ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2020

நமக்கு வர வேண்டிய பாக்கி பணம் வரவில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?


துருவ தியானம் முடிந்த பின்… யார் யார் பணம் நமக்குக் கொடுக்கவில்லையோ அவர்களை எண்ணி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும்
2.அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.அவர்கள் தொழில்கள் வளம் பெரவேண்டும்
4.அவர்களுக்கு நல்ல வருமானம் வர வேண்டும்
5.எனக்குப் பணம் கொடுக்க வேண்டும்…! என்ற எண்ணங்கள் “அவர்களுக்குள் வரவேண்டும்…” என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால் இந்த உணர்வுகள் அவர்களுக்குள் பாய்ந்து அவருடைய தொழிலும் சீராகும். அதே சமயத்தில் நாம் எண்ணிய அந்தப் பணம் திரும்ப வரும்.

இப்பொழுது இருக்கக்கூடிய நிலைகளில் நாம் தொழில் செய்யும் பொழுது நம்மிடம் வாங்கிச் சென்றவர்…
1.ஒரு போக்கிரி (இன்னொரு வியாபாரி) என்ற நிலையிருந்தால் “கொடுக்கவில்லை என்றால் நாளைக்குப் பார்க்கிறேன்…!” என்று மிரட்டும் பொழுது
2.அந்தப் போக்கிரி வந்து கேட்பான் என்று அவர் கையில் பணத்தைக் கொடுத்துவிடுவார்.
3.நாம் நல்ல முறையில் வியாபாரம் செய்வோம்… நமக்குப் பணத்தைக் கொடுக்க மாட்டார்.

நாம் எண்ணும் பொழுதெல்லாம்… இப்படி நம்மை ஏமாற்றுகின்றான் அவனுக்கு மட்டும் பணத்தைக் கொடுக்கின்றான்…! என்ற உணர்வு தான் நமக்குத் தோன்றும். அப்பொழுது அதைக் கண்டு நாம் வேதனைப்படத் தொடங்குவோம்.

அவர்களை எண்ணும் பொழுதெல்லாம் நாம் இந்த வேதனையின் தன்மையை எடுக்கும் பொழுது அவர்கள் தொழிலும் நசுங்கிவிடும். நமக்குள் நோயும் வந்துவிடும்… நம் வியாபாரமும் நசிந்துவிடும்.

ஆக மொத்தம்…
1.வேதனைப்பட்டால் நமக்குள் நோயாகின்றது… நம் வியாபாரமும் கெடுகின்றது.
2.அதே போல் நம்மை நினைக்கும் பொழுதெல்லாம் அவர் வேதனைப்படுவார்… அவருக்கும் நோயாகின்றது.

ஆனால் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். வெறுப்பின் உணர்வு வரும் பொழுது அவர்களுக்கு வருமானம் வருவதைத் தடைப்படுத்தும்.

அதாவது… கொடுப்பதைத் தடைப்படுத்தும் நிலையாக நம் உணர்வே உருவாகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

அதைத் தடைப்படுத்த வேண்டும் என்றால்.. வியாபார நிலைகளில் பநமக்குப் பாக்கி வர வேண்டும் என்றால் அதிகாலை துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து… அவர்கள் வியாபாரம் பெருக வேண்டும்… அவர்கள் குடுங்கங்களும் நலம் பெறவேண்டும்… நமக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் வர வேண்டும்.. என்று தியானித்துப் பழக வேண்டும்.

காலை எழுந்த பின் இவ்வாறு நாம் அவசியம் எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால்..
1.பணம் கொடுக்கவில்லை என்ற நிலையில் அவர்களின் உணர்வுகள் நமக்குள் பதிவானது வேதனை.
2.ஆனால் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அங்கே பெறவேண்டும் என்று ஏங்கும் பொழுது
3.நமக்குள் அவர் உணர்வு பதிவானதைத் தடைப்படுத்த முடிகின்றது.

நமக்குள் வெறுப்பின் தன்மை வராதபடி… அந்த வெறுப்பு நோயாக வராதபடி… யார் மேல் வெறுப்பு வந்ததோ அவருக்குள்ளும் பாய்ந்து… அவர்கள் தொழிலையும் சீர்கெடச் செய்யும் நிலைகளிலிருந்து… நாம் தடைப்படுத்த முடியும்.

ஆகவே பிறருடைய தீமைகள் நமக்குள் வராதபடி நட்பின் தன்மையை வளர்ப்பதற்கும் பகைமையற்ற உணர்வை வளர்ப்பதற்கும் தான் துருவ தியான நேரங்களில் இப்படி எண்ணச் சொல்கிறோம்.

சூரியன் தன்னுடைய சுழற்சி வேகத்தால் பிற மண்டலங்களிலிருந்து கவரும் நட்சத்திரங்கள் கவர்வதைத் தன் அருகிலே வரும் விஷத் தன்மையைத் தன் சக்தி கொண்டு நீக்குகிறது.

அது போன்று மனிதர்களாக இருக்கும் நாம்…
1.மனிதனின் வாழ்க்கையில் உயர்ந்த நிலைகள் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் உணர்வுகளை நுகர்ந்தால்
2.நாம் மற்றவர்களை எண்ணும் பொழுது அவருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதுடன் இது இணைந்து
3.தீமை விளைவிக்காதபடி நல்ல சக்தியாக நமக்குள் வளர்கின்றது.
4.அவர்கள் வருமானமும் பெருகி நமக்கு வர வேண்டிய பணமும் வந்து சேரும்.

செய்து பாருங்கள்…!