ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 8, 2020

நர மாமிசத்தை உணவாக உட்கொள்ளும் அகோரிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்


வட இந்தியாவில் ஏராளமான அகோரிகளைப் பார்க்கலாம். சுடுகாட்டில் வேகும் பிணத்தை அவர்கள் கைப்பற்றி அதை உணவாக உட்கொள்வார்கள்.

அதாவது அவர்கள் அபப்டி உட்கொள்வதன் மூலம் அந்த ஆண்டவனுக்கு இந்தத் தசையை அனுப்பி அவனுக்கு அர்ப்பணிப்பதாகச் சொல்வார்கள்.

பிணங்களை இவன் உணவாக உட்கொண்டு அதை ஆண்டவனுக்கு அர்ப்பணிப்பதால் ஆண்டவன் இரக்கப்பட்டுத் தனக்குள் செயல்படுகின்றான் என்று இப்படிச் செய்கிறார்கள்.

இத்தகைய தீய செயலே உருவான பின் அகோர உணர்வுகள் அவனுக்குள் வளர்ந்த பின் யாரிடமாவது வந்து நின்றால் பணம் கேட்டால் கொடுக்க வேண்டும்.

அதாவது அகோரிகள் வீடு வந்து கேட்டால் பணத்தைக் கொடுக்க வேண்டும். அப்படிப் பணம் கொடுக்கவில்லை என்றால் சுட்டெரிக்கும் பார்வையைக் காட்டுவான்.

அவன் இப்படிப் பார்க்கிறானே… நம் குடும்பம் கெட்டுவிடுமோ… நமக்கு ஏதாவது ஆகிவிடுமோ…! என்று பயந்து அந்த அகோரி விரும்பிய பொருளைக் கொடுத்துவிடுவார்கள்.

ஆண்டவனை நான் நேசிக்கின்றேன்… ஆண்டவன் அருளை எல்லோருக்கும் பெறச் செய்ய அவனை நான் தியானிக்கின்றேன். அதற்காக வேண்டி நீங்கள் எனக்குப் பொருளைக் கொடுக்க வேண்டும் என்பார்கள் அந்த அகோரிகள்…!

ஆகவே அவர்கள் பணம் கேட்டால் கொடுத்தே தீர வேண்டும். பெரும் பெரும் செல்வந்தர்களும் அவன் முன்னாடி வந்தாலே பணத்தைக் கொடுத்து விடுவார்கள். கோடிக்கணக்கில் பணத்தைக் வாங்கிச் சென்று விடுவான்.

ஆனால் அவர்கள் பிணத்தைத் தின்பவர்கள் தான்…!

இதைப் போன்ற அகோரத் தன்மையான செயல்களை ஆரம்பத்தில்  நான் (ஞானகுரு) வெளியிலே சொல்லும் பொழுது (நாற்பது வருடம் முன்) யாரும் நம்பவில்லை. உலகில் இப்படி நடக்கிறது.. மறைமுகமாக நடந்து கொண்டிருகின்றது என்று தான் சொன்னேன்.

பின் பத்திரிக்கையில் வெளி வந்த பின் தான் ஓகோ…! இப்படியும் இருக்கின்றதா…? என்று அதற்குப் பின்னாடி நம்புகிறார்கள்.

ஏனென்றால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டிய வழிகளில் பல பல உண்மைகளை அப்பொழுது வெளிப்படுத்திக் காட்டினோம். அதையே குருநாதர் என்னைப் பரிசோதிக்கும் விதமாக கங்கையில் மையத்தில் உள்ள மணல் திட்டுக்குப் போகச் சொன்னார்.

அங்கே சில காலங்களில் அந்த அகோரிகள் வருவார்கள். “நீ தவத்திற்காகப் போனால்.. உன்னை அறிந்து கொன்று புசிக்க வருவார்கள்…!” என்று இப்படிச் சொல்லி அங்கே போகச் சொன்னார் குருநாதர்.

குருநாதர் சொன்ன முறைப்படி அங்கே தியானமிருக்கப்படும் பொழுது பல அகோரிகள் வருகின்றனர். உடல்களில் கம்பிகளால் வளையம் இடப்பட்டு பாடல்களைப் பாடிக் கொண்டு வருகின்றனர்.

“ஓ.. ஓ… ஓ.. ஹோ… ஹோ…! என்ற சுருதிகளை வைத்துப் பாடுகின்றனர். கைகளில் கத்தியையும் வைத்துக் கொண்டு என்னைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடுகின்றார்கள்.

அந்த நேரத்தில் குருநாதர் கொடுத்த அலைகளின் துணை கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம். இவர்கள் அந்த ஒலிகளை எழுப்ப… எழுப்ப… “ஓங்காரக் காளி…!” என்ற நிலையில் அவர்களுக்கு முன் ரூபமாகக் காட்சி தெரிந்தது.

அதைப் பார்த்த பின் மாதாஜி…! மாப் கரோஜி..! என்று அந்தத் தாளச் சப்தங்களைப் போட்டு அப்படியே பின்வாங்கினார்கள்.

அவன் (அகோரி) காளியைப் பார்த்திருக்க மாட்டான்… என்றார் குருநாதர். அந்த உணர்வுகளைக் கண்ட பின் நடுக்கமாகி என்னை விட்டு ஓடிவிட்டார்கள்.

முதலில் நான் இங்கே மணல் திட்டிற்குப் போவதற்கு முன் நாதுராம் என்ற அங்கே இருக்கும் காவாலாளி.. நீங்கள் அங்கே சென்றால் உங்களைக் கொன்று தின்று விடுவார்கள்…! என்று ஏற்கனவே சொல்லியிருந்தான்.  

இல்லை… இதைப் பரிசோதிக்கத்தான் என் குரு அனுப்பினார்…! என்று அவனிடம் சொல்லி விட்டுச் சென்றேன். குரு வழியில் செல்லப்படும் பொழுது தான் அகோரிகளைப் பற்றிய உண்மைகளையும் அறியக்கூடிய தன்மை வந்தது.

குருநாதர் அவர் ரூபமாகச் (காளி) சில இதுகளைக் காட்டி என்னை விடுவித்தார். நடந்த நிகழ்ச்சி இது..!