ஒரு சிட்டிகை
உப்பெடுத்து நாக்கில் வைத்தவுடன் அதன் உவர்ப்புத் தெரிகிறது. அதே நாக்கு புளிப்பு
துவர்ப்பு காரம் இவற்றின் சுவையையும் அறிகின்றது.
சுவையை உணர்வதைப் போல்
மணத்தின் மாற்றத்தையும் முகர்ந்து உணர முடிகின்றது. ஒளியின் மாற்றத்தையும்
கேட்டறிய முடிகின்றது.
இவ்வுலக சுழற்சி
வாழ்க்கையுடன் ஒன்றிய வாழ்வின் அன்றாடச் செயலாக இவ்வுணர்வின் வட்ட ஈர்ப்பில்
உழன்று வாழும் நாம் இவற்றை உணர உருவ நிலை கொண்ட ஆரம்பச் செயலுக்கு நம் ஈர்ப்பைச்
செலுத்திப் பார்த்தோம் என்றால்
1.ஒவ்வொரு உயிர்த்
துடிப்பு நிலை கொண்ட உயிரணுக்கள் தோன்றிய நாள் தொட்டே
2.அவற்றின் வழி அலைத்
தொடரினால் உருவாகிய உணர்வின் சேமிப்புக் காலத்தில்
3.பல கோடிக் காலங்களாக
ஒவ்வொன்றின் தொடரும் சிறுகச் சிறுக ஒவ்வொரு வளர்ச்சி நிலை மாறி மாறி
4.இவ்வுணரும் பக்குவ
நிலை அமிலக்கூட்டு உருவ மனிதனாக உருப்பெறும் காலத்தில்
5.பன்னிரெண்டு குண
அமிலத்தைச் சேமித்ததன் மூலம்
6.மனித பிம்பச்
சேமிப்பிற்குத் தேவையான வளர்ச்சி நிலை மனிதனாக ஆன பிறகு
7.சேமித்ததன் சக்தி
இவ்வேழு பிம்ப உடல்களுக்கு ஜென்மம் எடுக்கக்கூடிய அமிலக் கூட்டு நிறைந்த பிறகுதான்
8.மனித பிம்ப உடலையே
பெறுகிறது.
இவ்வாறு உருப் பெற்ற அனைத்தையும்
உணரும் (SELF REALIZATION) உணர்வு மனிதனின் உணர்வு கூடிய எண்ண ஞானத்தைச்
செலுத்தும் நிலைக்கொப்பத்தான் அமிலக்கூட்டை நிறைத்து (உடலிலே விளைய வைத்து) மனித
பிம்ப உடல் கொண்டவனின் அவரவரின் செயல் திறன் அமைகின்றது.
1.பிம்ப உடலின்
பிறப்பிலேயே பிறப்பெடுத்து வளர்ந்து
2.வயது நிலையின்
நிலைக்கொப்ப உருவ வளர்ச்சியின் மாற்றங்களும்
3.ஞான சக்தியின்
உணர்வாற்றலும் செயல்படுகின்றன.
“உருவ வளர்ச்சி நிலை”
குறிப்பிட்ட காலத்துடன் நின்று விடுகின்றது. ஆனால் உணர்வின் எண்ண ஈர்ப்பு
ஞானத்திற்கு…
1.உடலின் வளர்ச்சிப்
பருவம் எய்திய காலத்தில் எடுக்கும் எண்ண நிலைக்கொப்பத்தான்
2.ஒவ்வொரு மனிதனின்
குண நிலை செயல்படுகிறது.
பருவ வளர்ச்சிக்
காலத்தில் (ADOLESCENT AGE) மனித பிம்பத்தின் ஈர்ப்பின் அமில குணமே
1.மிகவும் வீரிய காந்த
மின் அலையின் சக்தியை
2.மின்சாரத்தின்
ஈர்ப்புப் பாய்ச்சலைப் போன்று பாயும்
3.அமில வளர்ச்சியின்
சேமித குணமான அடிப்படை அமைகின்றது.
“அத்தருணத்தில்
வெளிப்படுத்தும் முறை கொண்ட மனிதனாகத்தான்” மனித ஜென்ம காலம் வரை ஒவ்வொருவனின் குண
நிலையும் அமைகின்றது.
