ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 30, 2019

பொருளை ஈட்டும் நோக்கத்தையே முன்னிலைப்படுத்தி வளர்ந்து வரும் மருத்துவ விஞ்ஞானத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


உணர்வுடன் கூடிய எண்ணத்தால் வரக்கூடிய வியாதிகள் மனிதனுக்கு மட்டும் தான் உண்டு.

கை கால் உணர்விழந்து வாதப்பிடிப்பு நோய்கள் எப்படி வருகின்றன…?

1.கோப உணர்வை வளரவிட்டுப் படபடக்கும் உணர்வுடன்
2.சலிப்பு சோம்பல் என்ற சங்கடத்துடன் கோப உணர்வின் அலையை மீண்டும் மீண்டும் எடுத்து அதனை அடக்கி
3.தன் சந்தோஷ உணர்வைக் கூட்டிக் கொள்ள உந்தலை அடக்கி
4.மற்றொரு உணர்வின் ஈர்ப்பில் எண்ணத்தைச் செலுத்திச் செலுத்தி
5.கோபத்தினால் வரக்கூடிய விளைவுகளைக் கண்டு அஞ்சி
6.சந்தோஷத்தால் மாற்றியமைக்க முடியும் என்ற தன் எண்ணத்தை மாற்றியமைத்து
7.இன்பம் என்று எதனைச் செயல்படுத்த எண்ணுகின்றானோ
8.இவ்விரண்டு அலைகளும் இவன் உணர்ந்து எண்ணும் எண்ணத்தால் சுவாசமுடன் மோதுண்டு
9.சத்ரு மித்ரு நிலையாகி நரம்புகளின் இயக்கத் தன்மை குறைவாகி உணர்வின் ஈர்ப்பு நரம்புகள் பாதிக்கப்பட்டு
10.சிறு மூளை பெருமூளை நரம்புகள் சரிவர இரத்த ஓட்டங்கள் ஓடப் பெறாமல் சில அடைப்புகளாகி
11.அதனால் வரும் வியாதிகள் தானப்பா இந்த வாத நோய்கள் எல்லாம்.

தோல்களில் ஏற்படும் சர்ம வியாதிகள் எப்படி வருகின்றன…? கட்டிகளும் சில புண்களும் எப்படி வருகின்றன…? உடலில் உள்ள பாக்கித் தன்மை எல்லாம் சரி வர இருந்தாலும் சர்மங்களில் ஏற்படும் ஒரு சில வியாதிகள் எப்படி வருகின்றன…?

உடலில் உள்ள சிறு உறுப்பிற்கும் நகம் முதற் கொண்டு ரோமங்கள் வரை ஜீவ சக்தி இருந்தால் தான் சீராக வளர்கின்றது. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அதற்குகந்த அமில ஈர்ப்பை அந்தந்த உறுப்புகளே தனக்குகந்த ஆகாரத்தைத்தான் எடுத்து வளர்கின்றது.

நகத்தின் அமிலமும் பற்கள் ரோமம் எலும்பு சதை எல்லாமே அதனதன் குண அமில ஆகாரத்தைத் தன் ஈர்ப்பின் சுவாசத்தால் எடுத்துத் தான் வாழ்கின்றன.

இப்படி வாழும் நிலையில் சர்மங்களில் அந்தந்த இடங்களின் ஈர்ப்பு ஜீவ சக்தி பாதிக்கும் பொழுது அதற்குகந்த துடிப்பு உணர்வை எடுக்காத முறையில் ஏற்படுவது தான் உடலில் ஏற்படும் சில கொப்பளங்களும் நகங்களின் வெடிப்புத் தன்மையும்.

ஈறுகளில் ஏற்படும் விஷ அணுக்களின் தாக்குதலினால் பற்களில் வியாதியும் சில அமில பாதிப்பால் ரோம (தலை முடி) வளர்ச்சி குன்றி உதிர்வதும் ஏற்படுகின்றன.

மனித எண்ண உணர்வு நிலைக்கொப்ப வியாதிகள் வரும் பொழுது இன்றைய விஞ்ஞானத்தால் சில செயற்கை முறை கொண்ட மருத்துவத்தால் பல சாதனைகளைச் செய்கிறார்கள்.

டி,பி வியாதிக்கெல்லாம் அந்த வியாதிக் கிருமியை அழிக்க அதற்கு மேல் சக்தி கொண்ட சில மருந்துகளைச் செலுத்தி இவ்விஷ விரிய சக்தி உடலைப் பாதிக்காமல் இருக்க அதற்கு மாற்று மருந்தையும் அதனுடன் உட்கொள்ளச் செய்கின்றனர்.

1.உள்ள வியாதியை மற்றொரு சக்தியினால் அதனை மாற்றி…
2.மாற்றக்கூடிய அச்சக்திக்கு அதன் வீரிய குண படர்ப்பு உடலைப் பாதிக்காமல் இருக்க
3.மற்றொரு மருந்தையும் தந்து தான் விஞ்ஞான மருத்துவம் இன்றுள்ளது.

புற்று நோய்க்கெல்லாம் உறுப்புகளில் எந்தெந்தப் பாகத்தில் அதிகமாகத் தாக்கப்பட்டு அதனை ஆரம்ப காலத்தில் கண்டுணரும் முறை கொண்டு அந்தந்த உறுப்புகளை நீக்கி விடுகின்றனர்.

அதாவது உயிர் வாழக்கூடிய நிலை இருந்தால் கருப்பை மார்பகங்கள் குடல்கள் இவற்றின் நிலையில் புற்று நோய் தாக்கப்பட்ட இடங்களை நீக்கிச் செயல் கொள்கிறது மருத்துவ விஞ்ஞானம்.

நீக்கிவிட்டு உயிர் வாழ முடியாத பாகமாக இருந்தால் அத்தகைய  தாக்குண்ட இடங்களில் உள்ள புற்று வியாதியை கதிரியக்கம் கொண்டு மின் அலையினால் அந்தந்தப் பாகங்களைச் செயலிழக்கச் செய்து செயல் கொள்ள வைக்கின்றார்கள்.

