அணு
தோன்றி எத்தகைய வித்தான உயிரின் தாவரமாக வளர்ந்தாலும் அந்த வித்து துளிர் கொண்ட
இலை விட்டு அதன் மூலம் ஈர்த்து வளரும் தன்மைக்கு வருகின்றது.
1.அந்த
இலை பசுமையாக இருக்கும் அதன் காலத்திற்கு உகந்த அமிலச் சேர்க்கையின் வளர்ப்பு
2.அவ்விலை
ஈரப்பசை கொண்ட வளர்ப்பின் முற்றிய நிலையில் தன் சக்தியை
3.தண்டுப்
பாகத்தில் வளர்ப்பு வலு எடுத்த பிறகு
4.அந்த
முற்றிய இலை உதிர்ந்து விடுகிறது “சருகாக…!”
வித்திட்ட
அந்த விதையின் வளர்ப்பு தன் வளர்ச்சியிலே விழுதுகளாகி
1.அவ்விழுதின்
வலுவைத் தன் வளர்ப்பின் வலுவாக்கி
2.வித்தின்
வளர்ப்பின் வளர்ப்புகளை வளர்க்கின்றது.
ஆக சிறு
வித்து பல வித்தாக வளர்ப்பெடுத்து மாறு கொண்ட வளர்ப்பை உருவாக்குகிறது.
இப்படி
ஒவ்வொரு அணு வளர்ச்சியின் வளர்ப்பிலும் தொடர் வளர்ச்சி வளர்வதைப் போல் இந்தப் புவி
மட்டுமல்லாது… ஒவ்வொரு மண்டலமுமே… தன் வளர்ப்பின் வளர்ப்பை வளர்த்துக் கொண்டே
உள்ளது…!
சூரியக்
குடும்பத்தின் வளர்ப்பைப் போன்றே ஒவ்வொரு மண்டல வளர்ப்பின் வளர்ப்பு வளர்ந்து கொண்டே
தான் உள்ளது. அதாவது
1.மனித
இனப் பெருக்க சுழற்சியைப் போன்றே
2.ஒவ்வொரு
செயலும் தன் வளர்ப்பின் வளர்ப்பை வளர்த்துக் கொண்டே தான் உள்ளது.
சுழற்சி
ஈர்ப்பு வளர்ப்பின் நிலைக்கொப்பச் சுழலவிடும் வளர்ப்பிலேயே
1.வளரும்
தன்மை ஒன்றொன்றின் தொடர்ச்சி கூடக் கூட
2.வளர்ச்சியின்
தன்மை வலு அதிகமாகின்றது.
தங்கத்தின்
வளர்ப்பானது அவை வளரும் இடங்களில் ஆரம்ப இடத்தைக் காட்டிலும் அடுக்கடுக்காக அந்தத்
தங்க வளர்ப்பு மண்ணானது சிறிது சிறிதாக வலுப் பெற்று அதன் தொடர்ச்சியில்
கிடைக்கப்பெறும் இந்த உலோகச் சேர்க்கை வடிவமைப்பு மிகவும் உயர்ந்ததாகக்
கிடைக்கின்றது.
அதைப்
போன்றே இந்த உயிராத்மாவிற்கு சேமிக்கப்படும் சேர்க்கையின் தன்மை…
1.இந்த
உடல் பிம்ப ஜீவனுக்கு அளிக்கப்படும் உணவிலிருந்தும்
2.சுவாசத்தால்
எடுக்கும் எண்ணத்திலிருந்தும்… உணர்வின் தன்மை கொண்டும்
3.வளர்ச்சி
பெறும் அணுக்களின் காந்த ஈர்ப்பு நிலைக்கொப்ப இந்த ஆத்மா அது வளர்கின்றது.
எண்ணத்தால்
எடுக்கும் ஞான வளர்ச்சியின் வாழ்க்கை நெறி முறைச் செயல் உணர்வுகளில்… “எண்ண
ஈர்ப்பை” நாம் செலுத்தும் உணர்வின் வலு அணுக்களைத்தான் இந்தப் பிம்பக் கூடு
வளர்த்து “அந்த வளர்ப்பின் வலுவைத்தான்…” இந்த ஆத்மா பெறுகின்றது.
1.செடியின்
ஆரம்ப வித்துத் தன்மை வளர வளர அதனின் பலன் பலவாக முற்றித் தருவதைப் போல
2.எண்ண
ஈர்ப்பால் நாம் எடுக்கும் வலுத் தன்மையை இந்த ஆத்ம உயிரும் எடுத்துக் கொள்கின்றது.
இந்த
ஆத்ம உயிரின் வலுத் தன்மையானது உணர்வின் ஈர்ப்புச் செயல் நிலைக்கொப்ப எல்லாம் வலு
ஏறுகின்றது. நாம் சொல்லக்கூடிய ஜெப முறையாலும் தியான முறையாலும் மட்டும் வலு
ஏறுவது என்பதல்ல.
இவ்வாத்ம
உயிரின் வலு இவ்வுணர்வின் எண்ண ஈர்ப்பின் செயல் வலுவை எதன் வழியில் செலுத்தி வீரிய
குணம் பெற்றிருந்தாலும் அதன் குண நிலைக்கொப்பவே வளரும்.
ஆக… தீய
வழிகளில் செல்லும் ஆவேச அலை ஈர்ப்பில் உள்ளவர்களின் உயிராத்மாவின் வலுத் தன்மையும்…
இதன் ஈர்ப்புப் பிடியில் வலுவாகிச் செயல் கொள்கின்றது.
அதே
போல இந்த உணர்வின் ஈர்ப்பு வீரத்தின் செயலைச் சாந்த குண ஞான வழிக்குச்
செலுத்தினாலும்… அசுர குண வஞ்சனையில் இவ்வீரத்தைச் செலுத்தினாலும்… இவ்வலை ஈர்ப்பு
காந்த சக்தியின் வலுத் தன்மையை இவ்வுயிராத்மா எப்படி வலுவாக்கிக் கொள்கின்றதோ
அதைப் போன்ற அசுர குண ஈர்ப்பு நிலைக்கும் வலு கூடுகின்றது.
இதை உணர்ந்து..
1.இந்த
மனித உடலில் நாம் வாழும் காலத்தில்
2.நம்
ஆத்ம உயிருக்குச் சேமிக்க வேண்டிய உயர் ஞான சக்தியை எடுத்து விளையச் செய்து
3.அந்த
முற்றலாக நாம் ஒளி சரீரத்தைப் பலனாக எடுக்க வேண்டும்.