ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 6, 2019

ஞானிகள் வெளிப்படுத்திய உணர்வுகளைக் கவர்வதற்கும் சாதாரண மனிதன் வெளிப்படுத்திய உணர்வுகளைக் கவர்வதற்கும் உண்டான வித்தியாசம்


ஒரு மனிதனுக்குள் மனிதன் விளையச் செய்யும் உணர்வுகள் நமக்கு முன் இங்கே இந்தக் காற்று மண்டலத்தில் உண்டு.

ஒரு மனிதனுக்கு மனிதன் அதிகமாகப் பற்று இருக்கும் பொழுது அந்த மனிதன் இறந்து விட்டால் அதே பற்றுடன் வரும் பொழுது
1.புலனடங்கி நாம் தூங்கப்ப்டும் பொழுது அந்த மனிதனின் உருவம் கிடைக்கும்.
2.அவன் செய்த நிலையும் நாம் கனாக்களாகப் பார்க்க முடியும்.

கனவுகளில் பலவிதமான அற்புதங்களும் சில நடக்கின்றது. எப்படி…?

ஒரு மனிதன் ஆசைப்பட்டு இருக்கும் பொழுது அந்த உணர்வுகள் அதிகமாகி விட்டால் எதன் மேல் எப்படி ஆசைப்ட்டானோ இது இணைக்கப்பட்டு இந்த உணர்வுகள் நம் ஆன்மாவில் பெருக்கப்பட்டால்
1.நாம் புலனடங்கித் தூங்கப்படும் பொழுது உயிரிலே பட்டு
2.அதனின் உணர்வின் கலவையாக அந்த உணர்ச்சிகள் தூண்டுவதும்
3.எதனுடைய நிலைகளோ - நாம் ஆசைப்பட்ட உணர்வுகளும் ஒன்றாக இருக்கும் பொழுது
4.அந்த அலையின் உணர்வு ஆசைப்பட்ட உணர்வுகள் இங்கே வந்திருக்கப்படும் பொழுது
5.இது இரண்டும் கலந்து பார்க்காத ஆளின் உருவமும்
6.அதன் வழி நமக்குள் அந்த இன்பம் பெறுவதையும் சில கனவுகளில் பார்க்கலாம்.

ஆகவே நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நாம் புலனடங்கித் தூங்கினாலும் “உயிரிலே பட்டுத் தான்” இந்த உணர்வுகள் தனக்குள் வருகின்றது. கனவு என்று சொல்வது இது தான்.

நாம் எதைப் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவின் நிலைகள் கூட்டப்படும் பொழுது
1.உணர்வுகள் எது முந்தி வருகின்றதோ
2.அந்த உருவங்களும் நமக்குள் வருகின்றது.

ஒரு அச்சுறுத்தும் நிலையோ… பயம் காட்டும் நிலைகளையோ… விபரீத விளைவுகளையோ… இதுகள் எல்லாம் நாம் எண்ணி எடுத்துக் கொண்ட உணர்வுகள் உடலிலே பதிவான பின்
1.எதன் வழிகளில் அன்றைய வாழ்க்கையில்
2.நாம் எதை முன்னணியில் அதிகமாக வைக்கின்றோமோ அது நம் ஆன்மாவில் கூடப் பெற்றுப்
3.புலனடங்கி இருக்கும் பொழுது நமக்குள் கனவுகளாக வருகின்றது என்பதனை நம் குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

போகர் பல அற்புதங்கள் செய்தார் என்பார்கள். குருநாதரிடம் சில மருந்துகளை அரைத்து விஷ்ணுவிடம் வரம் வாங்கி முருகனுடைய சிலையைச் செய்தார் என்றெல்லாம் அன்று எழுத்து வடிவே இல்லாத பொழுது கற்பனைக் கதைகளைக் கட்டியிருப்பார்கள் பின் வந்தோர்கள்.

எழுத்து வடிவு வந்த பின் போகர் எழுதிய சக்கரங்கள் என்று போகர் சமாதியை வைத்திருப்பார்கள். இதைப் போன்றெல்லாம் அவர் பேரைச் சொல்லி ஒவ்வொன்றையும் மாற்றி உண்மையின் உணர்வுகளை அறிய முடியாதபடி காலத்தால் மாறிப் போய்விட்டது.

அன்று போகன் ஒரு மனிதன் எப்படி முழுமையானான்…? என்று கண்டுணர்ந்தான் என்பதை நம் குருநாதர் காட்டினார்.

விஷத்தின் தன்மை எப்படி இயக்கப்பட்டது…? அணுக்களால் கோள்களாகி நட்சத்திரமாகிச் சூரியனாகி சூரியனாக ஆன பின் கோள்களை உருவாக்கி நட்சத்திரங்களை உருவாக்கி ஒரு பிரபஞ்சமாகி முழுமை அடைந்த பின் தான் ஒரு உயிரணுவின் துடிப்பு ஆகின்றது. பிரபஞ்சம் முழுமை அடைந்த பின் தான் ஒரு அணுத் தன்மையாகி உயிரணுவின் தோற்றம் அடைகின்றது.

1.27 நட்சத்திரங்களின் உணர்வுகள் ஒவ்வொரு தாவர இனங்களிலும் மண்ணிலும் எப்படிக் கலக்கின்றது…? 
2.அதே போல உயிரணு தோன்றிய பின் அதிலே எப்படிக் கலக்கப்படுகின்றது…?
3.அந்த உணர்வுகளை இந்த உயிரணு நுகர்ந்த பின் உணர்வுக்கொப்ப மீண்டும் அதை இயக்குகிறது…?
4.அந்த உணர்வுக்கொப்ப உடல்கள் எப்படி மாறுகிறது…? என்பதைத் போகன் கண்டுணர்ந்தார் என்று தெளிவாகக் கூறினார் நம் குருநாதர்.

1.போகன் காலத்தில் போகனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே உண்டு
2.அதை நுகர்ந்தால் அக்காலத்தில் போகன் எப்படி இருந்தானோ அதை நீங்களும் அறிய முடியும்
3.அவன் கண்ட இயற்கையின் உண்மை உணர்வுகளையும் நீங்கள் உணர முடியும்.

ஆகவே ஞானிகள் வெளிப்படுத்திய உணர்வுகளை நாம் நுகரக் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த நுகரும் ஆற்றலைப் பெறுவதற்குத்தான் இந்த உபதேசங்களையே கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.