1.மின் அலையின் சாதனத்தால் உடல் மண்டல நரம்புகள் அனைத்தும் செயல் கொள்ளும் முறைகளையும்
2.உடல் உறுப்பின் உள் நிலைகளைக் காணக்கூடிய சாதனைகளையும் (X RAY, SCAN) இன்றைய விஞ்ஞானம் செய்கிறது.

இன்னும் பல விநோதக் கருவிகளை உருவாக்கி அதன் மூலம் உடல் முழுவதையுமே ஆராய்ந்து உயிர் காக்கும் செயல் ரூபம் அனைத்துமே
1.இன்று பொருளை ஈட்டும் வழியில் தான்…
2.விஞ்ஞான மருத்துவத்தில் வளர்ந்து கொண்டுள்ளதே தவிர
3.உணர்வின் எண்ணம் கொண்டு
4.நாம் எடுக்கும் சுவாசத்திற்கு வலுத் தந்து வளர்க்கும்
5.உன்னத சக்தியின் அலையை ஈர்ப்பார் யாரும் இல்லை…!

உடலில் தசைகளில் உருவான நோய்களை அகற்றினாலும் எண்ணத்தின் உணர்வால் உருவான “மூல வித்தை…” மாற்றியமைக்காது செய்யும் எந்த மருத்துவமும் முடிவில் பலன் அளிக்காது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் நாரதனாக்கி நண்பனாக்கிடல் வேண்டும்


இப்போது ஒரு வேதனைப்படும் மனிதனின் உணர்வைப் பார்க்கின்றோம்.
1.அவன் மீது இரக்கப்படுகின்றோம்… பாசமாக இருக்கின்றோம்.
2.உனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று அழுகின்றோம்
3.அப்பொழுது அந்த வேதனை நமக்குள் உருவாகிறது.

ஆனால் அந்த நேரத்தில் ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து கொண்டால் நாரதன். துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகரப்படும்போது இங்கே நாரதன் கலகப்பிரியன் ஆகின்றான்.

நாரதன் என்ன செய்கின்றான்…?

1.அவன் மேல் நீ பாசம் வைத்து இருக்கின்றாய்
2.அதற்கு மாறாக நீ இந்த நிலையில் நீ நட…
3.அவன் நலமாக வேண்டும்… உடல் நலமாக வேண்டும் என்று நம்மை எண்ணச் சொல்கின்றான்...!

அப்பொழுது அவனுக்கு வேதனைப்படும் அந்த எண்ணம் வருகின்றதா…? ஆக அந்த நல்ல எண்ணம் வருவதற்காக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீ பெற வேண்டும் என்று இங்கே சொல்லியிருந்தான்.

ஏனென்றால் பிடிவாதமாக நாம் என்ன சொல்கிறோம்…?
1.இவ்வளவு கஷ்டப்படுகின்றான்… நான் எப்படிப் பேசாமல் இருக்கின்றது…!
2.அது எப்படி அழுகாமல் இருக்கின்றது…
3.நான் வேதனைப்படாமல் எப்படி இருப்பது…? என்கிறோம்.

ஆனால் அந்த நாரதனோ கலகப்பிரியன். கலகமோ நன்மையில் முடியும்.
1.அந்த உணர்வின் தீமையை நீ நுகராதே…
2.அந்த அருள் ஒளி பெற வேண்டும்…
3.அவன் நலம் பெற வேண்டும்… என்ற உணர்வினை நீ சொல்லு என்று அவன் சொல்லப்படும் பொழுது
4.இந்த உணர்வின் தன்மையை நாம் உணர்வாக நுகரப்படும்போது அந்த உயர்ந்த எண்ணங்கள் வருகின்றது.

விஷ்ணுவிடத்தில் (உயிர்) அதைச் சொல்லப்படும்போது அதை அவன் என்ன செய்கின்றான்…? உருவாக்குகின்றான். அவன் வரம் கொடுத்து விடுகின்றான்.

வரம் கொடுத்த பின் உடலுக்குள் செல்லும் போது பிரம்மமாகின்றது. பிரம்மமாகும்போது இந்த உடலான சிவனுக்குள் எப்படி ஐக்கியமாகின்றது என்ற நிலையைத் தான் இங்கே தெளிவாக கொடுக்கின்றார்கள்.

ஆனால் இதனுடைய விளக்கத்தை எடுத்துச் சொல்வதற்கு ஆளில்லை. நாம் புரிந்து கொள்வதற்கும் வழியில்லை.

இன்றைய வழக்கத்தில் என்ன சொல்கிறோம்…?
1.ஒருத்தருக்கொருத்தர் நீ “நாரதர் வேலை பார்க்கின்றாய்…!” என்று தான் சொல்கின்றோம்.
2.அங்கே போய் மூட்டிவிடுகின்றான்… இங்கே கோள் மூட்டிவிடுகின்றான்… இப்படிச் செய்கின்றான்…! என்று சொல்லுவோம்.

நாரதனை நாம் அசுத்தப்படுத்துகின்றோம். ஏனென்றால் நாரதன் என்பது யார்…? அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள். அதை நாம் எடுத்துக் கொள்ளும்போது இந்தப் பகைமை என்ற உணர்வு வராதபடி தடுக்கின்றது.

ரிஷியின் மகன் நாரதன். நாராயணனின் அபிமான புத்திரன். உயிரான விஷ்ணுவிடம் வருகின்றான்… இதே உணர்ச்சிகள்… உருவாகும் பிரம்மனிடம் வருகின்றான்… இங்கே ஈஸ்வரனுடன் வருகின்றான்.

சித்திரபுத்திரன் - கண் கொண்டு பார்த்த உணர்வின் தன்மையை அங்கே வந்து நாரதன் என்ன செய்கின்றான்…? உருவாக்குகின்ற சித்திர புத்திரனிடம் சென்று நீ இந்தக் கணக்கை மாற்றிவிடு…! என்று சொல்கிறான்.
1.தீமையான உணர்வின் தன்மைகளை இங்கே தடுத்து நிறுத்தும்போது
2.அந்தக் கணக்கு அதாவது தீமையின் நிலை வளர்வது ஒன்று குறைகின்றது.

