சாமிகள் (ஞானகுரு) உபதேசம் கொடுக்கும் பொழுது அதிகமாக
உபயோகப்படுத்தும் பரிபாஷைகளில் (உபதேசத்தில் அடிக்கடி வெளிப்படுத்தும் சொற்கள்)
1."தன்மை" என்று இணைத்துப் பேசுவார்
2."நிலைகள்" என்று இணைத்துப் பேசுவார்
3.சுமார் 15 நிமிடம் உபதேசத்தில் குறைந்தது 20
- 50 தடவை இதை உபயோகிப்பார்.
4.இது போக சில பரிபாஷைகள் ஒரு "இது… ஒரு அது"
5.அதே போல ஒரு... "இதை… அதை…" என்றும்
சொல்வார்.
6."ஆக.." "ஆகவே..." "நமக்குள்..,
தனக்குள்..." என்றும் நிறையச் சொல்வார்.
7.இதற்கு முழுமையான அர்த்தங்களை அவரை எண்ணித் தியானித்தால்
முழுவதும் தெரிந்து கொள்ள முடியும்.
எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.
27 நட்சத்திரத்தின் ஆற்றல்கள் கொண்டு தான் எல்லாமே
இந்தப் பிரபஞ்சத்திற்குள் கலவைகள் ஆகின்றது. ஒன்று ஏற்றுக் கொள்ளும் ஒன்று ஏற்றுக்
கொள்ளாது.
இப்படிப் பல கலவைகள் மாறி மாறி… “சில காரணங்களுக்கு
ஒத்துப் போவதும் சில காரணங்களுக்காக ஒத்துப் போகாதுமாக…!” இப்படி மாறி மாறி எண்ணத்தில்
எண்ண முடியாத கலவைகள் ஒவ்வொரு நொடிப் பொழுதும் மாற்றங்கள் நமக்குள்ளும் சரி எல்லாவற்றிலும்
சரி ஆகிக் கொண்டேயுள்ளது.
1.50 வருடத்திற்கு (1970க்கு முன்னாடி) முன்னால்
ஞானகுரு சொன்ன உபதேசக் கருத்துக்களும்
2.தற்சமயம் 2019ல் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்
உபதேசக் கருத்துக்களும்
3.பல கோடி கோடி கோடி ஆண்டுகளுக்கு முன்னாடி காலமே
இல்லாத நிலையில் அந்த மெய் ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளும்
4.எல்லாவற்றையும் இணைத்து அதனுடன் நம்மையும் இணைக்கும்
தன்மைக்கு
5.எல்லாவற்றுக்கும் பொருந்தும் தன்மைக்குத்தான்
இந்தப் பரிபாஷைகள் உதவி செய்யும்.
யார் இந்த உபதேசத்தைக் கேட்டாலும்… “எனக்குத்தான்
குருநாதர் இதைச் சொல்கிறார்…! எனக்காக வேண்டித்தான் சொல்கிறார்…! எனக்கு மட்டுமே தான் இதைச் சொல்கிறார்…!
என்று அது இணைத்துச் சொல்ல வைக்கும்.
அது தான் குருவின் வேலை.
சாமிகள் தன் உபதேச வாயிலாக வெளிப்படுத்தும் பொழுது
மெய் ஞானிகள் உணர்வை மட்டும் நான் சொல்லவில்லை…!
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் 27 நட்சத்திரத்தின்
ஆற்றலை எனக்குக் காட்டி
2.அந்தச் சக்தி வாய்ந்த அந்த ஆற்றல்களை எம்மைத்
தொடச் செய்து
3.அந்த உணர்வுகளை எப்படிச் சேர்த்துக் கொள்ள வேண்டும்…?
என்று உணர்த்தி அதை எம்மைப் பெறும்படி செய்தார்.
