ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 28, 2020

செய்யும் தொழிலைத் தெய்வமாக எப்படி மதித்து நடப்பது…? என்று தெரிந்து கொள்ளுங்கள்


உங்கள் வியாபாரம் சீராக வேண்டும் என்றால் காலை துருவ தியானம் முடிந்த பின்
1.உங்கள் வியாபாரப் பொருள்கள் மீது எண்ணத்தைச் செலுத்துங்கள்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி இந்தப் பொருள்கள் முழுவதும் படர வேண்டும்
3.இந்தப் பொருள்களைப் பயன்படுத்துவோர் குடும்பங்கள் நலம் பெறவேண்டும்
4.அவர்கள் உடல்கள் நலம் பெறவேண்டும் என்ற இந்த உணர்வுகளைச் செலுத்துங்கள்.
5.இந்த நினைவாற்றல் நீங்கள் கையில் எடுக்கும் பொழுது இந்த உணர்வுகள் பதிவாகும்.
6.அதை வாங்கிச் செல்வோருக்கும் அந்தப் பொருள் உயர்ந்ததைக் காட்டும்.
7.உணவுப் பொருளாக இருந்தால் சுவையாக இருக்கும்… அவர்கள் உடலும் மனமும் நலமாகும்.

அதன் வழி கொண்டே மீண்டும் நம்மிடம் வியாபாரம் செய்து பொருள்களை வாங்கும் நிலை வரும். அதே சமயத்தில் நமக்கு வியாபாரமும் பெருகும். அவர்கள் உடலும் நலமாகின்றது.

உதாரணமாக நீங்கள் ஒரு ஜவுளித் தொழில் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அதை அடுத்தவர்களுக்குக் கொடுக்கப்படும் பொழுது “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி” இந்த ஆடைகள் முழுவதும் படர வேண்டும்… இதைப் பயன்படுத்துவோர் உடல் நலம் பெறவேண்டும்… அவர்கள் தொழில் வளம் பெறவேண்டும்…! என்று எண்ணி விட்டு மொத்த வியாபாரத்திற்குச் சரக்கை அனுப்பிப் பாருங்கள்.

அதை எதற்குள் ஒளித்து வைத்திருந்தாலும்… துணிகளைப் பிரட்டிப் பார்க்கும் பொழுது… “நீங்கள் ஜெபித்த அந்தத் துணியை” நிச்சயம் அவர்கள் வாங்குவார்கள்.

அங்கே வியாபாரம் அதிகமாகும். அவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். நமது வியாபாரத்தைப் பற்றியும் கேட்பார்கள்.

இப்படிப் பல பரீட்சார்ந்தமான நிலைகளில் நாம் இதன் வழி செல்வோர் வியாபாரத்திற்குச் செல்லும் பொழுது வியாபாரம் பெருகி வருவதையும் பார்க்கலாம்.

இது எல்லாம் அனுபவத்தில் தெரிந்து கொண்டது.

ஆகவே இந்தக் காலை துருவ தியானத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சீராக வளர்த்துக் கொண்டே வரவேண்டும்.

ஆனால் இந்த வாழ்க்கையில் “எனக்கு இப்படிச் செய்தான்… அப்படிச் செய்தான்… பாக்கிப் பணம் வரவில்லை… என் உடலுக்கு ஒன்றுமே முடியவில்லை…” என்ற இதைப் போன்ற உணர்வுகள் பற்றாகி விட்டால்
1.வேதனை என்ற நோயாகி - இந்தப் பற்றின் தன்மை கொண்டு
2.மீண்டும் நாம் இழி நிலைச் சரீரங்களைத் தான் பெறும் தன்மை வருகின்றது.

இதைப் பற்றிடாது நாம் பாதுகாக்க… நாம் காலை துருவ தியானத்தில் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெறவேண்டும் என்று இதைப் போல் நாம் தொடர்ந்து செய்வோம் என்றால்
1.அருள் மகரிஷிகளின் பற்று நமக்குள் வளர்கின்றது.
2.நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் பற்றற்றதாக மாற்றுகின்றது.

அதே சமயத்தில் இதைச் செய்வதனால் நமக்குள் அந்த அரும் பெரும் சக்தியை வளர்க்க முடிகின்றது.

செய்யும் தொழில் தெய்வமாகின்றது..!