதிப்பு ஏற்பட்டு
5.மனிதனின்
எண்ண உணர்வே சித்தம் கொண்ட பிரமை கொண்ட நிலையில்
6.மனிதனை
மனிதனே இனம் காண முடியாத நிலை தான் இனி வரப் போகும் கால நிலை (கலி முடிவு).
இதிலிருந்தெல்லாம்
தப்பி… தன் ஞான சக்தியை உயர்த்தி… தன் ஆத்ம வலுவையே… தான் உணரும் பக்குவத்தின்
உண்மைச் செயலாகச் செயல்படுங்கள்.