நாதத்தால் வளர்ந்த விந்துவின் ஜீவ வளர்ப்புத்தான் இப்புவி வளர்ப்பு யாவையுமே…!
பால்வெளி மண்டலத்தின் வளர் தன்மை கொண்ட அமில மோதல் நாத முதற் கொண்டு…
இப்புவியின் சுழற்சி நாதக் காற்று வளர்ப்பு ஒலி ஒளி நீராகி… இத்திடம் கொண்ட சத்துத்
தன்மையின் நாத ஈர்ப்பின் சுழற்சியால் புவியில் இப்புவியின் வெக்கை அலை வெளிப்படுகிறது.
அந்த வெப்ப அலையால் ஈர்க்கப்படும் ஒலி நாதமான ஓ..ம் என்ற நாதத்தின் குணத்
தன்மை ஒலியாகி.. ஒளியாகி… நீரான வளர் சுழற்சியில்..
1.ஓ..ம் எனக் கொண்ட நாத ஒலியின் தொடர் நாத விந்து வளர்ப்பு தானப்பா
2.இப்புவி நாத வளர்ப்பு தானப்பா…
3.இப்புவி நாத வளர்ப்பு யாவையுமே…!
விளக்கம்:-
இந்தப் புவி வளர்த்த நீரில்… சூரியனின் அலை ஈர்ப்பை இப்பூமி ஈர்த்து…
1.நீரின் மேல் சூரிய ஒளி பட்டு இப்பூமி ஈர்த்து
2.இப்பூமி வெளிப்படுத்தும் ஆவியான வெக்கை நிலை (வெப்பம்) மேல் நோக்கிச்
செல்கிறது.
அதைப் போன்றே எரிக்கப்படும் எரி பொருளின் புகையானது மேல் நோக்கிச்
செல்கின்றது.
1.இப்புவியில் வளரும் யாவும் மேல் நோக்கி வளர்கின்றது.
2.ஆனால் கனம் கொண்ட வளர்ப்பு யாவும் புவி ஈர்ப்பின் பிடியுடன் கீழ் நோக்கி
வளர்கின்றது.
புவி வளர்ப்பா…? பால்வெளி மண்டலத்தின் வளர் தன்மையா இவ்வளர் நிலை யாவையும்..?
இந்தப் புவியில் வளரும் தன்மையின் வளர் சக்திக்கு நாதத்தின் வித்துத்
தன்மையின் செயலுக்கே ஜீவ நாடி… இந்த “ஓ…ம்…” என்ற புவி நாதம் தான்.
இந்தப் பால்வெளி மண்டலத்தின் செயல் தன்மையில்… அந்தந்த மண்டல ஈர்ப்பு ஒலித்
தன்மை கொண்டு நாதச் சேர்க்கையின் வளர் உயிரணுக்கள் ஒவ்வொரு மண்டலத் தன்மைக்குகந்த
நிலையில் வளர்கின்றது.
மண்டலச் சுழற்சிக்கு மாறுபட்டுள்ள பால்வெளி மண்டலத்தில் காற்றுத் தன்மையே
இல்லாத மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் எத்திசை என்ற செயலற்ற நிலையில் உள்ள
இடங்களிலும் சில ஜீவராசிகள் பிறந்து மடிந்து வாழ்கின்றன.
காற்றுத் தன்மையே இல்லா நிலையில் ஜீவன்கள் எப்படிப் பிறக்கின்றன..?
இவ்வமிலத்தின் சேர்க்கை நிலையில் சிறு சிறு அமிலக்கூட்டின் மோதலின் ஒலி
ஈர்ப்பின் ஜீவனாகி இவ்வொளியின் நாதமுடன் வளர்ச்சி கொண்ட வளர்நிலைக்குகந்த மிகக்
குறுகிய கால சில அபூர்வச் செயல் கொண்ட ஜீவத் தன்மைகள் தோன்றி அதன் கனம் உந்தித்
தள்ளப்பட்டு பிறப்பெடுத்தவுடன் மடிந்து கனம் கொண்ட அப்பிறப்பு அமிலக் கூட்டுச்
சேர்க்கை உந்தித் தள்ளப்பட்ட நிலையில் தான் தனக்குகந்த மண்டல ஈர்ப்பின் வளர்ப்புத்
தன்மைக்கு வலு நிலை கொண்ட வளர்ப்பு அமிலச் சத்து கிடைக்கின்றது.
1.இந்தப் பால்வெளி மண்டல செயல் வளர்ப்பு நிலை இல்லாவிட்டால்
2.மண்டல ஈர்ப்பு வளர்ப்பு செயல்படாது.
சூரிய மண்டலம் ஜீவராசிகள் வாழ முடியாத இடம். ஜீவ வளர்ப்பே இல்லாநிலை
என்றெல்லாம் உணர்த்துகின்றனர். ஆனால் இந்த அண்டகோடி அனைத்து வார்ப்பு நிலைகளிலும் “இந்நாத
விந்தற்ற நிலை இல்லா இடம் எதுவுமே இல்லை…!”
வளர்ப்பின் வளர்ப்புத் தன்மை கொண்ட வளர் வளர்ச்சி செயலுடன் ஒன்றின் செயல்
தொடர் வளர்ப்பு “நாத விந்துக்கள் தான்” இம்மனிதனும் இம்மற்றெல்லா மண்டலங்களுமே…!
1.இந்நாத ஈர்ப்பு மோதலில் துடிப்பில்லா விட்டால்
2.எச்செயலின் வளர்ப்பு வளர்படுவதில்லை
3.வளர்ப்பின் வளர்ப்பே இந்நாதம் தான்.
எண்ணத்தால் எடுக்கும் நாதத்தை உயர் நாதச் செயலாகச் சேமிக்கும் பொழுது தான்
இந்த உயிர் காந்தத் துடிப்பின் சக்தியை இவ்வாத்ம சேமித்து அதன் வளர்ப்பிற்குகந்த
அணு வளர்ச்சியின் வலுவைத் தன் வலுவாக்கி ஜீவ சக்தி வாழ முடிகின்றது.
இதன் தொடர்பில்…
1.தனக்குச் சாதகமான வலுத் தன்மையைக் கூட்டிக் கொள்ள
2.இந்த மனித எண்ண நாதத்திற்குத் தான் உண்டு.
3.இதன் தன்மையை உணர்ந்தவர்கள் தான் நம் ஞானிகளும்.. சித்தர்களும்… மகரிஷிகளும்…!
அந்தத் தத்துவ ஞானச் செயல் மணிகளாகப் பல ஞானிகள் இஜ்ஜெப முறையின் நாத ஒலி
கொண்ட சில மந்திர ஒலிச் சேர்க்கையின் செயல் கொண்டு செயல்படுத்தினர்.
அதன் மூலம் அச்செயல் வளர்ப்பின் தன்மை கொண்ட
1.பல கோடி ஆண்டுகளாக வளர்ச்சி கொண்ட…
2.இச்சூரிய குடும்பமல்லா பல சூரியனின் வளர்ச்சி பெற்ற ரிஷி அலையின் தொடர் நிலை
பெற
3.இந்த மந்திர நாத யாக ஜெப பூஜை வழிபாட்டில் ரிஷித் தன்மை வளர்ப்பு ஞானிகளாக
ஒளிர்ந்தனரப்பா…!