ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 15, 2019

“உயிரான ஈசனுடன் ஒன்றி... ஒளியாக மாறும் தியானப் பயிற்சி…!”


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களிடம் மெய் ஞானிகளின் ஞான வித்துக்களைப் பதிவு செய்து கொண்டே வருகிறேன். இதை நீங்கள் நினைவு கொள்ளும் போதெல்லாம் அந்த அருள் உணர்வு பெறுவீர்கள்.

அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் பெற வேண்டும். அதில் ஆயுள் கால மெம்பராக நீங்கள் இணைய வேண்டும்.

விண் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன் உணர்வு கொண்டு அவன் வழி நாம் சென்று இருளை அகற்றி உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி நாம் பிறவியில்லா நிலையை அடைய வேண்டும்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழும் உணர்வுகளை உருவாக்கும் நிலைக்குத் தான் இதைச் சொல்கிறோம்.
1.உங்கள் ஒவ்வொரு அணுக்களிலும் தொட்டுக் கொடுத்திருக்கிறது.
2.நீங்கள் இதை ஒவ்வொன்றிலும் இணைத்து நல்ல முறையில் பக்குவப்படுத்த முடியும்.


கணவனும்  மனைவியும் இதைப்போல நீங்கள் ஒன்று சேர்த்து இணைத்து எண்ண வேண்டும். கணவன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்றும் மனைவி கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நாம் பெருக்கிப் பழக வேண்டும்.

நம் குருநாதர் சென்ற பாதையில் நாம் அதன் வழி செல்லும் போது இதன்வழி ஒன்றாக இணைந்து அருள்வழி என்ற நிலையிலே பெரும் சக்தியை நாம் பெறுவோம்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

“ஓம் ஈஸ்வரா குருதேவா…!”  என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரை எண்ண வேண்டும். உங்கள் உயிரை ஈசனாக மதித்துக் குருவாக மதியுங்கள்.
1.உங்கள் உயிரை ஈசனாக மதிக்கிறேன்.
2.உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கிறேன்.
3.நீங்கள் எண்ணும் பொழுது உங்கள் புருவ மத்தியில் உள்ள உங்கள் உயிரான ஈசனை நான் பிரார்த்திக்கிறேன்.

உங்களை நான் அதுவாக மதிக்கின்றேன். அப்போது அதனுடன் ஒன்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் அதன் உணர்வின் தன்மையைப் பெறும் ஈர்ப்புடன் செல்கின்றேன்.

அந்தச் சக்தி பெற நாம் இப்பொழுது தியானிப்போம். சொல்வதை எல்லாம் பெறவேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

அம்மா அப்பா அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் புருவ மத்தியில் எண்ணுங்கள்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! கருணை சொரூபா… என்னை ஆட்கொண்டருள்வாய் குருதேவா… ஓம் ஈஸ்வரா… ஓம் ஈஸ்வரா…!

ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா… கருணை சொரூபா… என்னை ஆட்கொண்டருள்வாய் குருதேவா…! ஓம் ஈஸ்வரா… ஓம் ஈஸ்வரா…!

என் இசையில் நீ இசைப்பாய்… என் நினைவில் நீ வருவாய்… உன் அருளைப் பெற்றிடவே என் நினைவைத் தந்துவிட்டேன் உன்னிடம்…! ஓம் ஈஸ்வரா… ஓம் ஈஸ்வரா…!

நான் இல்லை… நீ இல்லா இவ்வுலகில்… எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா…!

நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில்… என்றால்
1.இந்த உயிரான ஈசன் இல்லாமல்
2.உடலான இவ்வுலகில் நாம் இருக்க முடியாது.

எல்லா வகையிலும் நம் உடலை வளர்த்தது நம் உயிர். எல்லா நிலையிலும்… என்றால்
1.புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்ச்சிகள் உந்தி
2.அதற்குத் தக்க தப்பிக்கும் உணர்வுகள் பெற்று
3.தப்பிச் செல்லும்… தப்பித்துக் கொள்ளும் உணர்வின் உடலாக உருவாக்கியது உயிர்.

ஆகையினால் தீமையிலிருந்து தப்பித்துச் செல்லும்
1.அந்த எல்லா நினைவையும் பெற்றிடவே
2.எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா.. என்று நம் உயிரிடம் நாம் வேண்டிடல் வேண்டும்

பாட்டை மட்டும் பாடிவிட்டு… பல நினைவில் நான் இல்லாமல்… பரி பக்குவ நிலையை எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா… ஓம் ஈஸ்வரா… ஓம் ஈஸ்வரா…!

