ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 15, 2019

கரையான் மந்திரத்தைப் பற்றி மெய்ஞானக் கரையான் ஈஸ்வரபட்டர் கூறியது


ஒரு சமயம் கரையான் புற்று அருகிலே என்னை அமரச் செய்தார் குருநாதர்.

கரையான் என்னுடைய தசைகளை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நான் போட்டிருந்த வேஷ்டி டிராயர் எல்லாமே மண்ணாகிவிட்டது.
1.கையில் தொட்டால் கரையான் நசுங்கிவிடுகிறது
2.ஆனால் அந்தக் கரையானுக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

அதிலே விளைந்த அமிலச் சத்து உன் உடமைகளில் பட்ட பின் அது கரைந்து எவ்வாறு சுக்குநூறாகத் தெறிக்கிறது…! என்று காட்டுகிறார்.

என் உடலை ஒன்றும் செய்யவில்லை என்றாலும் இந்த நகங்கள் கரைகின்றது. கரையானில் எதனில் வலிமை இருக்கின்றது…? என்று சற்று சிந்தித்துப் பார்…! என்றார் குருநாதர்.

அந்தக் கரையான் உணர்வுகள் காற்றிலே கலந்துள்ளது. அந்த கரையானின் உணர்வுகளைப் பல நிலைகள் உனக்குள் சேர்த்து இதை இன்னென்ன வழியில் இன்னென்ன உணர்வுகளுடன் இணைத்து அதை நீ கவர்ந்து இந்த உணர்வின் தன்மை உனக்குள் சேர்க்கப்படும் பொழுது
1.இதனின் உணர்வின் ஒலி அலைகளை (உதாரணமாக) ஒரு பொருளுடன் இங்கே இணைத்து  
2.ஒரு ஆயிரம் முறை அதை வெளிப்படுத்தும் பொழுது
3.இந்தப் பொருளுக்குள் இந்த உணர்வுகள் அது செலுத்திவிடுகின்றது.

மீண்டும் வேறொரு பக்கம் சென்று அங்கே அமர்ந்து அதற்குண்டான உபாயத்தைச் சொல்லி இந்த உணர்வுகளை… ஒலிகளை… “நீ ஈர்க்கும் தன்மையில் இந்த ஒலிகளை எழுப்பு...!” என்றார்.

அப்பொழுது அங்கே கரைந்த அவ்வளவு பெரிய பொருள் இங்கே சிறு துவாரத்தின் வழியாக அது எப்படி நுழைந்து வருகிறது…? அது உருபெறுகிறது…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

இது தான் “கரையான் மந்திரம்…!” என்பது.

ஆகவே அந்தப் பொருளில் பாய்ச்சிய இந்த உணர்வுகளை அதிலுள்ள காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்ட பின்
1.மீண்டும் இந்த ஒலிகளை எழுப்பப்படும் பொழுது இதனுடைய அளவுகோல் இது கூடிய பின்
2.எத்தகைய உலோகத்தையும் அது கரைத்து ஆவியாக மாற்றுகின்றது.
3.மீண்டும் அதற்கு எதிர்மறையான உணர்வுகளை இணைத்த பின்
4.ஒரு ஊசி புகும் அளவு துவாரம் உள்ள பெட்டிக்குள் அணுக்களாகச் சென்று
5.பொருளாக எப்படி உறைகிறது என்ற நிலையையும் காட்டுகின்றார்.

வேதங்களில் அதர்வண வேதம் என்ற நிலைகளில் இன்று மந்திரம் தந்திரம் என்று இதைச் சொல்வார்கள்.
1.கடவுளையே நான் கைவல்யப்படுத்தியுள்ளேன் என்று பொருள்களை வரவழைத்து
2.மக்களை மதிமயக்கச் செய்து பல மாயாஜாலங்களைக் காட்டி
3.இந்த உடலின் இச்சைக்கே அவர்கள் செய்கின்றார்கள் என்று இங்கே தெளிவாக உணர்த்துகின்றார்.

 ஏனென்றால் இந்தக் கரையானின் உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து கொண்ட பின் அதிலே சில ஒலி அலைகள் - நுண்ணிய அலைகளை வெளிப்படுத்தி அதையும் எனக்குக் காட்டுகின்றார் குருநாதர்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு எலெக்ட்ரிக்குடன் நுண்ணிய அலைகளாக ஒலிபரப்புச் செய்யப்படும் பொழுது இந்த ஓசையைக் கண்டு கொசுக்கள் இங்கே வராது அஞ்சி ஓடுகின்றது.
இதைப் போல் தான்…
1.மெய் ஞானக் கரையான் உணர்வைக் கண்டுணர்ந்த நம் குருநாதர்
2.ஈஸ்வரபட்டர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இந்தக் கரையான் உன் ஆடைகளை எப்படிக் கரைத்ததோ… உன் நகத்தைக் கரைத்ததோ… இதை போல் அதிலே உள்ள உணர்வின் ஒலி அலைகளை நீ கவரப்படும் பொழுது எதனுடன் இணைக்கின்றாயோ அது கரையும்.

ஏனென்றால் பூமியிலே உலோகத் தன்மையிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அது தாவர இனங்களாக வளர்ந்து
1.அதனின் சத்தின் தன்மை மறைந்து
2.அதை உணவாக உட்கொண்டு ஜீவ அணுக்களாக உருவாகும் நிலைகள் எப்படி வந்தது…?
3.இது எல்லாம் எவ்வாறு உருமாறுகிறது… உருபெறுகிறது… உருமாற்றமாகின்றது…! என்று காட்டினார் குருநாதர்.

அது தான்.. ரிக் சாம அதர்வண மறுபடியும் யஜூர் மீண்டும் சாம. அந்த உணர்வின் தன்மைகள் எவ்வாறு மாறிக் கொண்டு வருகிறது என்ற நிலைகளைத் தான் நம்முடைய வேதங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

சாதாரண மக்களும் தன்னை அறிந்திடச் செய்யும் அவ்வளவு பெரிய வேத சாஸ்திரங்களுக்குள் தன் சுயநலன்களுக்காக கடும் தவறுகளை உருவாக்கி அதற்குள் இருக்கும் மூலங்களையே மறைத்து விட்டார்கள்.

இந்த உடலின் இச்சைக்காக உபயோகப்படுத்திய அவனும் மடிந்தான் அவனைப் பின்பற்றிய அனைவரும் இன்றும் மடிந்து கொண்டே உள்ளார்கள். எதனின் ஆசையைத் தனக்குள் வளர்த்தனரோ அதன் வழிகளிலே தான் இன்றும் உள்ளார்கள்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.