ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 16, 2019

சுடு தண்ணீர் ஊற்று பூமிக்குள் இருந்து மேலே எப்படி வருகிறது…?


பூமி ஓடும் பாதையில் எத்தனையோ பாறைகள் வருகிறது. வரப்போகும் போது மேலிருந்து அந்தத் துகள்கள் பூமிக்குள் வந்து கொண்டே இருக்கிறது. அதனால் பூமியின் நடு மையம் வெப்பம் அடைகிறது. உள்ளே இருக்கிற பொருள்களை எல்லாம் வேக வைக்கின்றது.

எல்லாம் வேக வைத்துக் கலந்து வெளி வரப்போகும் போது இந்த உஷ்ணத்தினால் சிறுகச் சிறுக வெடிப்பாகும். அதன் வழி கூடி அந்த இடைவெளியில் வரும்.

அந்தச் சந்து வழியாக வரப்போகும் போது இதற்குத் தக்கவாறு
1.சில நட்சத்திரத்தின் கலவைகள் ஆன பிற்பாடு இதனுடைய வெப்பம் ஆகும் பொழுது
2.சில இடங்களில் தங்கமாகும்… சில இடங்களில் யுரேனியமாக மாறும். 3.
இப்படிச் சில அடுக்கடுக்காக வரிசையில் வரப்போகும் அந்தந்தப் பாறைகளுக்கு ஒப்ப மாற்றங்கள் ஆகிறது,

அதே மாதிரி கடலில் உப்பு நீர் இருந்தாலும் அதன் அருகே இருக்கும் பாறைகளுக்கு மத்தியில் நல்ல நீர் இருக்கும். ஏனென்றால் அந்த உப்பு நீரை அது வடிகட்டித் தனக்குள் எடுத்துக் கொண்டு நல்ல நீராகக் கொடுக்கும்.

இராமேஸ்வரத்தில் பாருங்கள்…! ஒரே கிணறாக இருந்தாலும் அந்தந்தப் பாறைகளுக்குத் தக்கவாறு தண்ணீரை வடிகட்டும் போது அங்கே நான்கு விதமான தண்ணீர் இருக்கும்.

இவை எல்லாம் அன்றைக்கு ஞானிகள் கண்டு கொண்ட நிலைகள்.

இதே மாதிரிச் சில இடங்களில் பார்த்தோம் என்றால் கந்தகத் (SULPHUR) தண்ணீர் உண்டு.
1.கீழே அடியில் என்ன செய்யும் என்றால் வெப்பம் உருவாகும்.
2.வெப்பம் உருவான பிற்பாடு ஆவி (GAS) உருவாகும்.

நடு மையத்தில் கொதிகலன் ஆகப்போகும் போது அந்த ஆழத்திலிருந்து அதனுடைய வெடிப்புகள் வெடித்து வரும் பொழுது கந்தக அமிலங்கள் வருகிறது.

அப்போது அந்தக் கந்தக அமிலங்கள் பட்டவுடனே சூடாக வருகிறது.
1.யாரும் ஒன்றுமே ஓட்டை போட வேண்டாம்.
2.நிலத்திற்கு மேலே அந்தத் தண்ணீர் கொப்புளித்து வெளியிலே வரும்
3.அதைச் சுடு தண்ணீர் கிணறு (HOT SPRINGS) என்று சொல்வார்கள்.

மும்பைக்கு அருகில் உள்ள கணேசபூரிக்கு நான் போயிருக்கும் போது அங்கே சுடு தண்ணீர் எப்படி வருகிறது…? மலை மேலிருந்து எப்படி வருகிறது…? என்று அங்கே ஒரு மாதம் இருந்து பார்த்து வந்தேன் (ஞானகுரு).

அங்கே பல தொட்டிகள் கட்டி வைத்து இருப்பார்கள். முதலிலே லேசான சூடு இருக்கும். இரண்டாவது ஒரு சூடு இருக்கும். மூன்றாவது ஒரு சூடு இருக்கும். மிதமான சுடு தண்ணீரிலிருந்து குளித்து விட்டுப் போனால் தான் அடுத்து உடம்பே தாங்கும்.

அந்தக் கணேஷபுரியில் நித்யானந்த சாமிகளின் சமாதி உள்ள இடத்தில் ஆசிரமம் வைத்து இருக்கிறார்கள். ஏற்கனவே நித்யானந்த சுவாமிகள் அந்த மலைப்பகுதியில் உள்ள குகைகளில் யாரும் அங்கே வரக் கூடாது என்ற நிலையில் பல ஜெபங்களை எடுத்திருக்கிறார்.

அந்தக் குகைகளுக்குள் போக வேண்டும் என்றால் படுத்துத் தான் உள்ளே போக வேண்டும். அங்கே புலிகள் நடமாட்டமும் உண்டு. அது மனிதனை நுகர்ந்து வந்து பிடித்து விடாதபடி குகைகளுக்குள் ஒளிந்திருக்கிறவர்களும் உண்டு.

இமயமலைப் பகுதியிலும் சில இடங்களில் இதே மாதிரி மண்ணுக்குள்ளே மூடி இதே ஜெபத்தைச் சொல்லிக் கொண்டு புதையுண்டு இருக்கின்றவர்களும் இருக்கின்றார்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி இதை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டுத் தான் யாம் வந்தோம். கண்ட பார்த்த இயற்கையின் உண்மைகளைத்தான் உங்களிடம் சொல்கிறோம்.