என் நினைவை எங்கெங்கோ அலைய விட்டு… என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்… என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா…!

அதாவது “என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே இருந்துவிடு…!” என்றால்
1.நாம் எல்லா நல்லதையும் செய்கிறோம்… 
2.ஆனால் நல்லதைச் செய்து எதிர்ப்பாகி மற்றவர்கள் நமக்கு உதவி செய்யவில்லை என்றால் உடனே வெறுப்படைகிறோம்.
3.உதவி செய்தவருடைய நிலையில் ஏதாவது சிறிது குறையைக் கண்டால் வெறுப்பென்ற உணர்வை வளர்த்து விடுகிறோம்.

அப்பொழுது நமது ஆசை எதிலே போகிறது…?

நம்மைப் போற்ற வேண்டும் என்ற நிலைக்குத் தான் தள்ளுகிறது. போற்றும் நிலையைத் தவறினால் நம்முடைய ஆசையே நமக்குள் வேதனையாகிவிடுகிறது.

ஆனால் நம் உயிர் என்ன செய்கிறது…? எல்லாவற்றையும் நமக்கு உணர்த்துகிறது. உணர்வின் தன்மை ஒளியாக்கி உயிர் ஒன்றானது போல் நம் உணர்வின் தன்மை ஒன்றாகி துருவ நட்சத்திரத்தைப் போல் ஒன்றென இணைந்திட வேண்டும். அதனால் தான்
1.இந்த உடலின் இச்சை வளர்ந்திடாது உயிரின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து
2.என்றும் எல்லோரும் அந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்ற
3.அந்த அருள் உணர்வைப் பெறுவது தான் இந்தப் பாடலின்  நோக்கம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் அகஸ்தியன் துருவனாகி திருமணமாகி இரு மனம் ஒன்றென இணைந்து துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உங்கள் உயிரான ஈசனை எண்ணித் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணைத் திறந்தே ஏங்கித் தியானியுங்கள்.
1.இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் தொடர்பும்
2.நம் குருநாதர் பெற்ற உணர்வுகளும்
3.அற்புத நிலையில் உங்கள் உடலுக்குள் பாயும். அருள் உணர்வை உடலுக்குள் பெருக்கச் செய்யும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அருள் வழிப்படி அகஸ்தியன் உணர்வும் அவன் வளர்ந்த நிலையும் அவன் முழுமையடைந்த உணர்வுகளையும் பெறும் பொழுது நாம் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒன்றாக இணைகின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளினால் அகஸ்தியன் பெற்ற அருள் சக்தியும் அவர் வளர்ச்சி அடைந்த நிலைகளும் கணவன் மனைவி பெற்ற நிலையும் இருவருமே உணர்வு ஒன்றாகி ஒளிச் சரீரமான அதிலிருந்து வந்த உணர்வுகளை எல்லாம் இப்பொழுது நீங்கள் காட்சியாகக் காண முடியும்.

அதே சமயத்தில் உங்கள் உடலுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் ஊடுருவி உங்கள் இரத்த நாளங்களில் பேரொளியாகக் கலந்த அந்த உணர்வையும் நீங்கள் அறிய முடியும்.

அந்த அருள் ஒளியைப் பெற்று இருளை நீக்கவும் பொருளைக் காணவும் என்றுமே பிறவி இல்லா நிலை என்ற அந்த அருள் நிலையை நாம் பெறுவதற்குத் தான் நாம் இதைச் செய்கிறோம்.

ஏனென்றால்
1.இந்த உடலும் சொந்தமில்லை.
2.இந்த உடலால் தேடிய செல்வமும் சொந்தமில்லை.
3.ஆகவே அந்தப் பேரருளை நமக்குள் சொந்தமாக்கிக் கொள்வோம்.

“என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு…”என்ற நிலையாக இந்த உயிர் என்றுமே நமக்குள் ஒளியாக இருக்கும் “அவனுடன் அவனாக நாம் ஒன்றி… ஒளியின் சரீரமாக நிலைத்திருப்போம்… என்று பிரார்த்திப்போம்… தியானிப்போம்… தவமிருப்போம்…!

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!