நோயால்
வேதனைப்படுவோரைப் பார்த்து நாம் உதவி செய்கிறோம். ஆனால் அந்த வேதனை என்பது வலிமை
பெற்றது. நம் உடலுக்குள் சென்று விட்டால் அதே நோயை உருவாக்கும் தன்மை
வந்துவிடுகிறது.
உடனே நாம் அதைச்
சுத்தப்படுத்த வேண்டும் அல்லவா…!
ஈஸ்வரா…! என்று புருவ
மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
பெறவேண்டும் என்று சுத்தப்படுத்திவிட்டு நம்முடைய எண்ணம்
1,துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி வேதனைப்பட்டவர் பெறவேண்டும்
2.அவர் நோயிலிருந்து
விடுபட வேண்டும் அவர் உடல் நலம் பெறவேண்டும் என்று
3.இந்த உணர்வை உந்தித்
தள்ள வேண்டும்.
ஒரு இரண்டு பேர்
ரோட்டிலே சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களை நாம்
பார்க்கின்றோம்.
அடப்பாவிகளா..!
இப்படிச் சண்டை போடுகிறார்களே...! என்று எண்ணினோம் என்றால் அந்த உணர்வு நமக்குள்
வந்து நமக்குள்ளும் சண்டை போட ஆரம்பித்துவிடும். நம்மை அறியாமலே அந்த அணுக்கள்
போர் முறை செய்யும்.
அப்பொழுது அந்த
நேரத்தில் என்ன செய்ய வேண்டும்…?
ஈஸ்வரா என்று அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல்
முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று ஒரு இரண்டு
நிமிடம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
இப்படி எண்ணி நம்
உடலுக்குள் அந்தச் சக்திகள் போன பிற்பாடு நம் ஆன்மாவை விட்டே அந்த உணர்வுகளைத்
தள்ளிவிடும். அந்தச் சூரியனின் ஈர்ப்பு வட்டத்திற்குப் போகின்றது. நம் ஆன்மா தூய்மை
ஆகிறது,
அடுத்து என்ன செய்ய
வேண்டும்…?
சண்டை இட்டவர்கள்
வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் ஒன்றுபட்டு
வாழும் தன்மை பெறவேண்டும் என்று சொன்னால்
1.இந்த நல்ல உணர்வை
நாம் நுகர்ந்து
2.புதிதாக அந்த நல்ல அணுவை
உருவாக்குகிறோம் என்று அர்த்தம்.
3.அவர்களின் தீமை
உணர்வுகளை உருவாக்குவதில்லை.
இப்படி நம்
வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும் வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.
இன்று நான் அரை மணி
நேரம் தியானம் செய்தேன்… ஒரு மணி நேரம் உட்கார்ந்து தியானம் செய்தேன்… குண்டலினி
சக்தியை ஏற்றினேன் என்று “எல்லாம் செய்தேன்…!” என்று சொன்னாலும் இந்த உணர்வுகளை
எடுத்த பிற்பாடு
1.அடுத்தாற்போல்
வேதனைப்படுவோரைப் பார்த்த பின்னாடி
2.அதை வேகமாக நம் உடல்
“இழுக்கும்…” நோய் நிச்சயமாக வரும்…!
இதைப் போன்ற நிலைகளை
மாற்ற “அவ்வப்பொழுது…” நாம் அந்த அருள் ஒளியைக் கூட்டி நம் ஆன்மாவைத்
தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
இதைத்தான் “வாழ்க்கையே
தியானம்…” என்பது.
தியானம் செய்… என்ற பின்
“நான் தியானம் செய்கிறேன்..” என்று சொல்கிறார்கள். எல்லாம் தியானம் செய்து கொண்டு
தான் இருப்போம். ஆனால் ஒருவன் என்னைத்
திட்டினான் என்று சொன்னால் அந்த அருள் ஒளியைப் பெறுவதற்குப் பதில் “திட்டினான்..திட்டினான்…திட்டினான்…”
என்று இந்தத் தியானத்தைச் செய்ய ஆரம்பிக்கின்றோம்.
நானும் தியானம் தான்
இருக்கிறேன்.. எனக்கு ஒன்றும் சரியாக மாட்டேன் என்கிறது…! என்று தியானம்
இருப்பவர்களிலேயும் சிலர் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
1.தன்னை அறியாது
இயக்கக்கூடிய நிலைகளிலிருந்து விடுபடும் சக்தி இருந்தும்
2.அதைப் பயன்படுத்தாத
நிலை ஆகிறது.