இதைப்போல உணர்ச்சிகள் ஒவ்வொன்றுக்குள்ளும் சென்று உடலுக்குள் இருக்கும் இந்திரலோகத்தைச் சீராக அமைக்கின்றான். ஏனென்றால்…
1.நம் உடலுக்குள் அது புகுந்து
2.ஒவ்வொரு உணர்விலும் இந்த உணர்ச்சிகளை எப்படி மாற்றுகின்றது…? என்ற நிலையைக் காட்டுவதற்குத்தான்
2.நாரதன் சிவனிடம் போகின்றான்… பிரம்மனிடம் செல்கின்றான்…  
3.இந்திரலோகத்திற்குச் செல்கின்றான்… இந்திரனிடம் சொல்கின்றான்...
4.ஒவ்வொருவரிடத்திலும் சென்று இப்படி அந்தத் தீமையான உணர்வுகளை மாற்றியமைக்கும் சக்தி கொண்டு
5.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் தீமைகளை அகற்றி
6.எப்படித் தீமைகள் புகாது பாதுகாக்கின்றது…? என்ற அந்த நிலையைத் தான் இங்கே இப்படித் தெளிவாக்குகின்றனர்.

சூரியன் (காந்த சக்திகள்) இந்த உலகில் எதை எதைக் கவருகின்றதோ அதன் அறிவாக செடி கொடியோ மிருகங்களோ மற்ற உணர்வுகளோ அதற்கெல்லாம் அதே இனச் சத்தைக் கொடுத்து அவன் நாராயணனாக இயக்குகின்றான்.

ஆனால் தனித்தன்மை கொண்ட உணர்வுகள் நஞ்சினை வென்று உணர்வின் தன்மை உருவாக்கியது
1.ரிஷியின் மகன் நாரதன்… தீமைகளை அகற்றக்கூடிய வல்லமை பெற்றவன்
2.சூரியன் அந்தச் சக்திகளைக் கவர்ந்து கொண்டால் நாராயணனின் அபிமானப் புத்திரனாகிறது
3.அதை நுகர்வோர் அவர்தம் வாழ்க்கையில் வந்த இருளை நீக்கி
4.அந்த மனித உடலுக்குள் ஒளி என்ற உணர்வை ஊட்டும் சக்தி பெற்றவன் நாரதன்…! என்பதைத் தான்
5.இப்படியெல்லாம் காவியங்கள் மூலம் நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது,

அதை நாம் புரிந்து கொண்டோமா…? என்றால் இல்லை…!

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை நாம் பெறுவோம் என்றால் அது பேரொளியாக நம்மை மாற்றும்.
1.நம் உயிரின் துணை  கொண்டு
2.நம் உடலில் உள்ள ஒவ்வொரு உணர்வுகளிலும்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செருகக் கற்றுக் கொள்ள வேண்டும்.
4.நான் துருவ தியானத்தில் காலையில் உட்கார்ந்தேன்…! என்று சொல்லி அந்தப் பெருமிதம் கொள்ளக் கூடாது
5.நம் வாழ்க்கையையே தியானம் ஆக்க வேண்டும்.  

நமது வாழ்க்கையில் நாம் எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றோமோ அடுத்த கணமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா பெற வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அதைத் தியானித்து நம் உடலுக்குள் பெருக்குதல் வேண்டும்.

தீமைகள் நமது உடலுக்குள் புகாது தடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்…! துருவ நட்சத்திரத்தின் ஒளி நமக்குள் பெருகி அதனின் சேமிப்பாக நம் உயிரான்மா ஒளியாக மாறும்.

November 29, 2019

மருந்து என்பது நோயை நீக்கவா… அல்லது உடலுக்கு அது உணவா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


ஒவ்வொருவருக்கும் வரக்கூடிய வியாதியின் தன்மை கொண்ட குணநிலை ஒத்துத்தான் இருக்கும்.
1.குண நிலைக்கு ஒத்த வியாதி தான் மனிதனுக்கு வருகின்றது.
2.மனிதனுக்குத் தான் பலவிதமான புதுப்புது வியாதிகள் வளர்ந்து கொண்டே உள்ளன
3.மற்ற மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் அந்த அளவுக்கு இல்லை
4.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வியாதிகள்.

தாவரங்களுக்கு ஒன்றை ஒத்த நிலையில் தான் அதனதன் வியாதி அணுப்பூச்சிகள் அவைகளைத் தாக்குகின்றன. மிருகங்களின் நிலையிலே மனித நிலைக்கு முற்றிலும் மாறு கொண்ட நிலையுள்ளது.

மிருகத்தின் உணர்வின் எண்ணம் ஒலியின் ஈர்ப்பைக் கொண்டு பழக்கப்பட்ட ஒன்றின் செயலில் செல்வதனால் ஏறக்குறைய தாவரங்களின் நிலைக்கொத்த
1.பருவக் காலங்களில் தாக்கக்கூடிய விஷ அணுக்களின் நோய்த் தன்மை
2.ஒன்றுக்கொன்று தொடர் கொண்ட “ஒட்டும் நிலையில்”
3.ஒன்றை ஒத்த வியாதியில் தான் மிருக இனம் தாக்கப்படுகின்றது.

மனிதனுக்கும் சில காலகட்டத்தில் சீதோஷ்ண நிலைக்கொப்பவும் பூமி இழுத்து வெளிப்படுத்தும் உஷ்ண அலையின் வெக்கைக்குகந்த நிலை கொண்டு அந்தந்தக் காலங்களில் வளரக்கூடிய விஷக்கிருமிகளின் நிலையினாலும் காற்றிலும் நீரிலும் தொக்கியுள்ள விஷக் கிருமியினால் சில நோய்கள் வருகின்றன.

ஜுரம் வாந்தி பேதி கண்களைக் தாக்ககூடிய சில நோய்க் கிருமிகளும் கால நிலையில் இயற்கைக்கொப்ப ஒன்றின் தொடர் கொண்டு ஒருவரைப் படர்ந்த நிலையில் ஒன்றைப் போல் பலருக்கும் (தொற்று நோய்) சில வியாதிகள் தாக்கப்படுவதுண்டு.

