இன்று விஞ்ஞானத்தில்
ஒலிப் பதிவு செய்த நாடாக்களில் காந்த அலையை மின்சாரத்தினால் பாய்ச்சி அதனை
ஒலிக்கச் செய்து கேட்கின்றனர்.
அதைப் போன்று இவ்வுடல்
என்ற கூட்டு அமிலமுடன் உயிர் அணு தோன்றி ஜீவ உணர்வு எண்ண சக்தி வளர்ந்த நாள்
தொட்டே பல கோடிச் சரீரங்களில்.. ஒவ்வொரு உயிர் ஜீவனின் உணர்வு எண்ண சுவாசத்தில்
எடுத்த நினைவலைகள் அனைத்துமே நம் உடலில் பதிவாகியுள்ளது.
1.அப்படிப் பதிவான
உணர்வெண்ண அலையில்
2.பல ஜென்மங்களில்
எடுத்த எண்ண நினைவலைகளும் உண்டு.
அதன் குண நிலைத்
தொடரில் தான் இன்றைய பிம்ப உடலின் உணர்வு நினைவு எண்ண ஓட்டங்கள் செயல்பட்டுக்
கொண்டுள்ளது. அப்படிப் பதிவாகியுள்ள உடல் கூறு தான் இது.
ஆகவே…
1.இவ்வுடல் உணர்வு
எண்ணமுடனே (அந்த ஓட்டத்திலேயே) நம் எண்ணத்தைச் செலுத்தினோமானால்
2.ஆத்ம சக்தி
நல்லுணர்வின் வழித் தொடர் பெற முடியாமல்
3.அணைகட்டாமல்
செல்லும் நீரைப் போல் தான் அதன் வேக நிலைக்கொப்ப செல்லும்.
உணர்வின் எண்ணம்
கொண்டு நற்சக்தியின் ஞான ஒளி அலையை இவ்வுடலில் ஏற்கனவே பதிவாகியுள்ள பலவான உணர்வுகளில்
கலக்கச் செய்திட வேண்டும் (இது முக்கியம்).
1.அத்தகைய எண்ணங்களையும்
நினைவுகளையும்
2.நற்சக்தியின் நல்
எண்ண குணத்தை வழிப்படுத்தக்கூடிய எண்ணத்தில் நம் வாழ்க்கை நடைமுறை இருந்திட்டால்
3.நாம் எச்சக்தியைப்
பெற வேண்டும் என்று உணர்வின் எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ
4.அச்சக்தியின்
எண்ணமுடன் நம் வாழ்க்கை செயல் இருந்திட்டால்தான்
5.நம் ஆத்மாவும் நல்
ஞானச் சக்தியின் வழித் தொடரைப் பெற முடியும்.
உடலில் மட்டுமல்லாமல்
உடலை விட்டுப் பிரிந்தவர்களின் (இறந்தவர்களின்) எண்ண நினைவு சப்த அலைகள் “அந்தந்த
உயிராத்மாவின் சுழற்சியுடன்” இக்காற்று மண்டலத்தில் சுழன்று கொண்டே அழியாமல் தான்
உள்ளது.
இதனை உணர முடியுமா…?
இன்று நாம் பேசியதை
நாடாக்களில் அமிலத்தைப் பூசி காந்த மின் அலையின் சக்தியினால் பதிவு செய்து பல
காலங்களுக்கு அதனைக் கேட்க முடிகின்றது.
உடலை விட்டுப் பிரிந்த
உயிராத்மாக்களின் தொடர்பலையையும் நாம் நம் எண்ணத்தால்… அவர்கள் பால் செலுத்தும்
உணர்வு ஞானத்தால்… எந்த ஒரு உடலை விட்ட ஆத்மாக்களுடனும் தொடர்பு கொள்ள ஜீவ பிம்ப
மனித உடல் கொண்டோரால் முடியும்.
இம்மனித ஞானத்தில் மட்டும்
தான் முடியும் என்பதல்ல…!
நம்முடன் வாழ்ந்த
ஜீவன் பிரிந்த ஆன்மாக்கள் அவர்கள் அவர்களால் விரும்பி வாழ்ந்த காலத்தில் அவர்களின்
உடம்புடன் தரித்திருந்த பொருள்களில் காந்த மின் அலையின் சக்தியை சில அமிலங்களின்
கலப்புக் கூட்டைப் பூசி அவர்கள் பேசிய அலையையும் எடுக்க எடுக்கலாம். அவர்களின்
இன்றைய எண்ண ஒலியையும் எடுக்கலாம்.
இவ்வுடல் கூட்டிற்கு
ஜீவ நீர் சக்தியினால் எச்சக்தியையும் செயலாக்கவல்ல ஆற்றலுண்டு. “சகல லோகங்களையும்
காணவல்ல ஆத்மக் கூடு இது” (நம் ஆன்மா).
1.ஆனால் நம் உணர்வின்
எண்ணமெல்லாம் “இவ்வாழ்க்கை” என்ற ஏக்கச் சலிப்பு நிலையுடனே இருப்பதாலும்
2.பெரும்பாலும் தன்
சக்தி குண அமிலத்தையே கூட்டும் வழியிலிருந்து
3.குறைக்கும் ஈர்ப்பு
ஓட்டமான ஓட்ட கதியில் செலுத்தி விடுவதாலும்
4.நம்
ஆன்மாவுக்குண்டான சக்தியை அறியாமலேயே வாழ்கின்றோம்.
இவ்வுணர்வின்
எண்ணத்தையே நாம் நல்லெண்ண குண அமில நிலையில் வளர்த்துக் கொண்டோமானால் ஒவ்வொரு மனித
ஆத்மாவும் எந்த ஒரு பேரின்ப நிலை பெறவேண்டும் என்று அன்றைய ஞானிகளும் சபதரிஷிகளும்
உணர்த்தி உள்ளார்களோ அதன் உணர்வெண்ண நினைவுப்படி அவர்கள் அடைந்த நிலையை நாமும் அடைய முடியும்.