விவேகானந்தரின் தாய் கருவிலே அவர் சிசுவாக வளரப்படும் காலத்தில் உலகம்
முழுமைக்குமே அரசர்களால் அன்று அராஜகங்கள் ஏற்படும் நிலை இருந்து வந்தது.
அதை எல்லாம் கண்ணுற்றுப் பார்க்கும் விவேகானந்தரின் தாய்
1.கடவுள் இருக்கின்றானா.. இல்லையா..? என்றும்
2.அமைதி கொண்டு வாழ்வோரையும் இரக்கமற்றுக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இந்த
நிலையில்
3.கடவுள் என்று கூறும் அப்படி வணங்கும் “அந்தக் கடவுள்” எங்கே இருக்கின்றான்…?
4.அந்தத் தெய்வ சக்திகள் எல்லாம் எங்கே போய்விட்டது..? என்ற வினாக்களை எழுப்பி
5.உண்மையின் நிலைகள் கொண்டு அங்கே பரிதவிக்கும் உணர்வுகளிலிருந்து
6.”மக்கள் எல்லாம் மீள வேண்டும்…!” என்று அந்தத் தாய் எண்ணுகின்றது.
பல காவியப் படைப்புகளையும் இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் அன்று
விவேகானந்தருடைய தாய் அதை எல்லாம் உற்றுப் படிக்கின்றது.
அன்று அரசர்களால் நாட்டிலே பேரழிவு வரும் பொழுது.. பல மத இனங்கள் போர்
செய்யும் நிலையில் இரக்கமற்றுக் கொன்று போர் செய்து கொண்டிருக்கும் பொழுது.. நாம்
வணங்கும் தெய்வங்கள் எங்கே போய்விட்டது…? என்ற உணர்வின் ஒலியைக் கூட்டி “அதன்
உண்மையின் உணர்வுகலைப் பெறவேண்டும்…” என்று ஏங்கிக் கொண்டிருந்தது அந்தத் தாய்.
தாய் இவ்வாறு எண்ணிய உணர்வுகள் எல்லாம் கருவிலே இருக்கக்கூடிய அன்று வளர்ந்த
விவேகானந்தருக்குப் பாய்கின்றது.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியனுக்கு எப்படிப் பல விஷத் தன்மைகளை
வென்றிடும் உணர்வுகள் தாய் கருவிலே கிடைத்ததோ… அதை வைத்து அண்டத்தையும்
அளந்தறியும் உணர்வின் தன்மையை அகஸ்தியன் பெற்றானோ…! இதைப் போல தாய் கருவிலே ஒரு
சந்தர்ப்பம் விவேகானந்தருக்குக் கிடைக்கின்றது.
அரசர்களால் ஏற்படும் அராஜகங்களும் மக்கள் ஒவ்வொருக்குள்ளும் மொழி பேதம் இன
பேதம் மத பேதங்கள் கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொன்று கொண்டிருக்கும் இந்த
வேளையில்
1.அதிலிருந்து கடவுள் எப்படி இயங்குகின்றார்..?
2.அனைவரும் கடவுளைத்தான் நேசிக்கின்றார்கள்… கடவுளை நேசிக்கும் பொழுது இந்தத்
தவறுகள் ஏன் ஏற்படுகின்றது..?
3.ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கும் நிலைகள் அவர்கள் வணங்கும் கடவுள் ஏன் இதை
அனுமதிக்கின்றான்…?
4.ஒருவனைக் கொல்ல அவன் வணங்கும் அந்தக் கடவுள் அனுமதிக்கின்றானா..? என்று
5.இந்த வினாக்களை எல்லாம் (விவேகானந்தர்) கருவிலே வளரப்படும் பொழுது அந்தத்
தாய் எண்ணி ஏங்குகிறது.
அது எங்கிய உணர்வுகள் தாய் கருவிலிருக்கும் சிசுவான விவேகானந்தருக்கும் அது
படுகின்றது. இவ்வாறு கருவிலே பெற்ற வீரிய உணர்வுகள் கொண்டு அவர் பிறந்த பின் “தாய்
எண்ணிய அதே உணர்வைப் பெற்று…” கடவுளின் தன்மையை அவர் அறிய விரும்புகின்றார்.
கல்வியில் இந்த அறிவின் தன்மை கொண்டு வாதிக்கும் வக்கீலாக அவர் தேர்வு
பெறுகின்றார். கல்வியில் தேர்வு பெற்றாலும் கடவுள் என்ற நிலைகள் தேர்ந்தெடுக்கக்
கடவுளை அறியத் தன் ஞானத்தைச் செலுத்துகின்றார்.
1.கடவுள் எப்படி இருக்கின்றான்…?
2.அவன் எங்கே இருக்கின்றான்..?
3.எவ்வாறு இயக்குகின்றான்…? என்ற நிலையை வினாக்கள் போட்டு
4.அதற்கு விடைகள் கிடைக்காத் தவித்துக் கொண்டிருந்தார்.
இராமகிருஷ்ணரைச் சந்தித்த பின் தான் அவருக்குத் தக்க விடைகள் கிடைக்கின்றது.
கடவுளைக் காண முடியாது… கடவுளை உணரத் தான் முடியும்..! என்ற உண்மைகளை அங்கே உணர்கின்றார்.
எல்லா உயிரையும் கடவுளாக மதிக்கும் பண்புகளும் அவருக்குள் வளரத் தொடங்கியது.