ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 14, 2019

எலும்புருக்கி நோய் (T.B.) வராது தடுத்துக் கொள்ளுங்கள்


நம்மிடம் நல்ல குணம் இருக்கின்றது. இரக்க குணத்துடன் வேதனைப்படுவோர் உணர்வுகளை எல்லாம் நாம் நுகர்ந்தவுடன் இங்கே வந்து விடுகின்றது.

வந்தவுடன் அது நம் உடலிலுள்ள நல்ல அணுக்களை என்ன செய்கிறது? நல்ல அணுக்கள் அதனின் உணர்வை எடுக்க முடியவில்லை. ஆனால் அந்த நல்ல உணர்வுகளால் தான் நம் உடல் வளர்ந்து இருக்கிறது.

வேதனை அணுக்கள் பெருகிய பின் ஈரல்களிலோ தசைகளிலோ அந்த செல்கள் மாற்றம் ஆகும். இது வளர்ச்சி கண்டவுடனே இது அணுவாக மாறி விடும். நல்ல செல்கள் மடிந்து விடுகின்றது.

ஆகவே வேதனை என்ற அணுக்கள் ஆக்கிரமிப்பு செய்தவுடனே அதனால் உருவாக்கப்பட்ட தசைகள் வளரும். அதனால் டி.பி. போன்ற நிலைகள் உருவாகின்றது.

அதைத் தடுக்க வேண்டும் என்றால் விஞ்ஞான அறிவு கொண்டு ஸ்ட்ரொப்டொமைசின் (STREPTOMYCIN) போன்ற இதற்கு எதிர்மறையான அணுக்களை உடலுக்குள் செலுத்துகின்றார்கள். இதனுடைய மலத்தை அதிகமாக்கப்படும் போது டி.பி.யினால் உருவான அணுக்களுக்கு எதிர் நிலையாகின்றது.

ஒன்று இரண்டு தொக்கி இருக்கக்கூடிய அணுக்கள் என்ன செய்கின்றது? அதற்கு நீங்கள் ஆகாரம் கொடுத்தீர்கள் என்றால் அந்த அணுக்கள் வளைகின்றது. இல்லை என்றால் எலும்பை உருவாக்கிய அணுக்கள் அதிகமாக மடிந்து விட்டதென்றால் ஒன்றும் செய்ய முடியாது.

எலும்பு மிகவும் நலிந்து போனதென்றால் ஒன்றும் செய்ய முடியாது. பூராம் தவிடு மாதிரி ஆகிப்போகும்.

மருந்து கொடுக்கின்றார்கள் என்றால் நம் உடலில் போய் இது புது அணுவாக உருவாகும். அதற்கு எதிர்மறையானால் டி.பி. அணு வளர்ச்சியைக் குறைக்கும். இப்படித் தான் சில மாற்றங்களாகி அதற்குத்தக்க வேறு சத்துள்ள அணுக்களைக் கொடுத்து இந்த அணுக்களை உரு மாற்றச்செய்வது.

டி,பி, வந்தவர்கள் முதலில் ஒல்லியாக இருப்பார்கள். இந்த மருந்து சாப்பிட்டவுடனே புஷ்ஷ்ஷ்,,,, என்று உப்பிப் போவார்கள். இந்த நோயால் இருக்கப்படும் போது இந்த உணர்வினுடைய ரூபங்களே வேகமாக மாறும்.

ஆனால் அதிலே சரியான ரத்தச் சத்து இருக்காது. அந்த அணுக்களின் வளர்ச்சியினால் மொத்த உடலுமே உப்புசமாக வந்து விடுவார்கள். அப்புறம் அதை அடக்குவதற்குச் சில வித்தியாசமான நிலைகளில் வரும்.

ஆகவே ஒரு உணர்வின் அணுக்கள் வளர்ச்சி பெறப்படும் போது மற்ற அணுக்களை மாற்றி அதற்குத் தக்க அதனுடைய மலம் நம் சரீரம் ஆகிறது.

வேதனை வேதனை என்று வேதனையைச் சுவாசித்தால் சுவாசப்பைகளில் விஷத் தன்மை கொண்ட அணுக்கள் படர்ந்து அது நுரையீரலை வலு இழக்கச் செய்கின்றது. சுவாசித்த உணர்வுகள் உமிழ் நீராகி குடல் பாகங்களையும் பாதிக்கின்றது.

இதை எல்லாம் மாற்றிக் கொள்வதற்கு நாம் எப்படித் தியானம் செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரல் முழுவதும் படர்ந்து நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வின் தன்மையைச் சுவாசித்து உங்கள் சுவாசப்பைக்குள் செலுத்துங்கள்.

நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை நுரையீரலுக்குள் செலுத்தி அதை வீரியமடையச் செய்யுங்கள்.

உங்கள் சுவாசத்தைச் சீராக இயக்கும் அந்த அணுக்களை வீரியமாக்கி தெளிந்த உணர்வின் தன்மையை அது உங்களுக்குள் பெறக்கூடிய தகுதி பெறச் செய்வதே இந்தத் தியானம்.
1.நுரையீரல் இப்பொழுது நல்ல உற்சாகம் அடையும்
2.சளி இருந்தாலும் அது குறையும்.
3.ஆஸ்த்மா இருந்தாலும் அல்லது டி,பி இருந்தாலும் கேன்சருக்குண்டான அணுக்கள் இருந்தாலும் அதையெல்லாம் மாற்றி
4.நுரையீரலைத் தெளிவாக்கும் தன்மை வருகின்றது.

டி.பி. உள்ளவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள எலும்புகள் முழுவதும் படர்ந்து எலும்பை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நாளைக்கு ஒரு ஐம்பது தடவையாவது செய்ய வேண்டும்.

இந்த எண்ணத்தை ஏங்கி வலுப் பெறச் செய்தால் டி.பி நோய் வராது நிச்சயம் தடுக்க முடியும்.