ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 15, 2019

பிறரைப் பார்த்து “பாவம்…!” என்று இரக்கப்படுவது பற்றியும் மற்றவர்களைப் பார்த்துப் பச்சாதாபப்படுவதையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


1.உணர்வின் எண்ணத்தை எந்த ஒரு செயலின் எண்ணத்திலும்… நம் எண்ண ஈர்ப்பிலும் செல்லாமல்
2.இவ்வுடலின் அமில குணத்தை நற்குணங்களின் அமில வளர்ச்சியுடன் வளரவிட்டாலும்
3.நம் எண்ணத்தின் உணர்வைச் சங்கடமும்… பரிதாபமும்… பச்சாதாபமும்… காட்டும் உணர்வலைக்குச் செலுத்திடலாகாது.

பரிதாபப்பட்டுப் பிறரின் எண்ணமுடனே நம் உணர்வின் எண்ணத்தையும் அவர்களின் உள்ள நிலைக்கு இரங்கி நாம் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால் நம் உணர்வும் அதே சுழற்சியில் சென்று விடுகிறது.

அப்பொழுது அவர்களின் உடல் அமிலக் கூட்டின் எண்ண அலையை நம் ஈர்ப்புக்குள்… “அவர்கள் பால் செலுத்தும் எண்ணத்தால்” எடுத்துக் கொள்கிறோம்.

நம் உணர்வுகள் “பாவம்…!” என்ற பரிதாபச் சுழற்சி வட்ட உணர்வு அமிலத்தை ஏற்பதினால்… நம்முள் உள்ள உயர் குண அமில சக்தியினைப் பிறர்பால் செலுத்தும் உணர்வின் எண்ணத்தால்
1.நம் நிலைக்கும்
2.நாம் செல்ல வேண்டிய வழிக்கும் தடை ஏற்படுத்துகிறது.

நற்சக்தியை… ஆண்டவன் என்ற நிலை அடைய… ஆண்டவன் பால் செல்ல எல்லா உயிர் ஆத்மாக்களிடமும் அன்பைச் செலுத்துங்கள்..! என்று இன்றைய கலியில் பல மகான்களாக ஞானத்தின் வழித் தொடரில் வந்த நாம் அறிந்த பலரும் கூறியுள்ளார்கள்.

இருப்பினும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களின் பிம்ப உடலில் பல இன்னல்களைப் பெற்று அதே செயலில் உடல் பிம்ப வலுக் குன்றியதனால் அவர்களின் வாழ்நாட்களில் பல சக்திகளைப் பெற்றிருந்தும் இவ்வுணர்வின் எண்ண செயல்முறை செலுத்தும் வழி முறை அறியாமல் பிறரின் எண்ண உணர்வு நிலையின் சுழற்சியில் சிக்கி விட்டனர்.

இராமகிருஷ்ண பரமகம்சரும் விவேகானந்தரும் ரமண மகரிஷியாகப் பலர் போற்ற இருந்தவரின் நிலையும் இன்னும் இவர்களைப் போல் ஞானத்தின் ஈர்ப்பில் வந்தவர்களும்
1.எண்ணத்தின் உணர்வைப் பிறர்பால் “பரிதாபம்” கொண்டு செலுத்தி
2.இவர்கள் செலுத்திய அன்பின் பரிதாப நிலையினாலேயே
3.அவர்களின் உணர்வு எண்ண அலையின் ஈர்ப்பு இவர்கள் உடலிலும் “சாடியது…”
4.அதனால் தான் ஞானத்தின் வழி பெற்றிருந்தும் உடல் பிம்பக் கூட்டைக் காக்க முடியவில்லை.
5.உடல் பிம்பக் கூட்டிற்கு மட்டுமல்ல… நாம் எடுக்கும் உணர்வின் எண்ண உயர் ஞானச் செயலுக்கும் “இவை எல்லாம் தடைக்கற்கள் தான்…!”

