சாகாக் கலை என்றும் வேகா நிலை என்றும் இருந்தாலும் சாகாக் கலை தான் பெரிது..! என்பார்கள்.
ஏனென்றால் சாதாரணமாக நாடி சாஸ்திரம் பார்க்கின்றோம் என்றாலும் சரி… வைத்திய ரீதியில் பார்க்க வேண்டுமென்றாலும் சரி…
1.சாகாக்கலை தெரியுமா…?
2.காயக்கல்பம் செய்து இந்த உடலை அழியாமல் நாம் வைத்து கொள்ள வேண்டும் என்பார்கள்.
போகர் பன்னிரெண்டாயிரத்தை வைத்து வாதிப்பதற்கு நிறையப் பேர் வருவார்கள். ஆனால் போகர் பன்னிரெண்டாயிரம் போகர் எழுதியதா…?
போகருக்குப் பின்னாடி வந்தவன் எழுத்து வடிவு வந்த பின் அதன் தத்துவத்தை எடுத்து இந்த உணர்வின் தன்மையை நாடிகளை எழுதி வைத்தான்.
இதிலே போகன் வெளிப்படுத்திய உணர்வுகள் மற்ற உணர்வுகள் சேர்த்து ஒன்றோடு ஒன்று சேர்க்கப்படும்பொழுது தங்கம் எப்படி வரும் என்கிற நிலை உண்டு.
மனதை எப்படி தங்கமாக்க வேண்டும் என்று போகர் சொன்னார்.
ஆனால் போகர் பன்னிரெண்டாயிரத்தைப் படித்துக் கொண்டு புறத்திலே தங்கம் செய்வதிலே போய் கொண்டிருப்பார்கள். இருக்கின்ற சொத்தை எல்லாம் விட்டு ஆண்டியாகச் சுற்றிக் கொண்டு இருப்பார்கள் நிறையப் பேர்.
தங்கத்தைச் செய்தால் செல்வந்தராகலாம்…! என்ற ஆசை கொண்டு பேய் மனம் பிடித்து இன்றும் சுற்றுபவர்கள் நிறைய இருக்கின்றார்கள்.
சும்மா அதையும் இதையும் போட்டு பல மூலிகைகளையும் இலைகளைப் போட்டுப் பச்சையாகித் தங்கமாகி விட்டது என்றால் அடுத்தவரிடம் காண்பித்து
1.இந்த மாதிரி நிறையச் செய்தால் லாபம் கிடைக்கும் என்று
2.இவனும் போய்… அடுத்தவர்களையும் இழுத்துக் கொண்டு போய் கடைசியில் பணத்தை இழந்தது தான் மிச்சம்
3.இந்த மாதிரிச் செய்து கொண்டு போவார்கள்.
குருநாதர் ஒரு சமயம் என்னிடம் (ஞானகுரு) ஒரு இரும்புக் கரண்டியும் ஈயமும் எடுத்துக்
கொண்டு வாடா…! என்றார். காட்டுக்குள்ளே கூட்டிக்
கொண்டு போனார்.
பல குப்பைகளை எடுத்து வரச்சொல்லி எல்லாம் போட்டு வேக வைடா…! என்றார். அவர் சொன்ன இடத்தில் தேடித்
தேடித் தேடி எடுக்க வேண்டும். இந்த
குப்பையை எடு… அந்த குப்பையை எடு…! என்று எனக்கும் தெரியாமல் அவர் அதைச் செய்தார்.
அவர் என்னென்ன சொன்னாரோ எல்லாவற்றையும் நான்
எடுத்துக் கொண்டு வந்தேன். இரும்புக் கரண்டியிலே போட்டு ஈயத்துடன் எரித்தவுடனே இந்த உணர்வுகள்
பட்டவுடனே அந்த ஈயம் தங்கமாகிப் போய்விட்டது.
அதை எடுத்துக் கொண்டு போய் தங்க ஆசாரியிடம் கொடுத்து
உறைத்துப் பார்ததவுடனே அவர் என்ன சொல்கிறார்…?
1.அடேங்கப்பா…! இந்தத் தங்கத்தில் கொஞ்சம் செம்பைச் சேர்த்தால் உயர்ந்த
ரகம் என்று சொல்கிறார்.
2.நீ அந்தச் சாமியாருடன் (ஈஸ்வரபட்டருடன்) வீட்டை விட்டுச் சுற்றிக் கொண்டே
இருப்பது இப்பொழுதுதான் தெரிகின்றது
3.எனக்கு நீ வேண்டியதை கொண்டுவாப்பா… நான்
எல்லாம் விற்றுத் தருகின்றேன் என்கிறார்.
சரி என்று சொல்லிவிட்டு வந்தவுடன் அந்த ஆசை
வருகின்றது. ஆசை யாரை விட்டது…? குருநாதர் செய்தார்… பார்த்தேன்… எனக்கும் ஆசை வருகின்றது.
குருநாதர் என்னென்ன சொன்னாரோ அதை மாதிரி நானாகவே ஈயக்
கட்டியை எடுத்துக் கொண்டு வந்து போட்டேன்.. குப்பையைப் போட்டு எரித்தேன்… பார்த்தால்
தங்கமாகி விட்டது.
தங்கமாகியவுடனே கொண்டு போய் விற்று விட்டு
வந்தேன். வரப்போகும்போது குருநாதர்
என்ன செய்தார்…?
இங்கே வாடா…! என்றார். என்னிடம் இருந்த காசை எல்லாம் பிடுங்கினார். இங்கே
எத்தனை பிள்ளைகள் இருக்கின்றார்கள்…? அவர்களுக்கெல்லாம் இதைக் கொடு…! என்றார்
எல்லாவற்றையும் வாங்கிவிட்டார். எனக்கு ஒரு
ரூபாய் கையில் கொடுத்தார்.
1.இனிமேல் இந்த வேலையைச் செய்யாதே…
2.நீ இதைத் தெரிந்து கொண்டாய் என்ற
நிலையில் எதிலேயடா ஆசைப்படுகின்றாய்…?
3.உன் மனதைத் தான் தங்கமாக்கச் சொன்னேன்…!
4.உன் மனதைத் தங்கமாக்க வேண்டுமே தவிர… நீ தங்கத்துக்கு ஆசை
பட்டால்
5.உன் மனம் பித்தளையாகப் போகும்… இரும்பாகப் போகும்…! துருப் பிடித்துவிடும்.
6.இனிமேல் இந்த வேலையைச் செய்யாதேடா…! என்றார் குருநாதர்.