கால நிலைகள் மாறி… இயற்கையின் மாற்றத்தால்…
1.அவ்வணுக்களின் ஈர்ப்பு குண விஷங்களும் மாறும் தருவாயில்
2.விஷக் காய்ச்சல்கள் தொற்றிப் பலருக்கு ஒரே சமயத்தில் இந்த வியாதி வந்தாலும்
3.இவ்விஷக் கிருமியினால் தாக்கக்கூடிய வியாதிகள் தொடர் கொண்டு வளராமல்
4.சிறிது காலத்தில் அதன் குணம் மாறிவிடுகின்றது.

ஆனால்… “உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு ஏற்படும் வியாதிகள்…!” அவரவர்களின் எண்ண நிலைக்கொப்ப உடலின் அணுவின் அணுவாக ஒன்றி வளர்ந்து இந்த உடல் அழியும் வரை அதன் குணப்பிடிப்பிலேயே தான் மனிதன் சிக்கி அந்த நோயினாலேயே மாளுகின்றான்.

அம்மை வியாதிகள் மலேரியா டைபாய்டு வாந்தி பேதி போன்றும் இன்னும் புதிய புதிய விஷத் தன்மை கொண்ட வியாதிகளும் அந்தந்தக் காலங்களில் ஏற்படும் சீதோஷ்ண நிலைக்கொப்பப் படரக்கூடிய விஷத் தன்மையின் பாதிப்பு சீதோஷ்ண நிலையின் மாற்றத்தைப் போலவே அந்தப் பாதிப்பின் தன்மை வருகிறது.

இந்தப் பூமியின் ஈர்ப்பில் வெளிப்படும் உஷ்ணத்தின் விஷ அணுக்கள் இந்தப் பூமியில் வாழும் ஜீவ ஜெந்துக்களின் நிலையிலும் அதன் நிலைக்கொப்ப பூமியின் ஈர்ப்புடன் ஒன்றிய ஜீவன்களுக்கும் சாடுகின்றது. 

அவ்வலையின் விஷத்தின் தாக்குதல்… காற்றலையில் கிருமிகளாகப் படர்ந்துள்ள அந்த நிலையில்
1.தன் சுவாசத்தில் ஈர்ப்புடன் எடுப்பவர்க்கெல்லாம்
2.குறிப்பிட்ட காலத்தில் ஒரே தன்மை கொண்ட வியாதி தான் பலரைத் தாக்கும்.

அதன் பின் கால நிலையில் அதன் சக்தியின் வலுக் குன்றி மாற்றமும் கொண்டு விடுகின்றது.

இத்தன்மையான தாக்குதல்…
1.நீருடன் கூடிய ஜீவ சக்தி கொண்ட
2.உணர்வின் துடிப்பு கொண்ட எவரையும் தாக்கத்தான் செய்யும்.

தன் சக்தியையே தெய்வ சக்தியாக்கிச் சப்தரிஷியின் நிலையில் ஜீவன் கொண்டு உள்ளவனாக இருந்தாலும்… “கால நிலையின் மாற்றத்தில் ஏற்படும் சில விஷ அணுக் கிருமிகளின் தாக்குதல்…” சுவாசமுடனும்… நீருடனும்… தாக்கத்தான் செய்யும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது…!

பூமியின் நிலையுடன் கூடிய கால மாற்றமாகும் பொழுது  இவ்வணுவின் தன்மையும் மாறிவிடும். இவை இயற்கையின் உண்மையுடன் உருண்டுள்ள செயல் தொடர்பான குண நிலைகள் தாம்.

தாவரங்கள்… மிருகம்.. மனிதன்…! என்று இனம் பார்த்துத் தாக்காமல்
1.காற்றுடன் கலந்துள்ள நச்சுத் தன்மையின் செயல் வடிவங்கள் உண்டு
2.இதன் நிலையை மாற்றவோ அழிக்கவோ தப்பவோ முடியாதப்பா..!

ஏனென்றால் அதற்காக வேண்டி இயற்கைக்கு மாறாக நாம் சென்று செயற்கை வழியில் விஷமான மருந்துகளை அதிக அளவில் உட்கொள்ளும் பொழுது மற்ற நல்ல உறுப்புகளின் சீரான இயக்கத்தை அது பாதித்து விடுகிறது.

மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்குப் பதிலாக மருந்தே வாழ்க்கையாகி விடுகிறது… மருந்தையே உணவாக உட்கொள்ளும் பழக்கத்திற்கு வந்துவிடுகின்றோம்.  

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே நல்லது.

நம் உடல் உறுப்புகள் கெட்டு உடல் எப்படி நலிவடைகிறது…? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்


மனிதனின் வாழ்க்கையில் நாம் சுவாசிக்கும் சாந்த உணர்வின் இசை வேறு. ஆனால் அதே சமயத்தில் கார உணர்ச்சியின் இசை வேறு.

பாதாம் இருக்கின்றதென்றால் அதைப் பாலிலும் மற்றதிலும் போட்டுச் சுவையாகச் சாப்பிடுகின்றோம். ஆனால் அதிலே விஷம் பட்டால் என்ன செய்கின்றது…?
1.அதனின் உணர்ச்சிகள் மாறி அதனுடைய சுருதி மாறுகின்றது,
2.அதைச் சாப்பிட்டால் நம்மைச் சோர்வடையச் செய்கின்றது... மயங்கச் செய்கிறது.
3.அதே பாதாமிலே தனிக் காரத்தை இணைத்தால் “ஸ்ஸ்... ஆஆ...!” என்று அலறும் உணர்வின் தன்மை வருகின்றது.

இதைப் போல தான் சாந்த உணர்வு கொண்டு நாம் இருந்தாலும் கார உணர்ச்சிகள் இதற்குள் பட்டுவிட்டால் இந்தக் கார உணர்வின் தன்மை நம்மை இயக்குகிறது...!

அதாவது
1.கணங்களுக்கு அதிபதியாகி சாந்த குணத்தை அடக்கி
2.கார உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை வருகின்றது.
3.அது தான் கணங்களுக்கு அதிபதி கணபதி என்று சொல்வது.

இதை உணர்த்துவதற்காக வேண்டித்தான் விநாயகருக்கு ஒரு பக்கம் எலியைக் காட்டினார்கள்..! எலி என்ன செய்கிறது..?

