காயத்ரி என்ற உணர்வு
உண்டு. “காயத்ரி ஜெபம்” செய்ய வேண்டும் என்றாலே அதற்குண்டான மந்திரங்களைச்
சொல்வார்கள்.
காயத்ரி ஜெபம் என்று
மந்திரத்தைச் ஜெபிக்க ஆரம்பித்தார் என்றால் இன்னொரு மனிதனின் உடலில் விளைந்த
உணர்வைத் தான் தனக்குள் எடுத்துக் கொள்ள முடியும்.
இப்படி மனிதனின்
வாழ்க்கையில் வேதங்கள் என்ற நிலைகளில் அந்த அதர்வண வேதத்தைத் தான் கற்றுணர்ந்து
வந்துள்ளோம்.
1.அந்த மந்திரத்தின்
ஒலிகளையே நமக்குள் பரப்பி
2.இந்த உடலுக்குப்
பின் இன்னொருத்தன் கையிலே ஆவியாகவும் பேயாகவும் நாம் அடிமையாகிச் சுற்றிக்
கொண்டிருக்கின்றோம்.
ஒரு வேதனைப்படுவோரைத்
திரும்பத் திரும்ப எண்ணினால் அது தியானம் தான்.
1.அந்த மகரிஷிகளின்
அருள் சக்தி பெறவேண்டும்
2.என்னிலே அறியாது
வந்த இருளை நீக்க வேண்டும் என்று திரும்ப எண்ணினால் இதுவும் தியானம் தான்.
இதிலே எந்தத் தியானத்தை
நீங்கள் எண்ணுகிறீர்கள்…!
வேதங்கள் கூறியது போல்
காயத்ரி மந்திரத்தை ஜெபித்தோம் என்றால் “சக்தி கிடைக்கிறது…” என்று சொல்லித்தான் அதைச்
செய்வார்கள். சூரியனை எண்ணி விட்டால் அது காயத்ரி என்பார்கள்.
ஆனால் அது எந்த
காயத்ரி…? என்பது வேண்டுமல்லவா…!
ஒருவரிடமிருந்து வேதனைப்படும்
உணர்வுகள் வெளிப்பட்டால் அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.
அதாவது வெப்பம்…
காந்தம்… விஷம்… என்ற மூன்று நிலைகளில்
1.அந்த
வேதனைப்படுவோரின் உணர்வுகளைக் காந்தம் கவர்ந்து கொண்டால்
2.அது தன்னுடன் இணைந்த
நிலையில் பரப்பிரம்மமாகின்றது.
3.அந்த உணர்வின் சத்து
ஒரு அணுத் தன்மை அடையும் சக்தி பெறுகின்றது - சீதாலக்ஷ்மியாக மாறுகின்றது.
4.ஆனால் அதே சமயத்தில்
சேர்த்துக் கொண்ட மணம் அது ஞானமாக இருக்கின்றது.
5.அந்த வேதனைப்படும்
உணர்வு அது தான் காயத்ரி… காயமாகி.. முழுமையாகின்றது.
6.அதை யார்
சுவாசித்தாலும் அதே வேதனைப்படுத்தும் உணர்வாகத்தான் அது இயக்கும்.
7.இப்படி அந்தப்
பொருள்படும்படி “காயத்ரி” என்றால் புலனறிவு ஐந்து...!
8.அதிலே எந்த உணர்வின்
சக்தியை எடுக்கின்றதோ அதன் வழி தான் அது நடக்கும்… அல்லது இயக்கும் என்று
9.வேதங்களின் மூலத்தில்
இது மிகவும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
அதை நாம் யாராவது
சிந்திக்கின்றோமா…! என்றால் இல்லை.
மந்திர ஒலிகளை
எழுப்பும் நிலைகளிலிருந்து விடுபட்டு அந்த அருள் ஞானி அகஸ்தியன் காட்டிய அருள்
வழியில் நாம் செல்ல வேண்டும்.
அகஸ்தியன் ஒளியின்
உணர்வாக முழுமை பெற்று இன்றும் அழியாத நிலைகள் கொண்டு விண்ணிலே வாழ்ந்து வளர்ந்து
கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் நுகரக்
கற்றுக் கொள்ள வேண்டும்.
அந்தப் பேரருள் உணர்வை
நமக்குள் விளையச் செய்து இந்த உடலுக்குப் பின் நாம் பிறப்பில்லை என்ற நிலையை அடைதல்
வேண்டும்.