கேள்வி:-
தியானம் செய்ய முடியாத நாட்களில்
ஞானகுருவின் உபதேசங்களை அதிகமாக கேட்கலாமா…?
பதில்:-
உபதேசத்தை
நமக்குள் மிகவும் ஆழமாகப் பதிவு செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது. ஒவ்வொருவர்
வீட்டிலும் ஞானகுருவின் ஒலி உபதேசங்கள் அவசியம் இருக்க வேண்டும்.
1.அடிக்கடி
அதைக் கேட்டுப் கேட்டுப் பதிவாக்கி அந்த உணர்வினைச் சுவாசித்தால்
2.அதுவே
சரியான தியானமாகின்றது.
3.மீண்டும்
மீண்டும் ஞானகுருவின் உபதேசங்களைக் கேட்கும் பொழுது
4.தியானத்தின்
பலன் எதுவோ அதை விடப் பத்து மடங்கு இருபது மடங்கு அந்த தியானத்தின் பலன் கிட்டுகின்றது.
5.புரியாத
தெரியாத எத்தனையோ பல விஷயங்களுக்கு விடை கிடைக்கின்றது.
6.நம்முடைய
வாழ்க்கைப் பாதை தங்கு தடையில்லாது செல்ல ஏதுவாகிறது.
அதே போல் உபதேசத்தைக் கூர்மையாகக்
கேட்பதன் மூலம் நம் நினைவுகள் ஞானிகளின் பால் செல்கிறது. விண்ணிலே இருக்கும் சப்தரிஷி
மண்டலத்துடனும் துருவ நட்சத்திரத்துடனும் தொடர்பு கொள்ள முடிகிறது.
எந்தெந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்து
ஞானகுரு உபதேசம் கொடுக்கின்றாரோ அந்தந்த மகரிஷிகளின் பேராற்றல்களை நம்மை அறியாமலே நமக்குள்
பெறக்கூடிய தகுதியும் கிடைக்கின்றது.
உபதேசத்தைக் கேட்கக் கேட்க அதற்குள்
இருந்து புதுப் புது மெய் உணர்வுகளாக நாம் அறியக் கூடிய தன்மைக்கும் மெய் ஞானத்தின்
உண்மைகளை அறியும் சீரிய சிந்தனை சக்திகளும் அதீதமாகப் பெற முடியும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சாமிகளுக்கு
அடியும் உதையும் கொடுத்து
1.அதன் பின் குருநாதரை சாமிகள்
அதிகமாக எண்ணும் பொழுது
2.அவருக்குள் விளைந்த மெய் உணர்வுகளை
உபதேச வாயிலாக வெளிப்படுத்தும் பொழுது
3.அதைக் கண் வழியாகக் கவர்ந்து
சாமிகள் தனக்குள் அந்தச் சக்தியைப் பரிபூரணமாகப் பெற்றார்கள்,
ஆகவே நாமும் அவர் வழியில் உபதேசங்களை
நேரடியாகக் கேட்பதுபோல் கேட்டு அவ்வாறு எண்ணிப் பதிவாக்கினால் குருநாதரைப் போன்றே மெய்
ஞானியாக ஆக முடியும்.
1.தியானம் சிறிது நேரம் செய்தாலும்
2.ஒலி உபதேசங்களை அதிகமாகக் கேட்கும்
பழக்கம் வந்துவிட்டால்
3.நமக்குள் மகரிஷிகளின் அருள்
உணர்வுகள் அதீதமாக வளர்வதை நிச்சயம் உணரலாம்.
அது மட்டுமல்லாமல் வாழ்க்கையில்
வரும் எத்தகைய சிக்கல்களிலிருந்தும் விடுபட முடியும். உடலிலும் எந்த உபாதைகளும் வராது
தடுக்க முடியும். தொழிலும் மற்ற எல்லாமே சீராக அமையும்.