அது தரையிலே வங்கிட்டுக் குடிகொள்கின்றது. இதைப்போல சாந்த உணர்வு கொண்டு இருக்கும் பொழுது கார உணர்வின் தன்மையை இதற்குள் சேர்த்த பின் இது அந்தச் சாந்தத்திற்குள் ஊடுருவி அதற்குள் வங்கிட்டுக் கார உணர்வாகக் குடி கொள்கின்றது.
1.அதுதான் ஓமுக்குள் ஓ…ம்
2.இந்தப் பிரணவத்தையே மாற்றுகின்றது
3.அதனுடைய இயக்கச் சக்தியையே மாற்றுகின்றது.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா..!

உதாரணமாக ஒரு குளவி ஒரு சாந்தமான புழுவின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சிக் கொட்டுகிறது. அதைத் தூக்கிக் கொண்டு வந்து தன் உமிழ் நீரால் மண்ணால் கட்டிய கூட்டுக்குள் வைத்து அடைக்கின்றது.

குளவியின் விஷம் புழுவின் உடல் முழுவதும் பாய்ந்து உடல் சருகாகி விடுகின்றது. ஆனாலும் புழுவின் உயிரும் உடலுக்குள் விளைந்த அணுக்களும் கூட்டுக்குள் அடைப்பட்டு விடுகின்றது.

அதே சமயத்தில் குளவி அந்தக் கூட்டின் மேல் உணர்வின் ஒலி அலைகளை ரீங்காரமிட்டுப் பரப்புகின்றது. விஷத்தால் தாக்கும்போது எந்த உணர்ச்சி இருந்ததோ இந்த ஒலி அலைகள் தாக்கப்படும்போது சூரியன் ஒளிக் கதிர்கள் வரும்போது கூட்டுக்குள் அப்படியே வரும்.

இந்த இரைச்சல் வரும்போது புழுவின் நினைவுகள் அனைத்தும் இந்த குளவியின் பால் வரும்.
1.அப்பொழுது அந்தக் குளவி எந்த உணர்வுகளை எடுத்ததோ
2.அதனின் உணர்வின் தன்மைகளை கூட்டின் வழியாக இந்தப் புழு ஈர்க்கும் சக்தி வருகின்றது
3.அந்த உணர்வின் தன்மை கொண்டு புழு உடலை உருவாக்கிய  அணுக்கள் அனைத்துமே அந்தக் குளவியின் ரூபமாக ஆகின்றது.

குளவியின் ரூபம் ஆனபின் குளவிக்கு எப்படி அந்த உமிழ் நீர் ஊறியதோ இதைப்போல அந்த அணுக்கள் அனைத்தும் உமிழ் நீர் கூட தொடங்குகிறது. அந்த உமிழ் நீரைப் பாய்ச்சி குளவியால் அடைக்கப்பட்ட (மண் கூட்டை) கதவைத் திறந்து வெளி வருகின்றது.

வெளி வந்தபின் தாய்க் குளவி எப்படி அது தான் வளர்ந்ததோ தன் இனத்தை வளர்த்ததோ அதே உணர்வு கொண்டு அது இயக்குகின்றது. இதெல்லாம் இயற்கையின் நியதிகள்…!

இதைப் போல தான் நாம் நுகரும் ஒவ்வொரு உணர்வுகளின் இயக்கங்களும்...!

நாம் நல்ல குணங்கள் கொண்டு பார்க்கும்போது சந்தர்ப்பவசத்தால் கோப உணர்வின் தன்மை உடலுக்குள் சென்று விட்டால் அந்தக் கார உணர்ச்சிகளைத் தூண்டி
1.நல்ல உணர்வின் அணுக்களை இந்தக் கார உணர்ச்சிகள் மாற்றி
2.”ஓமுக்குள் ஓ…ம்…” என்று உணர்வினை மாற்றி இந்த (உடலின்) ரூபத்தை மாற்றுகின்றது.

நல்ல உணர்வுகளைச் சுவாசித்து நல்ல அணுக்களாக இருக்கும்பொழுது நம் உறுப்புகளை அது சீராக்கியது. ஆனால் அதே சமயத்தில் மாறுபட்ட குணங்களைச் சுவாசிக்கும் பொழுது
1.அதனால் அணுக்களுக்குள் மாற்றங்களாகி
2.அதனால் ஏற்பட்ட உறுப்புகளை மாற்றமடையச் செய்து
3.உறுப்புகள் சுருங்குவதும் அல்லது வீக்கமடைவதும் போன்ற செயலாக்கங்களை உருவாக்கும் தன்மை வருகின்றது.

இதெல்லாம் இயற்கையின் நியதிகள். ஆனால் நாம் யாரும் தவறு செய்யவில்லை.

இயற்கையில் நுகர்ந்த உணர்வின் தன்மையால் உணர்வின் செயல்கள் எப்படி மாற்றுகின்றது… உடலுக்குள் எப்படி மாற்றங்கள் ஆகிறது…? என்பதனை நாம் தெளிவாக தெரிந்து கொள்வதற்குத்தான் நமது சாஸ்திரங்கள் இவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றது.

உலக ரீதியிலேயே மற்றவர்கள் அந்த மகான் இப்படிச் செய்தார்… இன்னது செய்தார்..! என்றெல்லாம் கூடச் சொல்லலாம். ஆனால் நமது சாஸ்திரங்கள்…
1.இயற்கை எப்படி இயங்குகின்றது…? என்ற நிலையை நாம் அறிந்து கொள்ள
2.அது ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர் வைத்து
3.மனிதனானபின் இத்தகைய தீமைகளில் இருந்து விடுபட மெய் ஞானிகள் இப்படிச் செயல்படுத்தினர்.

அந்தப் பேருண்மைகளைத் தான் உங்களுக்கு விளக்கமாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

November 28, 2019

காற்று மண்டலம் மிகவும் நச்சுத் தன்மையாகி மனிதனுடைய நல்ல குணங்கள் எல்லாம் சீர்குலைந்து கொண்டிருக்கிறது


இனி நாளைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. 2004க்கு மேல் செல்லும் பொழுது இயற்கையே நம்மை அழித்துவிடும்.

