பேராசையின் உந்தலில்
ஏற்பட்ட எண்ணத்தினால் பேராசைக்குகந்த நிலை பெறச் சூழ்ச்சி வலை பின்னப்பட்டு
அச்சூழ்ச்சியின் இன்னலில் எற்பட்ட செயல்கள் எல்லாம் “இராமாயணக் காவியத்தில்”
வடிக்கப்பட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.
இப்பேராசை உணர்வெண்ண
ஆசையின் செயல்முறை எப்படி எப்படி எந்தெந்தச் சுற்றலில் இருந்தெல்லாம் சிக்கி… ஒரு
மனிதனை… நற்குணம் அடைய வேண்டும் என்ற உணர்வு குணத்தை ஒரு வட்டத்திற்குள்
சுழலவிட்டு…
1.மனிதனுக்குகந்த
பண்பு பாசம் பக்தி வீரம் அன்பு ஆசை இப்படி ஒவ்வொரு குணத்தையும்
2.தந்தையின் சொல்
மந்திர சக்திக்கும்
3.தமையனின் பாசப்
பிணைப்பையும்
4.அன்பின் உருவைக்
காதலிலும்
5.வீரத்தை
வில்லாக்கியும்
6.பண்பைப் பலதிலும்
படைத்துப் பிணைக்கப்பட்ட இராமனை அவதாரப் படைப்புக் காவியனாக்கி
7.வழிப்படுத்திக்
காட்டிய இராமாவதாரக் காலத்தில் அன்றிருந்த நிலையைக் கொண்டு
8.அக்காலத்திற்குகந்த
வாழ்க்கையின் முன்னேற்ற ஞானத்தைக் கொண்டு
9.இராமனாகப்
படைக்கப்பட்ட உருவின் நிலையில்
10.ஆண்டவனான வழி நிலை
பெறுகின்ற செயலனைத்துமே அன்றே காவியத்தில் வடிக்கப்பட்டன.
11.ஆனால்… ஆண்டவனாகப்
பிறந்தவனின் இன்னல் நிலையை உணர்த்தி
12.ஆண்டவனின்
சக்தியைக் காட்ட வடிக்கப்பட்ட காவியமல்ல இராமனின் காவியம்.
பேராசையின் எதிர் நிலையில்
சிக்குண்ட ஆத்மா… “தன் உணர்வின் எண்ணத்தில் தெய்வ சக்தி பெறவேண்டும் என்ற எண்ண
சக்தி இருந்தால்…”
1.வாழ்க்கையில் செயல்
எதிர் பிம்பம் எதுவானாலும்
2.தன் ஞானத்தின்
உயர்வினால் வரும் இன்னலில் இருந்தெல்லாம் மீண்டு
3.”தெய்வமாகலாம்…!”
என்று உணர்த்தப்பட்ட காவியம் தான் இராமனின் காவியம்.