ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 2, 2019

உடலைக் காக்கும் உணர்வு சிவ தனுசு – உயிராத்மாவைக் காக்கும் உணர்வு விஷ்ணு தனுசு...!


பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் நாம் சந்தித்த தீமைகளை எல்லாம் நீக்கி நீக்கி அவ்வாறு வளர்ந்து வந்து தான் தீமைகளை நீக்கும் இந்த மனித உடலைப் பெற்றோம் – “பரசுராமன்...!”

சமப்படுத்தும் உணர்வுகள் இந்த உடலில் சேரும் பொழுது இதற்குப் பெயர் சிவ தனுசு. இந்த உணர்வுகளால் நல்லது செய்யக் கூடிய நிலை வரும். 

நாம் சாப்பிடும் உணவில் மறைந்துள்ள நஞ்சை நம் உடல் மலமாக மாற்றுகிறது. நல்ல குணங்களை உடலாக மாற்றுகிறது.

இருந்தாலும் ஒருவன் தீமை செய்கிறான் என்று பார்க்கின்றோம். அப்படிப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வை கண் வழி நாம் கவர நேர்கிறது.

கவர்ந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றச் செய்கிறது. உணர்வின் தன்மை உடலாகச் சேருகிறது. அது உடலுக்குள் சென்றவுடன் அவன் உடலுக்குள் செய்த தீங்கின் உணர்வுகள் நமக்குள் சிவ தனுசாக மாறுகின்றது.

1.அவன் தீமை செய்கின்றான் என்ற அந்த உணர்வின் தன்மை நம்மைத் தாக்கி
2.நம்முடைய சமப்படுத்தும் உணர்வை மாற்றுகிறது.
3.இராமாயணத்தை நன்றாக படித்துப்  பாருங்கள் தெளிவாகத் தெரியும்.
4.அப்பொழுது பரசுராமனுக்கும் சீதாராமனுக்கும் சண்டை வருகிறது.

பரசுராமன் சிவ தனுசை எடுக்கின்றான். சீதாராமன் விஷ்ணு தனுசை எடுக்கிறான். விஷ்ணு தனுசு என்றால் என்ன...?

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி அவன் எடுத்துக் கொண்ட உணர்வுகள் சீதா. அந்த உணர்வின் உணர்ச்சிகளைத் தூண்டும் துருவ நட்சத்திரமாக ஆனது.
1.தீமைகளை வெல்லும் சக்தி பெற்றது துருவ நட்சத்திரம்.
2.அந்த உணர்வை நமக்குள் எடுக்கும்போது அது விஷ்ணு. தனுசாகின்றது.

சூரியன் ஒளியாக இருப்பவன். அவன் நிலை விஷ்ணு. துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது.
1அந்த உணர்வின் தன்மையை நாம் எடுத்து
2.விஷ்ணுவான அந்த ஒளி உணர்வை நாம் எண்ணும் போது
3.இந்த தனுசாக நாம் மாற்ற முடியும். இது விஷ்ணு தனுசு.

இராமாயணத்தை நன்றாக உள்ளே புகுந்து படித்துப் பாருங்கள். நன்றாகத் தெளிவாகத் தெரியும். சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதா...?

ஒரு நோயாளியை நாம் பார்க்கிறோம். அவன் உடலில் விளைந்தது சிவ தனுசு. நோயாளியின் உணர்வை நுகர்ந்ததும் நமக்குள் என்ன செய்கிறது...?

நம் நல்ல மனமும் இதுவும் இரண்டும் போர் செய்ய ஆரம்பிக்கிறது. அவன் உணர்வை நமக்குள் வளர்த்து இது வெற்றி பெறும். எது...? நாம் சமப்படுத்த எண்ணுகிறோம். அந்த உணர்வின் தன்மை நல்ல குணத்தை எல்லாம் அது சமப்படுத்துகிறது.

சமப்படுத்திய பிறகு இதே விஷத்தின் தன்மை வருகிறது.   அவனைக் காக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. இந்த விஷத்தின் தன்மை மீண்டும் நுகர்ந்து அவனைக் காக்க வேண்டும் என்ற உணர்வு வலிமையாகின்றது.

இந்த மாதிரி உணர்வை வளர்த்தவர்கள் எல்லாம் யாராவது வேதனைப்பட்டாலோ அல்லது சங்கடப்பட்டாலோ அவர்களைப்  பார்த்தவுடன் தேடிப் போய் உபகாரம் செய்வார்கள்.

