மனிதன் எடுக்கும் குண நிலையில்…. அவன் எண்ண உணர்வில் சமைக்கப்பட்ட ஆவியின் வலு
தான்
1.ஆத்மாவின் உராய்வுக் கவசமாக உராய்ந்து உராய்ந்து
2.அதன் வலுத் தன்மையைக் காந்த ஈர்ப்பு வளர்ப்பாக
3.இந்தப் பிம்ப உடலின் அச்சான எலும்புகளின் வளர்ப்பின் உராய்வு வலுக்கூடி
ஆத்மாவின் வலுவும் வளருகின்றது.
இந்தப் பிம்ப உடலின் நிலை கொண்டு பல செயல்களைச் செயல்படுத்த முடியும். பல கோடி
ரூபத்தில் வளர்ப்பின் வளர்ப்பாக… பல கோடி மண்டலங்களை வளர்க்கக்கூடிய… “வளர்
நிலைக்குகந்த வலுவான வித்துத்தான் இந்தப் பிம்ப உடல்….!”
சப்தரிஷிகளின் செயலை வளர்க்கவும் இவ்வொளி நாதச் செயல் கொண்ட… “ஜீவத் துடிப்பு
உள்ள எண்ணத்தின் சரீரத்தினால் தான்” முடிகின்றது.
1.பல கோடிச் சக்திகளை உருவாக்கும் சப்தரிஷிகளே…
2.இப்பிம்ப உடலின் தொடர்பு கொண்டு தன் வலுவை வளர்க்கின்றார்கள்.
அதனின் உண்மைப் பொருள் தான் நாம் இன்றளவு காணும் இயேசு கிறிஸ்து ஐயப்பன்
முகமது நபி ஆதிசங்கரர் போன்ற தெய்வீக வளர் நிலையின் உண்மைத் தன்மை கொண்டவர்கள்.
ஆகவே…
1.ஜீவ சக்தி கொண்ட துடிப்பு ஆத்மாவினால் தான்
2.இச்சரீரம் சமைக்கும் உணர்வின் வலுவைக் கொண்டு
3.பல வலுவான வளர்ப்பின் வளர்ப்பாக இச்சரீரக் கூட்டின் தொடருடன் வளர்க்கலாம்
என்ற
4.இச்சரீர பிம்பத்தின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்திடல் வேண்டும்.
ஜீவன் பிரிந்த ஆத்ம உயிருக்குத் துடிப்பு நிலையும் நாத ஒலி வெளிப்படுத்தும்
ஜீவத் தொடர்பும் இல்லாததனால் அதன் எண்ணத்தின் ஈர்ப்பைத் தன் எண்ண அலைக்குகந்த ஆத்ம
உடலில் ஈர்க்கப்பட்டு தன் ஆத்மாவின் உயிரையே தன் குண நிலைக்கொத்த உணர்வு நிலை
கொண்ட ஜீவ சரீர ஈர்ப்பிற்கு (தாய் உடலில்) வந்து பிறப்பெடுக்கும் ஆத்மாவும் உண்டு.
ஆனால் இப்படி
1.இயல்பாகப் பிறப்பிற்கு வரும் ஆத்மாவிற்கு மேல்
2.வலுவான எண்ண வேட்கை கொண்ட ஆத்ம உயிர் பிற உடலுடன் உள்ள ஆத்மாவின் மேல் படரும்
பொழுது
3.அதனின் வலுவுக்கு மேல் வலுவான ஆத்மாக இது செயல்பட்டு
4.அதனால் சிலருக்குப் புத்தி பேதலித்த நிலையும்
5.சிலருக்குக் கொடூர எண்ணங்களின் வெறி நிலை கொண்ட குண நிலையும் அமைகின்றது.
இந்தக் குண நலத்தின் எண்ண மாற்ற உணர்வினால் சில அலைத் தொடர்புகளின் ஆத்ம
உணர்வின் ஈர்ப்பினால் மனிதன் தன் நிலையையே மறக்கின்றான்.
பேய் பிடித்து விட்டது… பிசாசு பிடித்தது…! என்றெல்லாம் இதைத்தான் சொல்வது…!