இன்றைய சமுதாய
மக்களின் நிலையில் குணங்கள் அவர்களால் ஏற்பட்டதல்ல. அவர்களை மாற்றியமைக்க
1.விஞ்ஞான ரீதியில்
செயல்படுத்திய “இயந்திர மனிதர்கள் தான்”
2.இன்று இராணுவம்
என்று செயல்படுத்தப்பட்ட மனிதர்கள்…!
மனிதனையே… அவன்
உணர்வின் அலையையே… (புத்தியை) நாட்டின் இன வெறி உணர்வு கொண்ட செயலுக்காகப்
பேராசையில் தன் நாடு என்ற உணர்விற்காகத் தன் நாட்டையும் தன் பலத்தையும் கூட்டிக்
கொள்ளப் பல தவறான பழக்கங்களை அன்று ஏற்படுத்தினர்.
இராணுவ முறையினால்
மனித ஆத்மாவின் உணர்வின் எண்ணத்தை மாற்றப் “போதை வஸ்துக்களை” உண்ணச் செய்தனர்.
அப்போதையின்
உணர்ச்சியுடன் மனிதன் உள்ள நிலையில் அவன் எண்ணத்துடன் குரோத வெறி சக்தியான இராணுவப்
பயிற்சி முறைகளை ஊட்டி வழிப்படுத்தினர்.
அதே உணர்வலையின்
சுற்றலில் மனித ஆத்மாக்களின் எண்ணத்தை மாற்றியதில்… அன்றாண்ட அரசியல் வீரர்களில்
சிலரால் வழிப்படுத்திய நிலை இன்றளவும் உள்ளன.
“சர்ச்சில்” ஆண்ட
காலத்திலும் “ஹிட்லர்” ஆண்ட காலத்திலும் அவர்களின் ஆட்களின் உணர்வுடன் இப்போதை
வஸ்துக்களைச் செலுத்தப்பட்டுப் போதை உணர்வுடன் மனிதன் உள்ள பொழுது அவனுக்குப் பல
பயிற்சிகளைக் கொடுத்தனர்.
எந்த உணர்வின் பயிற்சி
அலையைப் புகட்டினார்களோ… அதே உணர்வின் செயலைச் செய்யத்தக்க மனித ஆத்மாக்களை இப்படி
உருவாக்கி விட்டனர் அன்றிருந்த அரசியல் தலைவர்கள்…! இன்றும் இதன் வழித் தொடர் சில
நிலைகளில் உழன்று கொண்டு தான் உள்ளது.
மனிதனை மனிதனே உண்ணும்
உணர்வலை கொண்ட வெறிக் குணங்களின் செயல்கள் சில பாகத்தில் நடந்து கொண்டு தான்
உள்ளது.
1.விஞ்ஞான ரீதியிலும்
சில மந்திரவாதிகளின் நிலையிலும்
2.தன் இன வர்க்க
உணவையே உண்டால் தனக்கு வீரிய சக்தி கிடைக்கும் என்ற உணர்வில்
3.பல செயல்கள்
நடக்கின்றன இந்த உலகின் பல பாகங்களில்.
இயேசு கிறிஸ்து
அக்காலத்தில் தோன்றிச் சில ஒளி அலைகளைச் செயலாக்கிச் சென்றார். முகமது நபியின்
காலத்திலும் அவர் எடுத்த அலையின் தொடர் அவர் வாழ்ந்த அவரின் எண்ணமுடன்
செயல்பட்டவர்களுக்குத் தன் சக்தி அலையைப் பரப்பித்தான் சென்றார்.
1.இயேசு கிறிஸ்துவின்
காலத்திலும் நபிகளின் காலத்திலும்
2.மனிதர்களின்
எண்ணத்தை நல் உணர்வின் வழியில் சுழற்சிப்படுத்தி…
3.ஒளி அலைகளை அவர்கள்
பால் செலுத்தி அவர்கள் ஆத்மாவை வளர்க்கச் செய்து
4.ஒன்றைப் பலவாக நல் ஒளியின்
அலையைப் பரப்பச் செய்த செயலில்
5.அவ்வுணர்விற்கு
உகந்த ஆத்மாக்களைச் செயல்படுத்துவது என்பது கடினமாகிவிட்டது.
அதை எல்லாம் மாற்றி
அமைக்கத் தான் ஞானிகளைப் பற்றியும் சித்தர்களைப் பற்றியும் திரும்பத் திரும்ப
உணர்த்திக் கொண்டே வருகின்றேன்.
நற்குணங்களின் வடிவாக
முருகா என்ற ஆறு குணங்களைத் தெய்வமாக்கி அன்பு பண்பு பாசம் பரிவு வீரம் சாந்தம்
என்ற நற்குணங்களை முருகனாக வடிவம் படைத்து மலை உச்சியிலும் மலைக்கு நடுவில்
இடும்பன் என்ற தீய குணங்களைப் படைத்து இடும்பன் என்ற நிலையையும் உணர்த்தினார்
போகர்.
ஒவ்வொரு மனித
ஆத்மாவும் அவர்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட்டு வாழ்க்கையில்
உயர்வான நிலை பெற வேண்டியதன் அவசியத்தைக் குறிக்க
1.மலை மேல் முருகனின்
சிலையை அறுகுணங்களாக ஆறுமுகனாகப் படைத்து
2.சிலையை வணங்கும்
முறையைப் போகர் ஏற்படுத்தினார்.
இடும்பனான குணங்களை
அகற்றித் தெய்வ குணத்தை ஒவ்வொரு ஆன்மாவும் பெறவேண்டும் என்பதற்கே முருகன் சிலையை
வைத்தார் போகர்.
அந்தச் சிலையை
வணங்கும் ஆன்மாக்களுக்கு எல்லாம் நல் ஒளியின் அலையை இன்றும் பாய்ச்சிக்
கொண்டிருக்கின்றார்.