இவ்வுணர்வலையின்
ஈர்ப்பு சக்தி “துரித ஓட்டத்தில்… ஓடும் காலமிது…!”
அதனைச் செலுத்தும்
முறை கொண்ட… மனித வாழ்க்கை முறை பெறும் காலத்தை… எச்சக்தியில்
செயல்படுத்துகின்றனரோ…!
1.அதன் உணர்வு ஈர்ப்பு
அமிலத்தின் சேமிப்பை - அத்தருணத்தில் தான்
2.குணத்தின் அடிப்படை
உணர்வு சேமிதம் உள்ளது.
பல துறைகளில்
முன்னேறுபவர்களுக்கும் “அக்காலத் தருணம் தான்” ஏற்றதாக அமைகின்றது. அதி உல்லாச
காமுக வழித் தொடரில் செல்பவனும் இப்பருவ கால ஈர்ப்பில் எடுக்கும் எண்ணத்தின் வழித்
தொடர் மனிதனாகத்தான் ஒவ்வொருவனும் வாழ்கின்றான்.
1.இதனை மாற்றி
அமைக்கும் செயலாக
2.எச்சக்தியைக் கொண்டு
செயல்படுத்துவது…! என்பதும் கடினம் தான்.
உணர்வின் எண்ணத்தின்
வழித் தொடர் அமிலமுடன் வழி கொண்ட நாம் அவரவர்களின் நிலைக்குகந்த செயல் வழியை “நினைத்த
மாத்திரத்தில் மாற்றிக் கொள்வது…!” என்பது கடினமாகிறது.
பிறரால்…
1.அவர்களின்
நற்சக்தியைச் செயலாக்கித் தீயவர்களை நன்மை ஆக்குவது என்பதும்
2.தீயவன் நல்லவனைத்
தீமைப்படுத்துவதற்கும்
3.அந்தந்தக் குண
அமிலத்தின் நிலையிலிருந்து மாற்றுவது கடினம்.
உணர்வினால் எடுத்த
அமிலத்தின் வளர்ச்சியின் குண மனிதன் அவன் அலைத் தொடரில்தான் இன்று வரை வாழ்ந்து
வருகின்றான்.
இந்நிலையை மாற்ற வேண்டும்
என்றால் என்ன செய்ய முடியும்…?
1.மிகவும் சக்தி
வாய்ந்த காந்த மின் அலையின் ஈர்ப்பை எடுத்து
2.அவர்களின் எண்ணமும்
- நல்லுணர்வின் பால் சக்தி அலையின் ஈர்ப்புடன் “கலக்கப் பெற்றால் தான்…!”
3.எச்சக்தியின்
அலையும் அவர்கள் உடலில் பாய்ந்து
4.அவர்களின் குண
நிலையின் வழித் தொடரையே மாற்றியமைக்க முடியும்.
முந்தைய இராமாவதார
கிருஷ்ணாவதாரக் காலங்களில் காவியங்களில் காட்டப்பட்ட போர்களில்… ஒருவருக்கொருவர்
போர் செய்யும் பொழுது…
1.ஒருவர் வில்லிலிருந்து
வரும் அம்புடன் எதிர்த்து வரும் அம்பும் மோதுண்ட பொழுது
2.ஒளி நிலை பெற்று
ஒன்றுடன் ஒன்று ஊடுருவி எதிர்நிலை கொண்டு
3.அதனதன் நிலைக்கே
திரும்பிச் சென்றதாகக் காவியக் கதைகளில் படித்திருப்பீர்கள்.
4.உண்மையைக்
கதைப்படுத்தி மறைக்கப்பட்ட தத்துவங்கள் பல உண்டு அவற்றில்…!
வான்மீகி மகரிஷியால்
இராமாயணக் காவியத்தில் எழுதப்பட்ட அந்த உண்மையின் ஒவ்வொரு சொல்லுக்கும் பல
கருத்துக்கள் உண்டு. “இன்று வரை அதன் உண்மைப் பொருளை உணர்ந்தாரில்லை…!”
ஞானிகள் கொடுத்த
காவியங்களில் உள்ள மூலங்களை அறிந்திட முற்படுங்கள்..! அருள் வழியில் நடந்திட அதிலே
தக்க உபாயங்கள் உண்டு.