சூரியன் தன் சக்தியை
இழந்தால் அது மீண்டும் கரைந்து விடும். மனிதர்களாக நாம் உருவாகி வாழ்ந்து மடிந்த
பின் புதைத்தால் இந்த உணர்வின் தன்மை கரைந்து விடுகிறது. நம் உடல் மற்றொன்றுக்கு
இரையாகின்றது.
இதைப் போன்று தான்
சூரியக் குடும்பம் இருக்கிறது என்றால் இந்த 27 நட்சத்திரங்களும் சூரியக்
குடும்பங்களாக மாறுகின்றது,
1.கார்த்திகை நட்சத்திரம்
சூரியனாக மாறுகின்றது…
2.ரேவதி நட்சத்திரமும்
சூரியனாக மாறுகின்றது.
3.இந்த இரண்டு
மட்டுமல்ல மற்ற நட்சத்திரங்களும் சூரியனாக மாறிக் கொண்டிருக்கின்றது.
4.முழுமையாக மாறி
விட்டால் நம் சூரியனுக்குக் கிடைக்கக்கூடிய ஆகாரத்தை அது பகிர்ந்து கொள்கிறது.
அப்பொழுது நம் சூரியன்
முதுமை அடைகின்றது, இப்படி ஒரு சரி பகுதி நட்சத்திரங்கள் சூரியக் குடும்பங்களாக மாறிவிட்டால்
நம் சூரியனுக்கு இரை இல்லை.
அப்பொழுது இந்தச் சூரியனின்
சுழற்சியின் தன்மை அதனின் ஈர்ப்பு வட்டம் குறையும். அதனின் ஈர்ப்பு வட்டத்தில்
இருக்கும் நம் பூமியோ அந்தச் சுழலான சுழற்சியான பின் அதற்குள் போய்க்
கரைந்துவிடும்… ஆவியாக மாறும்.
மற்ற இந்த 27 நட்சத்திரங்கள்
இருக்கிறதல்லவா…! இதிலே ஒவ்வொன்றும் மாறிப் போகும் இதனுடைய உணர்வுகள்… அதற்கு உடலாகி
இதனின் உணர்வின் தன்மை மாறும்.
இப்படித்தான் 2000 (நட்சத்திரங்கள்)
சூரியக் குடும்பங்கள் ஓர் குடும்பமாக மாறுகிறது. நம் பிரபஞ்சத்தில் இந்த 27 நட்சத்திரங்களும்
27 சூரியனாக மாறிவிட்டால் இது ஒரு வட்டமாகின்றது… பேரண்டமாகின்றது.
இதன் வளர்ச்சி இதே போல்
மாறி மாறித் தான் தன் பெருக்கத்தின் நிலைகள் கொண்டு 2000 சூரியக் குடும்பங்களாக வளர்ந்தது.
1.நான் வெறுமனே சொல்லவில்லை…
2.படிக்காதவன் தான் இதைச்
சொல்கிறேன்…
3.படித்திருந்தால் இதை
எல்லாம் தப்பாகத் தான் சொல்லியிருப்பேன் என்று நினைக்கின்றேன்.
குருநாதர் கொடுத்த உணர்வின்
தன்மை வரும் பொழுது நீங்களும் இதைப் பதிவாக்கி
1.இந்த உண்மைகளை நுகர்ந்து
அண்டத்தையும் அறியலாம்
2.அதை இந்தப் பிண்டத்திற்குள்
வளர்க்கவும் செய்யலாம்.
3.இந்த உடலுக்குப் பின்
பிறவியில்லா நிலையை அடையவும் செய்யலாம்.
அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.