பல நிலைகளால் பூமியின்
நிலையே பூமியின் சுவாச நிலையே மாறு கொள்ளும் இத்தருவாயில் நம் உணர்வின் எண்ணத்தால்
ஆத்ம பலத்தைக் கூட்டிக் கொண்டால் இவ்வுலக மாற்றத்தில் மடியப் போகும் உயிரினங்களின்
வழித் தொடர் செல்லும் மிகவும் ஈன நிலையிலிருந்து மீள முடியும்.
1.இப்படி உயர் செயல்
குணமுள்ளது
2.இன்றைய மனித உடல்
உள்ளவர்களுக்கு (உடல் இல்லாதவர்கள் என்ன செய்வது…?)
தன் உணர்வின் எண்ணத்தால்
தான் எடுக்கும் ஜெபத்தால் தான் மட்டும் சக்தி பெறுவதோடு அல்லாமல் தன் உணர்வின்
எண்ணத்தைப் பாய்ச்சி தான் வணங்கும் தன் முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களையும்
உயர் நிலைப்படுத்திட முடியும்.
எவ்வுடலில் இருந்து உடல்
பெற்று வழி வந்துள்ளோமோ அவ்வுடலின் முன்னோர்களையும் தம் ஈர்ப்பு ஜெபத்தால் நாம்
வணங்கி நாம் செல்லும் சப்தரிஷி மண்டலக் கூட்டுடன் சுழல விட்டுக் கொள்ள முடியும்.
ஏனென்றால் உடலை
விட்டுப் பிரிந்த ஆவிகளுக்குத் தன் உணர்வினால் மனம் சுவை இவைகளைத்தான் எடுக்க
முடியும். ஞானத்தை வளர்த்துக் கொள்ள உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களால் முடியாது.
அவர்களின் நிலை
சிதறாமலும் மாறுபடாமலும் இருக்க உடலுடன் கூடிய ஜீவ பிம்ப உடல் மனிதனால்தான்
1.தன் எண்ண உணர்வில்
அவர்களை நினைத்து வணங்கினால்
2.அவர்களின் உயிராத்மா
வேறு ஈர்ப்பலைக்குச் செல்லாமல்
3.நாம் பாய்ச்சும்
ஞானிகளின் எண்ண உணர்வு ஈர்ப்புக்குள் அவர்களின் நிலையும் சுழன்று கொண்டிருக்கும்.
ஏனென்றால் இன்று
விஞ்ஞானத்தால் பூமியினுள் உள்ள நுண்ணிய காந்த அலையையும் காற்றில் கலந்துள்ள
இவ்வலையையும் ஈர்த்தெடுத்து “எலெக்ட்ரானிக் காந்த மின் அலை ஈர்ப்புச் செயல் காண்பதினால்…”
மிகச் சக்தி வாய்ந்த உடலை விட்ட உயிராத்மாக்கள் கூட ஈர்ப்புச் சிதறல் நிலை
இன்றுள்ளது. உயர் நிலை பெறத் தடையாகி விட்டது.
இன்று விஞ்ஞானத்தில்
இவ்வலையைப் பிரித்தெடுத்து பல செயல்களை செயற்கைக்கு உணர்த்துகின்றான்.
ஆனால் அதே காந்த
நுண்ணிய மின் அலை ஈர்ப்பை ஈர்த்துத்தான் ஜீவன் கொள்கின்றது ஒவ்வொரு ஜீவனும். மனிதனின்
உடல் பிம்பச் செயலே இக்காந்த நுண்ணிய மின் அலை ஓட்டம் தான்.
விஞ்ஞானத்தில்
உலோகத்தின் இம்மின் அலை ஈர்ப்பைக் கொண்டு பல மண்டலங்களுக்கும் பல சாதனங்களைச்
செலுத்தி உணர்ந்து வருகின்றான்.
1.இஜ்ஜீவ பிம்ப
உடலிலேயே…
2.இவ்வுலகம் மட்டுமல்ல
எவ்வுலகையும் சென்று காண வல்ல
3.அமிலப் படைப்பு
ஈர்ப்பு காந்த மின் அலைகள் உண்டு.
இக்காந்த மின் அலையை
எவ்வெண்ணத்தில் எவ்வுணர்வைக் கொண்டு பாய்ச்சுகின்றோமோ அதன் நிலையை நாம் அறிய
முடியும். இவ்வுடலில் எல்லா உணர்வலையையும் ஈர்க்க வல்ல சக்தியுண்டு.
இதனை உணர்த்தத்தான்
ஒவொரு கால கட்டத்திலும் கதை வடிவில் இராமனையும் கிருஷ்ணனையும் படைத்தான் அன்றைய
ஞானி.
நற்குணங்களின்
உருவமாய் இராமனின் கதையைப் படைத்தான். உலகமே இம்மனித பிம்ப ஈர்ப்பில் காண முடியும்
என்பதனை உணர்த்த கிருஷ்ணனைப் படைத்துக் கிருஷ்ணனின் வாயைத் திறந்தால்… அண்ட
சராசரங்களையும் கண்டதாகக் கதை உருக்காட்டினான் அன்றைய ஞானி.
இக்காற்றில் தான் பூமி
ஈர்த்து வெளிக்கக்கும் அனைத்துச் சக்திகளும் உண்டு.
1.உணர்வுடன் உருவமுடன்
உள்ள நாம்
2.இவ்வெண்ணச்
சுவாசத்தால் இராமனின் குண அமிலத்தை ஈர்த்துக்
3.கிருஷ்ணனின் வாயில்
கண்ட அண்ட சராசரங்களையும் காண முடியும்.
மனித பிம்ப உணர்வு
எண்ணச் சுவாசத்தால் காந்த மின் நுண்ணிய அலை ஈர்ப்பை எச்செயலில் செலுத்தி நம்
உணர்வு எண்ணச் சுவாசம் செல்கிறதோ அதன் செயலை நாம் செயலாக்க முடியும்.
நம்மைக் காட்டிலும்
மிகச் சக்தி வாய்ந்த நம்மையே படைக்க வழி தந்த சப்தரிஷிகளின் தொடரில் இவ்வெண்ண
உணர்வு சுவாச ஈர்ப்பிற்குச் செயலாக்க முடியும்.
1.முதலில் இராமனைப் போன்ற
குணமாகுங்கள்
2.பிறகு கிருஷ்ணனின்
காந்த நுண்ணிய மின் அலை உருவாகுங்கள்.
3.உருவை உணர்த்தி வழி
அமைப்பான்… “நம்மை வழிப்படுத்தி வளர்ந்தவன்…!”