1.உண்மையின் உணர்வைப் பெறவேண்டும் என்றும்
2.தெய்வீகப் பண்பையும் கடவுளை அடைய வேண்டும் என்றும்
3.அவனிடமே இணைந்து வாழ வேண்டும் என்று தான்
4.எல்லா மதங்களும் சட்டங்களை இயற்றிச் செயல்படுகின்றது.
அதன் வழி கடைப்பிடித்துக் கொண்டு வந்தாலும் “கடவுள்…” எங்கே… எப்படி
இருக்கின்றான்…? என்று யாருக்கும் தெரியாது.
மதங்கள் காட்டிய உணர்வை வளர்க்கப்படும் பொழுது அதே போல் அந்த மதத்தின்
சார்புடையவர்களாகப்படும் பொழுது மற்ற மதத்தினைக் கொன்று குவிக்கும் நிலைதான் இன்று
வருகின்றது.
ஒரு மதத்தின் தன்மை வளர்ச்சி அடையப்படும் பொழுது அதை வழி நடத்திச் செல்வோர்
நிலைகளில் மக்கள் இருவரோ நான்கோ ஆகி விட்டால் அதைப் பங்கிடப்படும் பொழுது அதற்குள்
“தன் இனம்…” என்ற நிலைகள் இனப் போர்களே துவங்குகிறது.
அந்த அரச சாம்ராஜ்யம் அழிந்த பின் அடுத்து அது ஒரு இனமாகத் தனியாகப்
பிரிக்கப்பட்டுத் தனது சாம்ராஜ்யத்தைத் தொடர்கின்றது.
மற்றவர்களைக் கொன்று குவித்துத் தனக்குக் கீழ் கொண்டு வந்து
1.“தான் ஆட்சி புரியும்…!” அந்த ஆசையின் தொடர் கொண்டே செயல்படுகின்றனர்.
2.ஞானிகள் கொடுத்த உணர்வுகளை எல்லாம் மறையச் செய்துவிட்டனர்.
இராமாயணம் மகாபாரதத்தைப் போன்ற காவியங்களில் ஞானிகளால் காட்டப்பட்ட உணர்வுகள்
1.ஒன்று ஒன்றுடன் இணைத்தால் ஒன்றின் செயலாக்கங்கள் எப்படி உருவாகின்றது…?
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே எப்படிக் கலக்கின்றது…. உடலில் அணுவாக
எப்படி மாறுகின்றது…?
3.தாவர இனங்களின் வித்துக்களில் மற்ற வித்துக்களின் உணர்வைக் கலக்கப்படும்
பொழுது தாவரங்கள் எப்படி உருமாறுகின்றது…?
4.அதிலே சுவைகளை மாற்றுகின்றது…? வித்துக்களை எப்படி மாற்றுகின்றது என்று
உணர்த்தியுள்ளார்கள்.
அதை எல்லாம் அரசக் காலங்களில் மனித உடலில் உருவாக்கிய இந்த மந்திர ஒலி கொண்டு
தான் அறிந்து இந்த உணர்வின் தன்மை கொண்டு மாற்றியமைக்கும் தன்மையாக வந்து விட்டது.
இப்படி வளர்ச்சி அடைந்து வந்த இந்த உலகம் தான் ஆசையின் உணர்வாக வளர்த்த
உணர்வுகள் இங்கே அதிகமாக வளர்ந்து அரசனுக்குக் கீழ் வந்த மக்களும்… “தானும் வளர
வேண்டும்…” என்ற ஏக்கம் கொண்டு வந்து விட்டனர்.
1.தான் வாழ தன் அருகிலே உள்ளவர்களை வீழ்த்தினால் தான் சரிப்படும் என்றும்
2.ஒருவர் வியாபாரம் செய்தால் ஆரம்பித்தால் அந்த வியாபாரத்தைக் கெடுத்துவிட
வேண்டும் என்றும்
3.அவனை வீழ்த்தினால் தான் என் வியாபாரம் பெருகும் என்றும்
4.வியாபார முறையிலே போர் முறை வந்தது.
அதிலே நெருக்கடி வளர வளர இன்று எடுத்துக் கொண்டால் தள்ளுபடி (DISCOUNT) என்ற
பெயரில் கணக்கு வழக்கு இல்லாமல் கொடுத்து மக்களை ஏமாற்றிடும் நிலை வந்து விட்டது.
தள்ளுபடி என்ற பெயரில் மக்களைக் கவர்ந்து தன் வியாபாரத்தைப் பெருக்குவதும்
மற்ற வியாபாரத்தை வீழ்த்துவதும் உண்மைகளை உணரவிடாதபடி “வியாபாரமே இன்று தலைகீழாக
மாறிவிட்டது…!”
ஆசையின் உணர்வின் தன்மை வளர்ந்து கொண்ட பின் அந்த ஆசைகளாலேயே தான் நாம் இன்று
வாழ்கின்றோம்.. வளர்கின்றோம்.
1.அங்கே போனோம்.. போனதற்கு 50% தள்ளுபடி கிடைத்தது
2.தள்ளுபடியில் வாங்கிய சேலை கிழிந்தால் பரவாயில்லை… போனால் போகிறது போ..
3.அதற்கு இனாமாக இன்னொரு சேலை கொடுத்தார்கள் அல்லவா..! என்று
4.இப்படித்தான் பெண்கள் அங்கே மடிகின்றார்கள்.
ஆக மொத்தம் நாம் ஏமாற்றப்பட்டோம் ஏமாற்றப்படுகின்றோம் என்ற நிலை வருவதே இல்லை.
தேர்ந்தெடுக்கப்படும் பொழுது உண்மையின் நிலைகள் அந்தச் சரக்கின் தன்மையும்
தெரிகின்றது.
1.சரக்கின் தன்மையைத் தெரிந்தே… அவன் குறைவாகக் கொடுக்கின்றான்…! என்றால்
2.எதன் அடிப்படையில் அப்படி நல்ல சரக்கைக் கொடுக்க முடியும்..! என்று
இல்லாதபடி
3.நாம் ஏமாற்றமே அடைகின்றோம்…! இன்றைய மனிதனின் வாழ்க்கையில்..!
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே நலம்…!