இன்றைய கால கட்டத்தில் மனிதன் தான் வாழ செயற்கைக்கு மாற்றி… கடும் விஷத் தன்மைகளைக் கொண்டு வந்ததால் மனிதனுடைய நல்ல குணங்களையே சீர்குலைக்கும் தன்மையாக இந்தப் பூமியில் பரவிக் கொண்டுள்ளது.

நம் நாட்டில் மட்டுமல்ல… உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் தான்…!
1.ஆனால் இந்த நாடு ஒன்று தப்பும்…
2.தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று
3.அந்த அகஸ்தியன் பிறந்த நாட்டில் தான் இங்கே மீண்டும் முளைக்கின்றது.

அந்த அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக ஆனான். அதனின் உணர்வைத் தான் இப்பொழுது உங்களுக்குள் பதிவாக்கிச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

1.விஜய தசமி… நம் உயிர் பூமிக்குள் விஜயம் செய்தது
2.தசமி பத்தாவது (ஒளியாக) நிலை அடையக் கூடிய மனித உடல்.
3.உயிர் உடல் பெற்று மனிதனாகும் பொழுது மகாசிவன் இராத்திரி என்று
4.இப்படியெல்லாம் காரணப் பெயர் வைத்து ஞானிகள் அவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.


அந்த ஞானிகள் கொடுத்ததை மதிக்கின்றோமா..? அரச வழியைப் பின்பற்றி தவறுகளைச் செய்யத் தான்… இந்த உடலுக்காகத்தான்… இச்சைப்படுகின்றோம்.

சாகாக்கலை என்ற நிலையில்… “அரசன் தான் எப்பொழுதும் வாழ முடியும்…!” என்ற நம்பிக்கையில் இருந்தான். அந்த ஆசையிலே கடும் பூதங்களாகி மற்றதை எத்தனை இம்சை செய்தானோ அத்தகைய அரசன் எவனும் இருந்ததில்லை.

அன்று ஆங்கிலேயர்கள் உலக நாடுகள் பலவற்றை அடக்கி மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தார்கள். இருந்தாலும் இன்று அவர்கள் நாட்டிலே அங்கே எத்தனையோ நரக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்…!

இதைப் போன்ற சாம்ராஜ்யங்களை ஆண்ட அரசர்கள் எல்லாம் எந்த நிலை ஆனார்கள்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

அடக்கி ஆள வேண்டும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் இருப்பினும் “எதை வைத்து… எதை அடக்க வேண்டும்…?”

தீமை செய்யும் நிலைகளைத் தான் நாம் அடக்க வேண்டும்.
1.அந்த அருள் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்தோம் என்றால்
2.தீமைகளை அடக்கி ஆட்சி புரியலாம்… அனைத்தையும் ஒளியாக மாற்றலாம்.

மனிதனின் வாழ்க்கையில் எது வலிமையோ அந்த வலிமை தான் முன்னணியில் இருக்கும்.

சாந்தமும் ஞானமும் விவேகமும் இன்று இருப்பினும் ஒரு கோபக்காரனைப் பார்த்தால் அந்த வலிமை நமக்குள் பயப்படும்படிச் செய்கிறது.

வேதனைப்படுவோரைப் பார்த்தால் அந்த வேதனை நம்மை நடுங்கச் செய்கிறது… நம்மைச் சோர்வடையச் செய்கிறது. அந்த வலிமை தான் முன்னணியில் இருக்கின்றது.

இத்தகைய தீமைகளிலிருந்தெல்லாம் விடுபட “கார்த்திகேயா…” என்று எல்லாவற்றையும் மாற்றியமைத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1.இந்த உபதேசத்தின் வாயிலாக துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பாய்ச்சுகின்றோம்
2.கண்களால் ஏங்கிப் பெறச் செய்து உங்களுக்குள் நுகரச் செய்கின்றோம்
3.இப்படிப் பதிவாகும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நீங்கள் எளிதில் பெற்று உங்களைக் காத்திட முடியும்..
4.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிப் பிறவியில்லா நிலை அடைய முடியும்
5.அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று என்றுமே அழியாத வாழ்க்கை வாழ முடியும்.

சர்க்கரை இரத்தக் கொதிப்பு டி.பி. கேன்சர் போன்ற வியாதிகள் மனிதனுக்கு எப்படி வருகின்றன...? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


உணர்வின் எண்ணத்தைக் கொண்டு எதனையும் மாற்றியமைக்கும் சக்தி மனிதனுக்குண்டு.

சர்க்கரை வியாதி மனிதனுக்கு எப்படி ஏற்படுகிறது…? சர்க்கரை வியாதியின் குண நலன் என்ன…?

சிறு வயது முதற் கொண்டு ஒரு நிலையான வாழ்க்கை வாழ்ந்துள்ள நிலையில்
1.அதிகமான சந்தோஷங்கள் ஏற்பட்ட காலங்களில் - சந்தோஷ அலையின் சுழற்சி வாழ்க்கையில்
2.அதன் தொடர் அலையில் ஏற்படும் சலிப்பு குணம் உந்தப்படுபவனின்
3.உடல் அமிலத்தின் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு எடுக்கும் சுவாசத்தால்
4.சர்க்கரைச் சத்து என்ற அமிலச் சுரப்பி உடலுக்கு வேண்டிய இரத்தச் சக்தியிலிருந்து
5.அதிகமான சத்து நிலைகள் சிறுநீரில் கலந்து விடுகின்றன.

மருத்துவத்தில் சில நிலைகளை (INSULIN) இந்த உடலில் செலுத்தி மருந்துகளை அந்தந்தக் காலங்களுக்கு உணவுடனும் மருந்துடன் கொடுத்துச் சமப்படுத்தலாமே தவிர பூரண குணம் கிடைப்பதில்லை.

வியாதியில் சிக்குண்ட மனித ஆத்மாவானது “ஆத்ம தியானம்” என்ற குண நிலையைச் சமமான நிலைப்படுத்தி நற்குணங்களின் ஈர்ப்பில் தன் எண்ணத்தைச் செலுத்தித் தான் எடுக்கும் ஞானத்தால் மெய் ஞானிகளின் உயர் அலையின் தொடரை உடலிலே சுவாசிக்கும் தியானத்தை மேற் கொண்டால் எந்த வியாதியையும் மாற்றி அமைக்கலாம்.

