எருமை மாட்டுச் சாணத்தின் குணங்கள்:-
மாடு பல தாவர இனங்களை உணவாக உட்கொள்கின்றது. அதிலுள்ள
விஷங்கள் அனைத்தையும் தன் உடலாக மாற்றுகின்றது. அதே சமயத்தில் அதிலுள்ள நல்லதைக் கழிவாகச்
சாணமாக மாற்றுகின்றது.
மாடு அந்த விஷத்தைக் கரைத்துத்தான் தன் உடலாக அதை
மாற்றுகின்றது. ஆகவே மாடு
1.தனக்குள் ஈர்த்துக் கொள்வது நஞ்சு (அதை வலுவாக்கிக்
கொள்கின்றது)
2.தன்னிடமிருந்து வெளியேற்றுவது நல்லது. (அதைக்
கழிவாக்குகின்றது)
விஷத்தை குடித்தவர்களுக்கு அந்த மாட்டின் (குறிப்பாக
எருமை) சாணத்தை எடுத்துத் தண்ணீரில் கரைத்து லேசாக அதைச் சுட வைத்து அதன் மேல் இரண்டு
பாதங்களையும் வைத்தால் உடலிலுள்ள விஷங்களை எல்லாம் ஈர்த்துவிடும்.
ஏனென்றால் மாடு அந்த விஷத்தை எப்படிக் கரைத்ததோ
உணவாக உட்கொண்டதோ அது வெளிப்படுத்தும் சாணத்தில் நல்லது அதிகமாக இருப்பதால் நம் உடலில்
விஷம் இருந்தால் அதைக் கரைத்துப் புவியின் ஈர்ப்பில் இழுத்து விடுகின்றது.
அரளிப்பூவின் குணங்கள்:-
அரளியை நாம் உட்கொண்டால் நம்மை அது மாய்த்துவிடும்.
ஆனால் அரளிப் பூவின் மணத்தை நுகர்ந்தால் நம் உடலிலுள்ள சில நஞ்சான நோய்களை அகற்றிவிடும்.
அரளிப் பூவை நாம் ஏன் தெய்வத்திற்குப் போடுகின்றோம்…!
வீட்டிலும் சரி… கோவிலிலும் சரி…! தெரிந்தோ தெரியாமலோ நம் வீட்டில் சில விஷத் தன்மைகள்
இருந்தால் அந்த மணத்தால் அது அகற்றப்படுகின்றது.
சிலர் கால் வலி மூட்டு வலி இவைகளால் துன்பப்படுவார்கள்.
அவர்கள் இந்த இலையை 4-5 எடுத்து இரவு படுக்கையில்
கால்களுக்கு அடியில் வைத்துப் படுத்தால் கால்களில் மூட்டுகளில் சேர்ந்த விஷமான நீரை
எல்லாம் எடுத்துவிடும். வலி குறைவதைப் பார்க்கலாம்.
ஏனென்றால் இந்த நஞ்சுக்கு அத்தகைய ஆற்றல் உண்டு.
ஒரு அணுவிற்குள் இருக்கும் நஞ்சின் அளவுக்குத் தக்கவாறு தான் அதனின் இயக்கத்தின் ஆற்றல்
இருக்கும்.
நஞ்சை ஒளியாக மாற்றியது துருவ நட்சத்திரம். நஞ்சை
உணவாக எடுத்து ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள் மகரிஷிகள்.
நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துப் பழகிக் கொண்டால் வாழ்க்கையில்
சந்திக்கும் எத்தகையை நஞ்சான நிலைகளக இருந்தாலும் அதை அடக்கி ஒளியாக நாம் மாற்றிக்
கொள்ள முடியும்.
வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய இன்னல்களிலிருந்தும்
விடுபட முடியும்