ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 15, 2019

நாம் செல்லும் ஞானப் பாதையில் அனுபவங்கள் பெறுவது என்பது மிகவும் முக்கியம்…!

வெறும் தியானத்தை மட்டுமே செய்து கொண்டேயிருந்தால் நம் ஆன்மாவில் எதைப் பதிவு செய்து வைத்திருக்கின்றோமோ அதுவே மீண்டும் மீண்டும் நமக்குள் சுழலும். (CIRCULATION)
1.அதை வைத்து வாழ்க்கையைச் சந்தித்தால்
2.ஞானத்தின் பாதையில் முன்னேற்றம் இருக்காது.
3.எந்த இடத்தில் இருந்தோமோ கடைசி வரைக்கும் அப்படியே தான் இருப்போம்.
4.தியானம் நன்றாக இருந்தது…! என்ற இந்தச் சொல் மட்டுமே எஞ்சி நிற்கும்.

ஏனென்றால் தியானம் என்பது பயிற்சி. பயிற்சியை மட்டுமே செய்து கொண்டிருந்தால் நிஜ வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. பெற்ற பயிற்சியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உபயோகம் செய்ய வேண்டும்.
1.அப்பொழுதுதான் நமக்கு அனுபவம் கிடைக்கும்.
2.நம் பழக்கம் அதுவாக இருக்க வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியைக் கடைப்பிடித்து நடந்த நிலைகள் கொண்டு தான் பெற்ற அனுபவங்களைத் தான் சாமிகள் (ஞானகுரு) ஞான உபதேசமாக நமக்குக் கொடுக்கின்றார்.

அருள் ஞானிகளைப் பற்றிய அந்தப் பதிவுகள் மிக மிக முக்கியம். அது தான் ஆற்றல். அவர் கொடுக்கும் ஞான உபதேசங்களை ஆழமாக நமக்குள் பதிவு செய்து அதன் துணை கொண்டு வாழ்க்கையில் வருகின்ற ஒவ்வொன்றையும் நேரடியாகச் சந்தித்தால் (அனுபவத்தின் மூலமாக) ஞானம் கிடைக்கும்.

அதை வைத்துத் திரும்பவும் உபதேசம் கேட்டால் உயர் ஞானமாகும்… உயர் ஞானம் மெய் ஞானமாகும்.

அதை உபயோகித்து மீண்டும் மீண்டும் வாழ்க்கையில் வருவதை எதிர் கொண்டால் சாமி சொல்வது அனைத்தையும் இப்பொழுது நாம் வாழும் காலத்திலேயே நிச்சயம் உணரலாம்… பார்க்கலாம்…!