1.தான் வாழ்ந்த எண்ணச் சுழற்சியில் இருந்து கொண்டே
2.உண்ணும் உணவாலும் மருந்தாலும் மட்டும் எந்த வியாதியையும்
3.எந்த மகான் வந்தாலும்…
4.அகிலத்தையே ஆட்டுவித்த ஆட்டுவிக்கும் ஆதிசக்தியின் தொடர்பிருந்தாலும் நலம் காண முடியாது…!
5.உணர்வின் எண்ணத்தைச் சமப்படுத்தும் செயல் எண்ணம் இருந்தால் தான்
6.மனித ஆத்மாவின் உடல் பிணியும் தீரும்… உயர் ஞானமும் வளருமப்பா…!

ஏனென்றால் உணர்வால் எடுக்கும் எண்ணத்தைக் கொண்ட வியாதிகள் தானப்பா இந்த மனித உடலில் ஏற்படும் எல்லா வியாதிகளும்.

இரத்தக் கொதிப்பு எப்படி ஏற்படுகிறது…?

உணர்வின் எண்ணத்தை கோபத்தின் அலையில் எடுக்கும் சுவாசம் கொண்டு கோபத்தின் தன்மையை அதே ஈர்ப்பில் மீண்டும் மீண்டும் எடுத்து அதை வெளிப்படுத்திக் கோப அலையில் வாழ்பவனுக்கு
1.இரத்த நாளங்களின் துடிப்பு நிலை அதிகமாகி
2.உஷ்ணமான கனம் கொண்ட ஈர்ப்பின் சுவாசத்தால்
3.உணர்வின் கொதிப்பே இரத்தக் கொதிப்பாகின்றது.

சஞ்சலம் கொண்ட சலிப்புக் குணத்தின் ஈர்ப்பின் உணர்வின் எண்ணச் சுவாசம் தான் புற்று நோய்க்கும் எலும்புருக்கி நோய்க்கும் வித்தப்பா…!

காமாலையும் உப்புச் சத்தும் எப்படிக் கூடுகின்றன…?

தன் உடலின் உறுப்புக்களின் சுரப்பி நிலைகளுக்கொப்ப அவன் செய்யும் வேலைகளும் அவ்வுடல் நிலையின் சக்திக்கு மேல் உடல் உழைப்பும் உறங்கும் கால நிலையும் மாற்றியமைக்கப்பட்டால் இத்தகைய வியாதிகள் வரும்.

ஏனென்றால் கடினமான உழைப்பால் உடலிலிருந்து வெளிப்படும் வியர்வையிலிருந்து உடலிலுள்ள அமில உப்புக்கள் வெளிப்பட்டு விடுகிறது.

அந்த நிலையில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்த ஆகாரங்கள் உண்ணும் பொழுது அந்த உடலின் தன்மையில் அவை ஏற்கப்படாமல் நுரையீரல் பாதிக்கப்பட்டு விடுகிறது.

ஆக… இரத்தத்தைச் சுத்தப்படுத்தக்கூடிய சில அவயங்களில் இவன் உண்ணும் உணவால் உடலில் ஏற்கனவே இருந்த சத்துக்கள் வெளிப்பட்டவுடன்
1.இந்தக் கனமான கொழுப்பு நிலை கொண்ட ஆகாரங்கள்
2.செயல்படாத நிலையில் தான் இம்மாதிரி வியாதிகள் வருகின்றன.

கோபத்தைத் தன்னுள் அடக்கி அடக்கி… பிறர் மத்தியில் தன்னைச் சாந்தமானவனாகக் காட்டுபவனின் உணர்வின் எண்ணம் கொண்டவனுக்கு… குடல் புண்களும் (அல்சர்) சில மூல வியாதிகளும் வருகிறதப்பா…!

கோபத்தைக் கட்டுப்படுத்துவதாக… அவன் எண்ணம் வெளியில் தெரியாத இவனது குணத்தின் செயலை… உள் அடக்கிக் கொள்வதால் குடல் புண் நோய்கள் எல்லாம் ஏற்படுகின்றன.

ஒவ்வொரு வியாதியும் ஏற்படுவது இந்தத் தொடர்ச்சியில் தான்.

அதே சமயத்தில்…
1.இவ்வலைத் தொடர் கொண்ட ஆவிகளின் தொடர்ச்சியும்
2.பலவீனமான உணர்வுடன் நாம் எடுக்கும் சுவாசத்தால் பலவீனம் கொண்ட தொடர்பலையின் ஈர்ப்பும்
3.அந்தக் குணம் கொண்ட ஆவிகளின் தொடரும் நம்முள் எறிக் கொள்கின்றன.

நற்குணங்களின் ஈர்ப்பில் நாம் எடுக்கும் சுவாசத்திற்கும் இந்தக் குணமுண்டு. நாம் எடுக்கும் எந்தத் தொடருக்கும் இந்தக் குணமுண்டு.

நல்லவையானாலும்… தீயவையானாலும்…
1.இந்தச் சுவாசத்தால் எடுக்கும் உணர்வின் எண்ணச் சுழற்சியில் தான் நாம் வாழ்கின்றோம்.
2.எண்ணத்தின் உணர்வின் குண நிலைக்கொப்ப ஈர்ப்புடனே நாம் சுழல்கிறோம்.  

நம் சுவாச நிலையை ஞானிகளுடன் தொடர் கொண்டு உயர்வாக்கி விட்டால் இந்த வாழ்க்கையில் வரும் இடரினை அகற்றிடும் சக்தி பெற்று நோய் வராது தடுத்து அந்தச் சித்தர்களுடனும் சப்தரிஷிகளுடனும் ஐக்கியமாகலாம்.

November 27, 2019

“தங்கம் செய்யப் போகிறேன்” என்று ஆசை கொண்டவர்களின் கடைசி நிலைகள்…?


சாகாக் கலை என்றும் வேகா நிலை என்றும் இருந்தாலும்  சாகாக் கலை தான் பெரிது..! என்பார்கள்.

