ஒரு சமயம் எனது (ஞானகுரு) மருமகளுக்கு ஒரு விபத்து வந்தது. அவர்களுடைய சகோதரி
அமெரிக்காவில் உள்ளது.
இங்கே விபத்தான செய்தியை அமெரிக்காவில் இருக்கும் சகோதரி கேட்ட உடனே என்ன
ஆனது…?
அடுப்பில் எண்ணெயை வைத்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தன் செயலை
இழந்து… அந்த வேலையில் தனக்குத் தெரியாதபடி ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடமோ
தாமதமான பின்… கொதிக்கும் எண்ணையைத் தூக்கும் பொழுது அறியாதபடி தன் உடலிலே ஊற்றிக்
கொண்டது… !
சகோதரிக்கு ஒரு விபத்து ஆனது…! என்ற உணர்வுகள் தெரிந்த பின் இப்படி ஆனது.
ஏனென்றால் இருவருமே ஒன்றாகப் பாசமாகப் பழகியவர்கள்… நடந்த நிகழ்ச்சி இது.
எண்ணெய் மேலே கவிழ்ந்த பின் அங்கே நெருப்பும் பிடித்து விட்டது. ஏனென்றால்
அமெரிக்காவில் வீட்டிற்குள் உறைபனியின் குளிர் தாக்காமல் இருப்பதற்காக மரங்களை உள்ளே
வைத்துத்தான் வீடு கட்டியிருப்பார்கள்.
அதாவது வெளியிலிருக்கும் குளிர் சுவற்றின் வழியாக வீட்டுக்குள் வராதபடி மரப்பலகைகளை
வைத்திருப்பார்கள். அது எல்லாமே தீப் பிடித்து எரிய ஆரம்பிக்கின்றது.
1.ஏனென்றால் மனிதனுடைய உணர்வுகள் ஒன்றாக இணையப்படும் பொழுது
2.விபத்துகள் எப்படி உருவாகிறது…? என்று பல முறை யாம் சொல்லியுள்ளோம்.
இது நடந்ததும்… “தீ பிடித்துவிட்டது..” என்று அங்கே அமெரிக்காவிலிருந்து ஃபோன்
இங்கே வருகிறது.
1.சகோதரிக்கு ஒரு விபத்தாகி விட்டது…! என்று அந்தப் பாச உணர்வுகள்
நினைவாக்கப்படும் பொழுது
2.அந்தப் பதட்டமான உணர்ச்சிகள் தூண்டப்பட்டு
3.அங்கே “தான்” பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் கவனத்தை இழக்கச் செய்து…
தன்னையே மறக்கச் செய்கிறது.
4.உடனடியாக அந்த உணர்வுகள் (எங்கே இருந்தாலும்) இப்படி இயக்குகிறது.
பாசத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும் பிறருடைய நிலைகளை இயக்கப்படும் பொழுது
தன்னை அறியாமலே இதைப் போன்ற நிகழ்ச்சிகளைச் செயல்படுத்திவிடுகிறது.
மனிதனின் வாழ்க்கையில் அறியாமல் இயக்கும் இதைப் போன்ற தீமைகளிலிருந்தெல்லாம்
மீள வேண்டும்… என்பதற்காகத் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி
சொல்லி உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றேன்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்ட பின் அதை நீங்கள்
மீண்டும் நினைவாக்கி
1.உங்கள் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தும் பொழுது
2.அதனின்று வரக்கூடிய உணர்வுகளை உங்கள் கண்கள் இழுத்து உடலுக்குள் பாய்ச்சச்
செய்கின்றது.
அப்பொழுது ஏற்கனவே உங்களுக்குள் பதிவு செய்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச்
சுவாசித்து உங்கள் உடலுக்குள் பரவச் செய்கிறது. அப்படிப் பரவச் செய்யும் பொழுது… அந்த
அணுக்களின் தன்மை…
1.எம்முடைய உபதேசத்தின் மூலம் நீங்கள் கேட்டுணர்ந்த உணர்வுகள் எல்லாம்
2.உங்கள் உடலில் கருவுக்குள் முட்டையாகின்றது.
துருவ நட்சத்திரத்தைப் பற்றிச் சிறுகச் சிறுகத் தியானிக்கும் பொழுதும் ஆத்ம
சுத்தி செய்யும் பொழுதும் அந்தக் கருக்கள் எல்லாம் அணுவாகப் பிறக்கின்றது.
அதிகாலை துருவ தியான நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
சக்தியை எடுத்து எங்கள் உடலில் உள்ள இரத்தநாளங்களில் கலந்து உடலில் உள்ள ஜீவான்மா
ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானித்துச் சுவாசித்து
உடலுக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
இப்படி நீங்கள் உணவைக் கொடுத்து அதை வளர்க்க வேண்டும். தினமும் செய்து வரும்
பொழுது இது சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.
முதலில் சொன்ன நிகழ்ச்சி போன்று நம் உடலுக்குள் ஏற்கனவே சந்தர்ப்பத்தால்
எத்தனையோ தீமைகள் பதிவாகி இருக்கின்றது. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து
வலுவாக்கிய நிலைகள் கொண்டு அந்தத் தீமைகள் நமக்குள் வளர்ச்சி ஆகாதபடி தடைப்படுத்த
வேண்டும்,
அதற்குத்தான் இதைச் சொல்வது.