ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 19, 2020

தியானத்தின் மூலம் பெறும் வலுவால் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும்


நாம் மக்கள் மத்தியில் வளரப்படும் பொழுது அவர்களுடைய கஷ்ட நஷ்டங்களைக் கேட்கும் சந்தர்ப்பம் இருந்தாலும் அதை நீங்கள் கேட்காமல் இருக்க முடியாது.  

என் வீட்டில் ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது என்று ஒருவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். “அதெல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள்…! நீங்கள் போங்கள்…!” என்று சொன்னால் என்ன ஆகும்…?

என்ன… பெரிய இவர்…? இந்த மாதிரிப் பேசுகிறார்…! என்று சொல்லிப் பகைமையை உருவாக்கி எதிரியின் தன்மையைத் தான் உருவாக்க முடியும்.

அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால் வெறுப்பான உணர்வை நமக்குள் வளர்த்து நாம் கற்றுணர்ந்த நல்ல உணர்வுகளும் வளராது தடைப்படுத்தப்படும்.

ஆகவே ஒருவர் சொல்வதை நீங்கள் அணுகிக் கேளுங்கள். கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் வளராதபடி “ஈஸ்வரா…!” என்று நினைவினை உயிருடன் ஒன்றுங்கள்.

அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் இரத்தநாளங்களில் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா பெறவேண்டும்…! என்று ஏங்கிப் பெறுங்கள்.. அந்த அருள் உணர்வைச் சுவாசியுங்கள்.

அந்தத் தீமையான உணர்வை நுகர்ந்தாலும்
1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இந்தக் கருவுக்குள் இணைந்து அடுத்த நிமிடம் வட்டமிடும்.
2,அப்படி வட்டங்கள் இடும் பொழுது இந்த அணுக்களின் தன்மைகள் இது கருவாக உருவான பின் உடலுக்குள் அதிகமாகின்றது.
3.இந்த வீரிய சக்தி உருவான பின் அதை அடக்கி அருள் ஒளி பெறும் அணுவின் தன்மையாக இது உருபெறுகின்றது.

அந்தக் கருவின் தன்மை அடைந்த பின் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் செலுத்தி உடலுக்குள் சுழல விடப்படும் பொழுது இந்த வீரிய சக்தியால் அடைப்பட்டு இதையே (அருள் உணர்வுகளையே) அது நுகர நேரும்.

அப்பொழுது அந்தத் தீமையான உணர்வுகளை நுகராது தடைப்படுத்திவிடும்.
1.வேதனை என்ற உணர்வு வராது
2.நமக்குள் அந்த உயர்ந்த ஞானியின் உணர்வுகளை அறிவுடன் தெளிவாக நடந்திடும் அணுக்கருவாக அது மாற்றிவிடும்.

பின் அணுவின் தன்மை அடைந்த பின் அதன் உணர்வை நுகர்ந்து தனக்குள் வேதனையை அகற்றும் உணர்வின் எண்ணங்கள் தான் வரும்.

இப்படி வலுவாக்கிக் கொண்டு… இந்த நோய் உங்களை விட்டுப் போய்விடும்…! என்ற வாக்கினை யாருக்காவது சொன்னால் அது அங்கே கருவாகி அந்த நோயை நீக்கிடும் அணுவாக மாறுகின்றது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறவேண்டும் என்று நாம் தியானித்துவிட்டு… இந்த உணர்வை அடைத்துவிட்டு… நோயுள்ளவரிடம்…
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நீ பெறுவாய்
2.உன் நோயின் தன்மை நீங்கும்
3.அந்த மகரிஷிகளை எண்ணி ஏங்கு
4.அந்த உணர்வின் தன்மை உனக்குள் பெற்றுக் கொள். - நோயிலிருந்து விடுபடுவாய்… என்ற உணர்வைச் சொல்லி
5.அவர் உணர்வின் நினைவை அந்த மகரிஷிகளின் பால் செலுத்தச் செய்யுங்கள்.

நீங்கள் ஊட்டிய உணர்வுகள் அங்கே கருவாகி அந்த உணர்வுகள் அவருக்குள் விளைந்தால் அதன் உணர்வைப் பெறும் தகுதியாக அதன் கருவாக உருவாக்கப்படும்.

அதன் நினைவாற்றல் அணுவாக மாறி அந்த உணர்வை நுகர்ந்தோர் உடலில் அது நல்வபழிப்படுத்தும் நிலையும்… துயரத்தையும் வலியையும் குறைக்கும் நிலையும்… அருள் ஒளியின் உணர்வைத் தன் உடலுக்குள் பரப்பும் சக்தியும் பெறுகின்றது.

இப்படி உங்கள் வாக்கும் அந்த நோயை நீக்கச் செய்யும்...!

அந்த அகஸ்தியமாமகரிஷி காட்டிய அருள் நெறிகளை நீங்கள் நுகர்ந்து அவரின் ஆற்றல்கள் உங்களுக்குள் பெருகி அதன் உணர்வின் தன்மை கொண்டு அவர் நினைவாக.. நோயுற்றோரை நீங்கள் நலம் பெறுவீர்கள்…! என்றும் அதற்கப்புறம் நீங்கள் உதவி செய்யும் நிலைகளில் நீங்கள் நலம் பெறுவீர்கள்… அருள் பெறுவீர்கள்… அருள் ஒளி பெறுவீர்கள்…! என்ற இந்த உணர்வைப் பாய்ச்சுங்கள்.

இந்த உணர்வுகள் அவருக்கும் கருவாகும். அவர்கள் நினைவு கொண்டால் அதை அடைகாக்கும் நிலை கொண்டு அதை வளர்த்துத் தனக்குள் வரும் தீமைகளை அகற்றும் வல்லமையை அவர்கள் பெறுகின்றார்கள்.

1.ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் அகஸ்தியராக மாறவேண்டும்.
2.அருள் ஒளிச் சுடராக துருவ மகரிஷியாக வேண்டும்.

துருவ மகரிஷி என்ற நிலையை உருவாக்கி விட்டால் ஒருவருக்கு நீங்கள் சொல்லி அவர் மகிழ்ச்சி பெற்றால் அவர்களை மீண்டும் எண்ணும் பொழுது… “மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் உங்களுக்குள் விளைகின்றது...”

இதைப் போன்று ஒவ்வொருவரையும் மகிழச் செய்யும் உணர்வுகள் வரும் பொழுது..
1.ஒவ்வொருவர் உடலில் உருவாகும் அந்த உணர்வின் தன்மை அங்கே விளைந்து
2.அந்த உணர்வின் தன்மை மணங்களாக வரும் பொழுது அதை நுகர்ந்தால்
3.உங்களுக்குள் அருள் சக்தியாக “ஒளிச் சுடராக” மாற்றும் தன்மை வருகின்றது.

உங்கள் அனுபவத்தில் இதைப் பார்க்கலாம்…!