இம்மனித பிம்ப உடல் “உணர்வு எண்ண ஈர்ப்பிற்கு” மிகவும் சக்திவாய்ந்த நிலையுண்டு…!

எண்ணமுடன் எடுக்கும் சுவாச அலையில் காந்த மின் ஈர்ப்பு குண உயிரணுக்களாக இவ்வுடல் முழுமைக்கும் ஈர்த்தெடுத்து வெளிக் கக்கும் இவ்வலையின் ஈர்ப்பு நாம் எடுக்கும் எண்ணத்தில் ஈர்ப்புடன் மோதுகிறது.

இங்கு இப்பொழுது உணர்த்தும் முறை கொண்டு
1.பிறர்பால் அன்பு செலுத்திடலாகாதா..?
2.பிறரிடம் இரக்கம் காட்டிடலாகாதா..?
3.பிறருக்கு நம்மால் முடிந்த தான தர்மங்கள் அளித்திடலாகாதா..? என்று கேட்கலாம்…!

பிறர்பால் அன்பைச் செலுத்தாதீர்…!

“பிறருக்கு அன்பான குண நிலை பெறவேண்டும்…” என்ற
2.அன்பலையை அவர்கள் வளர்க்க
3.அவர்களுக்கு “நம் எண்ணத்தால் நல் நிலை பெறட்டும்…” என்று
4.இந்த உணர்வைச் செலுத்துங்கள் “அன்பாக்கி..!”

நம்மைச் சார்ந்தவரும் சரி… நாம் கண்டுணர்பவரும் சரி… அவர்கள் படும் துயரமுடன் நம் உணர்வையும் பரிதாபமாக்கி… நம்மையும் பரிதாபப்படுத்திக் கொண்டு..
1.அவர்கள் அலையுடன் நாம் ஒன்றாமல் - நம் சக்தி அலையைக் கொண்டு
2.அவர்களுக்கு நல் நிலை நடக்கட்டும்..! என்ற ஒளி அலையைப் பாய்ச்சுங்கள்.

அவர்கள் உயரவும்… உடல் நலம் பெறவும்.. நம் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு
1.”நல் நிலை” அவர்கள் பெற நம் உணர்வின் எண்ணம் செல்ல வேண்டுமேயன்றி
2.நம் உணர்வையும் எண்ணத்தையும் அவ்வுணர்வின்பால் செலுத்திடலாகாது.

அதே போல் தர்ம நிலைக்கும்… இரக்கத்தின் உணர்வால் ஒன்றி தர்மம் செய்யாமல் “பல துயரங்களில் அவர்கள் உள்ளார்கள்…” என்ற இரங்கிய தர்மம் தராமல்
1.நாம் தரும் தர்ம ஈகையினால் அவர்கள் பெற்று உயர வேண்டும் என்ற உயர்ந்த உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி
2.நாம் தரும் தர்மம்… பெறுபவரையும் உயரும் எண்ணத்திற்குச் செல்லும் முறையில்
3.நம் தர்ம முறையும் இருக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் நம் ஞானத்திற்கு…
1.பிறரின் ஈர்ப்பால்
2.அவர்களின் குண ஈர்ப்பின் எண்ணமுடன் நாம் ஒன்றியவுடன்
3.நம் நிலையும் மாறும். (இது முக்கியம்)

நாம் அறிந்த பல ஞானிகளும் அவர்கள் இரங்கிப் “பிறர்பால் செலுத்திய அன்பினாலேயே..” அவர்கள் ஞானமும் குறைந்தது.

யாம் சொல்லும் இத்தகையை பரிபக்குவ உணர்வைக் கொண்ட எண்ண ஜெபத்தில் எடுக்கும் நிலையைக் கொண்டுதான்
1.நம்முள் சேர்ந்துள்ள அமில குணத்தின் வளர்ச்சியினால்
2.சக்திவாய்ந்த ஒளி அலையின் காந்த மின் அலையின் ஈர்ப்பை
3.அந்த மெய் ஞானிகளிடமிருந்து பெற முடியும்.