ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 7, 2020

இராமகிருஷ்ண பரமகம்சரிடம் கடவுளைப் பற்றி விவேகானந்தர் கேட்டது என்ன…?


விவேகானந்தர் வக்கீலுக்குப் படித்தாலும் அவர் மற்றவர்களின் குணங்களையும் செயல்களையும் அது எப்படியெல்லாம் அவர்களை இயக்குகிறது…? என்று அறியத் தொடங்கினார்.

1.ஒரு மனிதன் கொலை செய்துவிட்டு அதிலிருந்து அவன் மீள வேண்டும் என்பதற்காக வேண்டி
2.பணத்தைக் கொடுத்து வாதிடச் சொல்வதும்
3.தவறைச் செய்துவிட்டு பணத்தைக் கொண்டு அந்தத் தவறை மறைப்பதற்காக இவர்களை அணுகி வருவதையும்
4.வழக்கறிஞராக மாறிய பின் விவேகானந்தர் நேரடியாகக் காணுகின்றார்.

ஆனால் அவருடைய தாய்… “தெய்வமோ… கடவுளோ… எப்படி இருக்கின்றது…?” அந்த உண்மையின் உணர்வைக் கொண்டு உணர்த்திய உணர்வுகள் இவருக்குள் இயக்கப்பட்டு… தன் தொழிலில் வரக்கூடிய சமுதாயத்தையும் உணர்கின்றார்.

கொலை செய்ய வேண்டும் என்ற உணர்வுகள் மற்றவர்களுக்குத் தோன்றப்பட்டு… கொலையையும் செய்துவிட்டு.. கொலையிலிருந்து மீள்வதற்காக
1.பணத்தைக் கொடுத்து அவன் எப்படி மாற்றுகின்றான்..? என்ற நிலைகளையும்
2.அவன் எண்ணியதை அவன் உயிர் எப்படி இயக்குகின்றது..? என்ற நிலைகளையும் விவேகானந்தர் உணர்கின்றார்.

“ஒருவனைக் கொலை செய்ய வேண்டும்…!” என்று எண்ணும் போது அதே உயிர் அந்த உணர்வை ஊட்டிக் கொலை செய்யும் உணர்ச்சிகளைத் தூண்டி… ஆளை வைத்துக் கொல்லும் நிலை வருகின்றது.

அதே சமயம் “ஒருவன் வாழ வேண்டும்…!” என்று பல உயர்வினைக் காட்டி அதற்கென்ற உகந்த நிலைகளைச் செய்கின்றான் என்று சொல்லப்படும் பொழுது அந்த உணர்வுகள் இவனுக்குள் விளைந்து வாழ வைக்க வேண்டும்…! என்ற எண்ணங்களை ஊட்டி  வாழச் செய்கின்றது.

ஆகவே இப்படி எண்ணியதை எல்லாம் உருவாக்குவது யார்…? “உயிரே கடவுள்…” என்ற நிலையை உணர்கின்றார் விவேகானந்தர்.

1.எண்ணியதை உருவாக்கும் உயிர் ஒவ்வொரு உடலிலும் இருக்கும் பொழுது
2.அங்கே ஆட்சி புரியும் சக்தியே பெரும் சக்தி என்றும்
3.அவர்கள் எதை நுகர்கின்றனரோ அதையே இயக்குகிறது.

உதாரணமாக ஒருவர் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வை எண்ணினால்… அந்த உயிரே அங்கே அந்த நிலைகளைச் செய்கின்றது என்பதையும் உணர்கின்றார் விவேகானந்தர்.

இருந்தாலும் இதை எல்லாம் எப்பொழுது உணரத் தொடங்கினார்…? “நீ கடவுளை எங்கே பார்க்க வேண்டும்..?” என்ற இந்த உணர்வு விவேகானந்தருக்கு எப்பொழுது வருகின்றது…?

இராமகிருஷ்ண பரமகம்சரிடம் வருகின்றார்…!

1.கடவுள் எப்படி இருக்கின்றான்…?
2.நீ கடவுளைக் காட்டுகின்றாய்…! என்று சொல்கின்றார்கள்.
3.கடவுளை நீ பார்க்கின்றாயா…?
4.நானும் அந்தக் கடவுளை எனக்குள் பார்க்க வேண்டும் என்று
5.இப்படிப்பட்ட வினாக்களை இராமகிருஷ்ணரிடம் எழுப்புகின்றார் விவேகானந்தர்.

அப்பொழுது பரமகம்சர் விவேகானந்தரிடம் கூறுகின்றார்…!

கடவுளைக் காண முடியாது…!

1.நீ எண்ணும் உணர்வுகள்… உன் உள் நின்று… அதுவே கடவுளாக நின்று உணர்த்துகின்றது…
2.அதன் வழியே நீ செயல்படுகின்றாய்..! என்று இராமகிருஷ்ணர் தெளிவாக அவருக்கு உணர்த்துகின்றார்.