ஏனென்றல் நாம் ஒவ்வொரு
நிமிடமும்…
1,இந்த உடலுக்குப்
பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற
2.அந்தச் சிந்தனையுடன்
நாம் இருக்க வேண்டும்.
வாழ்க்கை என்பது என்ன…?
கடலில் படகில்
செல்கிறோம் ஒரு எல்லையை அடைவதற்கு. அதிலே போகும் பொழுது எத்தனையோ அலைகள்
மோதுகிறது. நாம் எல்லையைக் குறியாக வைத்துத்தான் அங்கே போகிறோம். அந்தத்
துடுப்பைச் சீராகப் போட்டால் அங்கே செல்லலாம்.
இதைப் போல் தான் நம்
வாழ்க்கையிலே
பாச அலை
அன்பு அலை
வெறுப்பு அலை
வேதனை அலை
சலிப்பு அலை
சங்கட அலை
கோப அலை
குரோத அலைகளில் எல்லாம்
நாம் மூழ்கிக் கொண்டேயிருக்கின்றோம்.
இதற்கு நாம் என்ன
செய்ய வேண்டும்…?
அந்த அருள் ஒளி என்ற
துடுப்பை எடுத்து அந்த அலைகளை எல்லாம் பிளந்து இந்த வாழ்க்கை என்ற பயணத்தைச்
சீராகச் செலுத்திடல் வேண்டும். நம்முடைய எல்லை “அந்தத் துருவ நட்சத்திரம் தான்…!”
அந்தத் துருவ நட்சத்திரத்தின்
ஈர்ப்பு வட்டத்தில் நாம் வளர வேண்டும் என்றால் அடுத்து நாம் பிறவியில்லா நிலை அடைய
வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டும். இது வேகா நிலை.
இல்லை என்றால்
சாகாக்கலையாக நாம் மீண்டும் வந்து விடுகின்றோம். நாம் இப்படி இருந்தேன் இப்படிச்
செய்தேன் என்று இங்கே எண்ணிக் கொண்டிருந்தால் சாகாக்கலையாக வந்துவிடுகின்றது
மறுபடியும் உடலின் தன்மைக்கே வந்துவிடுகின்றோம்.
தீயிலே குதித்தால்
உயிர் வேகுவதில்லை. இதைப் போல் இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்தால் “நாம்
என்றும் வேகுவதில்லை…”
இந்தச் சூரியனே
அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது. அந்த நிலையை
மனிதனாக ஆன பின் நாம் அனைவரும் பெறுதல் வேண்டும்.
அதை நீங்கள் எல்லோரும்
பெறவேண்டும் அந்த அருள் சக்தியை நீங்கள் பெறவேண்டும் என்று தான் திரும்பத்
திரும்பச் சொல்கிறோம்.
இருந்தாலும்…
1.இது என்னடா…?
2.சாமி அப்பொழுதும்
சொன்னார்.. இப்பொழுதும் சொல்கிறார்…! என்று இதை விட்டுவிட்டீர்கள் என்றால்
3.இந்தக் கணக்கு
உங்களுக்குத் தப்பாகப் போகும்.
இந்த உணர்வை நினைவைக்
கூட்டி உணர்வுகளைத் திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது தான் அதை நீங்கள்
சுவாசிக்கின்றீர்கள்… உங்களுக்குள் அது கருவாகின்றது.
கோழி என்ன
செய்கிறது..? அது சும்மா கேறிக் கொண்டே இருக்கும். எந்தச் சேவலோடு சேர்ந்ததோ அதை
எண்ணிக் கேறியது என்றால் அதே மாதிரி நிறத்துடன் குஞ்சுகள் வரும்.
இதே மாதிரித்தான்
என்னைத் திட்டினான்… இப்படிச் செய்தான்…! என்று சொல்லிக் கொண்டிருந்தால் அதே
உணர்வு நமக்குள் கருவாகின்றது.
ஆனால் அந்த அருள் ஒளி
பெறவேண்டும் என்ற உணர்வைத் திரும்பத் திரும்ப எடுத்தால் இது கருவாகும்.
வாழ்க்கையில் வரும் அந்த இருளை அகற்றும்.
அந்தச் சக்தி
பெறவேண்டும் என்பது தான் “உண்மயான தியானம்...!”