மேலும் அந்த 27 நட்சத்திரத்தின் ஆற்றல்களை ஞானிகளின்
உணர்வுடன் எந்த அளவில் நீ கலக்க வேண்டும்…? எந்த அளவு கலந்து மற்றவர்களுக்கு அருள்
ஞான வித்தாக ஊன்ற வேண்டும்…? எப்படி ஞானிகளின் உணர்வை உன்னை நாடி வருபவர்களுக்குள்
விளையச் செய்ய வேண்டும்…? என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாகக் காட்டினார்.
அவர் காட்டிய அருள் வழியில் தான் யாம் உபதேசிக்கின்றோம் என்கிறார் சாமிகள் (ஞானகுரு)
தன்மை… நிலைகள்… அது… இது… அதை… இதை… ஆக… நமக்குள்…
தனக்குள்… இப்படி சாமிகள் உபதேச வாயிலாக வரும் இந்த ஒலிகள் சொல்லாக ஞானகுரு வெளிப்படுத்தும்
பொழுது
1.அது நன்மை செய்பவனை ஞானியாக ஆக்க அவன் நல்லதுடன்
கலந்து இயக்கும்.
2.அவன் வைத்திருக்கும் நல்லது மூலமாகவே அவன் வளர்வான்
3.அந்த நல்லதுக்கு உற்சாகம் ஊட்டி அவனைச் சிறுகச்
சிறுகத் தெளிவாக்கி
4.அவன் வைத்திருப்பது நல்லது தானா,,,? இல்லையா?
எது நல்லது…? எது கெட்டது ? என்று அவன் வழியிலேயே அவனை உணரும்படிச் செய்யும்.
5.இதைப் போன்று தான் கெட்டது வைத்திருப்பவனை ஞானியாக்க
அவன் வைத்திருக்கும் கெட்டதுடன் கலந்து இயக்கும்
6.அந்தக் கெட்டது மூலமாக அவன் வளர்வான்.
7.அவனுக்கும் உற்சாகத்தை ஊட்டி அவனையும் கெட்டது
எது…? நல்லது எது…? என்று அந்தக் கெட்டது மூலமாகவே உணரச் செய்து அவனையும் ஞானியாக்கும்.
அதற்குத்தான் இந்த ஒலியின் ஓசைகள் தன்மை/நிலைகள்
எல்லாம்.
1.படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும்
2.பிடித்தவனுக்கும் பிடிக்காதவனுக்கும்
3.நல்லவனுக்கும் கெட்டவனுக்கும்
4,தெரிய வேண்டும் என்று எண்ணுபவனுக்கும் எனக்கு
எல்லாம் தெரியும் என்று சொல்பவனுக்கும்
5.இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் - எல்லோருக்கும்
பொருந்தும்படியான உபதேசமாக அது அமைவதே அந்த ஒலிகள்.
அதாவது இப்படியும் இருக்கலாம்… அப்படியும் இருக்கலாம்…
எப்படியும் இருக்கலாம்…! என்று எண்ணச் செய்துவிட்டு கடைசியில்
1.இப்படி இருந்தால்… இப்படித்தான் ஆகும்…! என்ற
மெய் ஞானிகள் கண்டுணர்ந்த மூலத்தை அறியச் செய்யும் பரிபாஷைகள் அவைகள்.
2.இது தான் எனக்குத் தெரிந்தது என்னுடைய அனுபவத்தில்
இன்னும் நிறைய இருக்கின்றது அதையெல்லாம் எழுத்தில்
பதிவு செய்ய முடியாது - அது "ஞான குருவின் உபதேச... BODY LANGUAGE" - அதைப்
பிடித்தால்… நுகர்ந்தால்… கவர்ந்தால்… சுவாசித்தால்…
மகரிஷியுடன் மகரிஷியாக நாமும் அவர்களுடன் ஐக்கியமாகலாம்.
ஞானகுருவின் உபதேசத்தின் மூலமாக நாம் எளிதில் ஞானியாக
வளர முடியும். விண்ணின் ஆற்றலைப் பெற முடியும்.