1.அந்த உடலைக் காக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது.
2.அப்பொழுது அது சிவ தனுசாக மாறுகிறது.
3.காக்கும் உணர்வுகளை அது செயல்படுத்துகிறது.
4.ஆனாலும் அந்த உடலிலிருந்த வேதனைகளும் சங்கடங்களும் இந்த உடலில் அது வளர்ச்சி அடையப் போகிறது.
(இதை முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்)

மற்றவர்களுக்கு உதவி செய்தவர்கள் நிலைகளை எல்லாம் கடைசியில் நீங்கள் பார்க்கலாம்.
1.நாம் எல்லோருக்கும் நான் தருமத்தைச் செய்தேன்... நல்லதைத் தான் செய்தேன்.
2.ஆனால் இப்போது நரக வேதனைப்படுகிறேன் என்று சொல்வார்கள். 
3.ஆண்டவன் என்னை இவ்வாறு செய்கிறான்... ஏனோ என்னைச் சோதிக்கின்றான்...! என்று சொல்வார்கள்.

நாம் எதை உற்றுப் பார்த்துக் கவர்ந்தோமோ அது உடலின் தன்மையாக விளைகிறது. ஒவ்வொரு நிமிடமும் நாம் சுவாசித்தது எல்லாம் உடலாக உருவாகிக் கொண்டேயுள்ளது.
1.இதை ஆள்வது யார்...? நம் உயிர் தான் அந்த ஆண்டவன்.
2.நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்கியது யார்...? நம் உயிரான ஈசன் தான்.

எதன் உணர்வை எடுத்தோமோ மீண்டும் எண்ணும் போது
1.அந்த உணர்வின் செயலாக
2.அந்த குணத்தின் செயலாக
3.அந்த உணர்வின் தன்மையாக நாம் செயல்படும் போது
4.எந்தக் குணத்தை நாம் எடுத்தோமோ அதுவே குருவாக இயக்கும்.
5.உயிர் என்ற உணர்வுகள் நமக்குள் எடுக்கும் போது உயிரே குருவாகின்றது.

உடலுக்குள் இருக்கும் அனைத்தும் குருவாக இருந்தாலும் ஒவ்வொரு குணமும் ஒவ்வொன்றும் அதன் செயலாக்கங்களில் இருக்கும் போது
1.அந்தந்த உணர்வுகளின் குணமே குருவாகிறது... செயல் தெய்வமாகிறது.
2.உணர்வு இறையாகிறது... இறையின் செயலாகும் போது தெய்வமாகிறது.
3.உணர்வின் தன்மை உடலாகும் போது சிவமாகிறது.

சாஸ்திரங்களில் இவ்வளவு தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சொல்வது அர்த்தமாகிறதல்லவா...?

ஆகவே எது நடந்தாலும் என்ன குறை இருந்தாலும் “ஈஸ்வரா...என்று அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் கணவருக்கு/ என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும். அவர்கள் இரத்தம் நாளங்களில் கலக்க வேண்டும். அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அவர்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று தினமும் காலையிலும் இரவு படுக்கச் செல்லும் போதும் இவ்வாறு எண்ணுங்கள்.

காலையில் எழுந்தவுடன் துருவ தியானம் முடிந்தவுடன் கணவன் மனைவிக்கு கிடைக்க வேண்டும் என்றும் மனைவி கணவனுக்கு கிடைக்க வேண்டும் என்றும் எண்ண வேண்டும். கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல இவ்வாறு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதில் ஒன்றும் சிரமம் இல்லை. உண்மையான தியானம் இது தான். இருவருடைய உணர்வும் கலந்தால் அந்த அருள் உணர்வுகள் வலுப்பெறும். இணைந்து வாழும் உணர்வுகள் வலுவாக்கப்படும்போது அந்த வலுவின் தன்மை கொண்டு தீமை என்ற உணர்வுகள் வராது தடுக்கும்.

எது நடந்தாலும் இது போல எண்ணிக் கொள்ளுங்கள். அந்த அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்தார். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை (விஷ்ணு தனுசை) எடுத்தேன். உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டேன்.

நீங்களும் அதைப் பெறவேண்டும் என்ற ஆசையில் இதைச் சொல்கிறேன். விஷ்ணு தனுசை எடுத்து இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை வெல்லுங்கள். உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மையை உருவாக்குங்கள்.