ஏனென்றால் சாதாரணமாக நாடி சாஸ்திரம் பார்க்கின்றோம் என்றாலும் சரி வைத்திய ரீதியில் பார்க்க வேண்டுமென்றாலும் சரி…
1.சாகாக்கலை தெரியுமா…?
2.காயக்கல்பம் செய்து இந்த உடலை அழியாமல் நாம் வைத்து கொள்ள வேண்டும் என்பார்கள்.

போகர் பன்னிரெண்டாயிரத்தை வைத்து வாதிப்பதற்கு நிறையப் பேர் வருவார்கள். ஆனால் போகர் பன்னிரெண்டாயிரம் போகர் எழுதியதா…?

போகருக்குப் பின்னாடி வந்தவன் எழுத்து வடிவு வந்த பின் அதன் தத்துவத்தை எடுத்து இந்த உணர்வின் தன்மையை நாடிகளை எழுதி வைத்தான்.

இதிலே போகன் வெளிப்படுத்திய உணர்வுகள் மற்ற உணர்வுகள் சேர்த்து ஒன்றோடு ஒன்று சேர்க்கப்படும்பொழுது தங்கம் எப்படி வரும் என்கிற நிலை உண்டு.

மனதை எப்படி தங்கமாக்க வேண்டும் என்று போகர் சொன்னார்.

ஆனால் போகர் பன்னிரெண்டாயிரத்தைப் படித்துக் கொண்டு புறத்திலே தங்கம் செய்வதிலே போய் கொண்டிருப்பார்கள். இருக்கின்ற சொத்தை எல்லாம் விட்டு ஆண்டியாகச் சுற்றிக் கொண்டு இருப்பார்கள் நிறையப் பேர்.

தங்கத்தைச் செய்தால் செல்வந்தராகலாம்…! என்ற ஆசை கொண்டு பேய் மனம் பிடித்து இன்றும் சுற்றுபவர்கள் நிறைய இருக்கின்றார்கள்.

சும்மா அதையும் இதையும் போட்டு பல மூலிகைகளையும் இலைகளைப் போட்டுப் பச்சையாகித் தங்கமாகி விட்டது என்றால் அடுத்தவரிடம் காண்பித்து
1.இந்த மாதிரி நிறையச் செய்தால் லாபம் கிடைக்கும் என்று
2.இவனும் போய்… அடுத்தவர்களையும் இழுத்துக் கொண்டு போய் கடைசியில் பணத்தை இழந்தது தான் மிச்சம்
3.இந்த மாதிரிச் செய்து கொண்டு போவார்கள்.

குருநாதர் ஒரு சமயம் என்னிடம் (ஞானகுரு) ஒரு இரும்புக் கரண்டியும் ஈயமும் எடுத்துக் கொண்டு வாடா…! என்றார். காட்டுக்குள்ளே கூட்டிக் கொண்டு போனார்.

பல குப்பைகளை எடுத்து வரச்சொல்லி எல்லாம் போட்டு வேக வைடா…! என்றார். அவர் சொன்ன இடத்தில் தேடித் தேடித் தேடி எடுக்க வேண்டும். இந்த குப்பையை எடு அந்த குப்பையை எடு…! என்று எனக்கும் தெரியாமல் அவர் அதைச் செய்தார்.

அவர் என்னென்ன சொன்னாரோ எல்லாவற்றையும் நான் எடுத்துக் கொண்டு வந்தேன். இரும்புக் கரண்டியிலே போட்டு ஈயத்துடன் எரித்தவுடனே இந்த உணர்வுகள் பட்டவுடனே ந்த ஈயம் தங்கமாகிப் போய்விட்டது.

அதை எடுத்துக் கொண்டு போய் தங்க ஆசாரியிடம் கொடுத்து உறைத்துப் பார்ததவுடனே அவர் என்ன சொல்கிறார்…?

1.அடேங்கப்பா…! இந்தத் தங்கத்தில் கொஞ்சம் செம்பைச் சேர்த்தால் உயர்ந்த ரகம் என்று சொல்கிறார்.
2.நீ அந்தச் சாமியாருடன் (ஈஸ்வரபட்டருடன்) வீட்டை விட்டுச் சுற்றிக் கொண்டே இருப்பது இப்பொழுதுதான் தெரிகின்றது
3.எனக்கு நீ வேண்டியதை கொண்டுவாப்பா நான் எல்லாம் விற்றுத் தருகின்றேன் என்கிறார்.

சரி என்று சொல்லிவிட்டு வந்தவுடன் அந்த ஆசை வருகின்றது. ஆசை யாரை விட்டது…? குருநாதர் செய்தார் பார்த்தேன்… எனக்கும் ஆசை வருகின்றது.

குருநாதர் என்னென்ன சொன்னாரோ அதை மாதிரி நானாகவே ஈயக் கட்டியை  எடுத்துக் கொண்டு வந்து போட்டேன்.. குப்பையைப் போட்டு எரித்தேன்… பார்த்தால் தங்கமாகி விட்டது.

தங்கமாகியவுடனே கொண்டு போய் விற்று விட்டு வந்தேன். வரப்போகும்போது குருநாதர் என்ன செய்தார்…?

இங்கே வாடா…! என்றார். என்னிடம் இருந்த காசை எல்லாம் பிடுங்கினார். இங்கே எத்தனை பிள்ளைகள் இருக்கின்றார்கள்…? அவர்களுக்கெல்லாம் இதைக் கொடு…! என்றார்

எல்லாவற்றையும் வாங்கிவிட்டார். எனக்கு ஒரு ரூபாய் கையில் கொடுத்தார்.

1.இனிமேல் இந்த வேலையைச் செய்யாதே
2.நீ இதைத் தெரிந்து கொண்டாய் என்ற நிலையில் எதிலேயடா ஆசைப்படுகின்றாய்…?
3.உன் மனதைத் தான் தங்கமாக்கச் சொன்னேன்…!
4.உன் மனதைத் தங்கமாக்க வேண்டுமே தவிர… நீ தங்கத்துக்கு ஆசை பட்டால்
5.உன் மனம் பித்தளையாகப் போகும் இரும்பாகப் போகும்…! துருப் பிடித்துவிடும்.
6.இனிமேல் இந்த வேலையைச் செய்யாதேடா…! என்றார் குருநாதர்.