ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 6, 2020

இராமகிருஷ்ண பரமகம்சர் செயல்படுத்திய ஆச்சரியப்படும் செயல்களை குருநாதர் காட்டினார்


இராமகிருஷ்ன பரமகம்சர் காளி கோவிலில் பூஜை செய்து வரும் வேளையில் அங்கே இரவிலே நடக்கும் சம்பவங்களை அறிய நேர்ந்த பின் தனக்குள் உண்மையையும் சத்தியத்தையும் எண்ணி ஏங்குகின்றார்.

ஏற்கனவே இந்த உண்மைகளை எல்லாம் உணர வேண்டும் என்று நல்லதுக்காக ஏக்கம் கொண்டு மடிந்தவனின் ஆன்மா அதே ஏக்கம் கொண்ட இவரின் உடலில் புகுகின்றது. அதன் பின் அவரை அறியாமலே சில செயல்களைச் செய்கின்றார்.

இராமாயணத்தைக் எடுத்துக் கொண்டால் குரங்கு எப்படித் தாவுகின்றதோ இதைப் போல் தன் எண்ணத்தின் தன்மை கொண்டு எப்படி இயக்குகிறது என்ற நிலைகளை உணர்த்திக் காட்டுவார்.

அதாவது குரங்கின் ரூபம் இட்டு
1.ஒரு உணர்வின் தன்மை கொண்டு எக்குணத்தைக் கொள்கின்றோமோ
2.அதன் வழி தான் அது நமக்குள் இயக்குகிறது என்பதைக் குரங்கைப் போன்று ஆட்டிக் காட்டுவார்.

மரத்தில் ஏற்றிப் பார்ப்பார்... ஆக…
1.நம் உணர்வின் தன்மை எதைப் பறிக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ
2.அதன் உணர்வின் தன் எண்ணத்தால் வரும் போது அதை அவ்வாறு ஏற்றிக் காட்டினார் இராமகிருஷ்ணர்.

இதைப் போல் இறந்த சரீரங்களைப் புதைத்திருந்தால் அங்கே அமர்வார். அதனின் எண்ணங்கள் எவ்வாறு…? என்ற நிலையை உணர்வார்.

இப்படித் தன்னை அறியாமலேயே தனக்குள் இயக்கும் இன்னொரு ஆன்மாவின் தன்மை கொண்டு… அங்கே… ஏங்கி எடுக்கும் பொழுது… தான் கண்ட உண்மை எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டே வந்தார்.

அவரை அறியாமலே “பல ஆச்சரியப்படும் செயல்களை…” இயக்கிக் காட்டினார்.

அதைக் கேள்விப்பட்ட பெரும் பெரும் மந்திரவாதிகளும் பிறரைக் கைவல்யப்படுத்தக்கூடிய சாமர்த்தியசாலிகளும் இங்கே தேடி வருகின்றனர்.
1.ஒரு பித்தன் போல் இருக்கின்றான்... இவனுக்கு எப்படி இந்தச் சக்திகள் வந்தது…?
2.உண்மைகளை உரைக்கின்றான்.... அவை அனைத்தும் நடக்கின்றது.
3.இவன் செயலாக்கங்கள் எல்லாம் தெளிவாகின்றது என்ற நிலைகளில் அவரை நாடி வருகின்றார்கள்.

இமய மலைச்சாரலில் ஒரு பெண்… அது மகா மந்திர சக்திவாய்ந்தது. மனிதனையே தன் மந்திர சக்தியால் மாய்க்க வல்லமை பெற்றது. மனிதனுக்குள் தன் உணர்வைப் பாய்ச்சப்பட்டு அவன் உடலில் இருக்கும் உண்மைகளை வெளிப்படுத்தச் செய்து அதை அறியக்கூடிய வல்லமை பெற்றது.

அந்தத் தாயும் ராமகிருஷ்ண பரமகம்சரை அணுகி அவரின் உண்மையை உணர்வதற்காக வருகின்றது. ஆனால் அவரால் இவரின் உண்மைகளை அறிய முடியவில்லை.

1.அவரின் அறியும் சக்தியை இவருக்குள் (ராமகிருஷ்ணர்) பெற்ற சக்தி அதைத் தடுக்கும் சக்தியாக வரப்படும் பொழுது
2.அறியும் வன்மை கொண்டு அந்தத் தாயிடம் மாறுகின்றது.
3.பின்.. “இப்படித்தான் இருக்க வேண்டும்…!” என்றும்
4.உண்மையின் நிலைகள் கொண்டு “இப்படித்தான் வாழ வேண்டும்…” என்றும் புத்தி கூறுவது போல உணர்வுகள் வந்த பின்
5.எந்த மந்திரத்தால் அறிய வேண்டும் என்று வந்த அந்த மந்திர சக்தி கொண்ட தாயும் மனம் மாறுகின்றார்.

இப்படி பல தீமைகளை விளைய வைக்கும் உணர்வுகள் கொண்டவர்களும்… அன்று இராமகிருஷ்ண பரமகம்சரைச் சந்தித்த பின்
1.அவரின் செயலைப் பார்க்கும் பொழுது… அவருக்குள் விளைந்த உணர்வை நுகர்ந்த பின்
2.மாற்றம் அடைந்தே அவர்கள் சென்றார்கள்.

இது எல்லாம் ஈஸ்வரபட்டர் எம்மைக் (ஞானகுரு) கல்கத்தாவிற்கு அழைத்துச் சென்று நேரடியாக காட்டிய நிலைகள்.