ஒருவர் தீமைகளையே செய்து கொண்டிருந்தாலும்
அந்தத் தீமைகளிலிருந்து மீள்வதற்காக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
“ஈஸ்வரா..,” என்று எண்ணுதல் வேண்டும்.
இப்படி உயிருடன் ஒன்றிய நிலைகள்
கொண்டு உயிரின் உணர்வுகள் இணைக்கப்பட்டு விண்ணை நோக்கி ஏகிடல் வேண்டும்.
விண்ணை நோக்கி ஏகும்பொழுது
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற நினைவினை அகக்கண்ணுடன் உணர்வை உள் செலுத்தி
இந்த உணர்வின் சக்தியை நமக்குள் இவ்வாறு வலு சேர்க்க வேண்டும் என்று உணர்த்தினார் குருநாதர்.
இது தான் ஆத்ம சுத்தி என்பது.
ஏனென்றால், ஒவ்வொரு நிமிடமும்
தெளிவுபடுத்துவதன் உண்மைப் பொருள்கள் இதுதான்.
நாம் யாரும் தவறு செய்யவில்லை.
சந்தர்ப்பத்தால் ஒருவர் வேதனைப்படுவதைக்
கேட்டுணர்ந்தாலும் அது நமக்குள் வேதனைப்படும் உணர்வாக மாறிவிடுகின்றது. பின் அதிலிருந்து
மீள முடியாத துயரமாக எய்திவிடுகின்றோம்.
அதைச் சுத்தப்படுத்துகின்றோமா..,?
யாராவது அதைக் காட்டியிருக்கின்றார்களா..,?
ஆனால், புற நிலைகள் கொண்டு
ஒரு பொருளை உருவாக்குகின்றோம் என்றால் அதை உருவாக்கும்போது ஏற்படும் அழுக்கை நீக்குகின்றோம்.
அன்றாடம் நம் உடலில் படும்
அழுக்கினை நீக்கக் குளித்துவிடுகின்றோம். தொழில் செய்யும் போது அவ்வப்பொழுது அழுக்கு
சேர்ந்தால் அதை உடனுக்குடன் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.
நாம் உடுத்தும் உடைகளில் உள்ள
அழுக்கையும் சோப்பைப் போட்டுத் துவைத்துத் தூய்மையாக்கிக் கொள்கின்றோம்.
அதைப் போன்று தான் நம் உணர்வுக்குள்
பட்ட சலிப்பு சஞ்சலம் சோர்வு வேதனை என்ற அழுக்கினைத் துடைப்பதற்கு அந்த ஞானிகளின் உணர்வை
எடுக்க வேண்டும்.
தன் வாழ்க்கையில் வந்த தீமைகளைத்
துடைத்துக் கொண்ட உணர்வின் தன்மை ஒளியாகி தெளிந்துணர்ந்த அந்த அருள்ஞானிகளின் அருள்
உணர்வை நமக்குள் பருக வேண்டும்.
ஒரு தாவர இனச் சத்திற்கு உரமாகக்
கூட்டுவது போல அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்து உரமாக ஆக்கிக் கொள்ள நம் நினைவலைகள்
கொண்டுதான் எடுக்க வேண்டும்.
தாவர இனங்கள் உணர்வின் தன்மை
கொண்டு எடுக்கும்.
ஆக, நமக்குள் பதிந்த நிலைகளில்
நம் வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு என்ற நிலைகளை எடுத்திருந்தாலும்
அவையெல்லாம் நமக்குள் துரித நிலையில் இயக்கக்கூடியது.
ஆனால், அதனின் இயக்கத்தைக்
குறைக்கும் சக்தியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் இணைக்க
வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளியை இணைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
நம் எண்ணத்தால் அதைப் பெறவேண்டும்
என்ற ஏக்க உணர்வுடன் விண்ணை நோக்கி ஏகி அந்த உணர்வின் தன்மை நம் உயிருடன் ஒன்றி நினைவலைகளை
உள் செலுத்துதல் வேண்டும்.
ஆனால், இதை நம் ஆன்மாவாகச்
சேர்ப்பதற்கு முன் அந்த அருக் உணர்வின் தன்மையை உயிர் வழி உள்ளுக்குள் செலுத்தி அந்த
உணர்வின் தன்மையை உன் உடலிலிருந்து ஆன்மா பெறும் வழியே இது தான்.
ஆக, இதற்குப் பெயர் தான் “பிராணாயாமம்”.
அதாவது மெய்ஞானியின் உணர்வைத்
தனக்குள் சேர்த்து அதை உள்ளுக்குள் ஜீவன் பெறச் செய்து இதனின் வேட்கை அலைகளைப் பரப்பச்
செய்ய வேண்டும்.
இப்பொழுது நாம் ஒரு பொருளை
நாம் வேக வைத்தால் அது வெந்தபின் அது உள்ளிருந்து ஆவி வெளி வருவது போல் துருவ நட்சத்திரத்தை
இந்த உடலான சட்டிக்குள் செலுத்தி வேக வைக்க வேண்டும்.
செடிகள் வளர புற நிலைகளிலிருந்து
தன் உணர்வின் சத்தை எடுக்கின்றது. ஆனால், அதே சமயம் உயர்ந்த சத்தின் தன்மை நஞ்சிருந்தாலும்
இந்த ஆவியின் தன்மை வெளிப்படுகின்றது.
அது போல அந்த அருள் ஞானியின்
உணர்வை நாம் நுகர்ந்து உணர்வின் தன்மை அகக்கண்ணான உயிரின் வழி உள் செலுத்த வேண்டும்.
நம் கண்கள் - புறக்கண் நம்
உயிர் - அகக்கண் ஆக இது மூன்றையும் இணைத்து விண்ணுலகில் ஏகி மகரிஷிகளின் அருள் சக்தி
பெறவேண்டும் என்ற நினைவலைகளை உள் புறமாக அது உணர்வலைகளை நினைவூட்டி அதைத் தூண்டச் செய்தல்
வேண்டும்.
நம் உடலுக்குள் இந்த உணர்வின்
தன்மை ஆக்கங்கள் அதிகமாகும் பொழுது உடலிலிருந்து வெந்து வெளி வரும் ஆவியின் நிலைகள்
நம் ஆன்மாவில் உள்ள தீமைகளைப் பிளக்கின்றது.
அருள்ஞானிகளின் உணர்வை நாம்
சுவாசித்து ஏற்கனவே, நம் வாழ்க்கையில் இதற்கு முன் கண்டுணர்ந்த தீய உணர்வின் அலைகள்
நம் ஆன்மாவில் கலந்திருப்பதை இதைப் பிளந்திடல் வேண்டும்.
இந்த உணர்வின் நினைவலைகளாக
நாம் வலுக் கொண்ட செயலாக செயலின் தன்மை அடைய முடியும் என்று தெளிவுற எடுத்துரைத்தார்
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
இதன் வழிகளில் மற்றவர்களுக்கும்
நீ எவ்வாறு வழி காட்ட வேண்டும் என்று உணர்த்தினார்.
ஒவ்வொரு உயிரையும் நீ கடவுளாக
எண்ணு. உடலை ஆலயம் என்று மதி.
நல்லதைக் காத்திட வேண்டும்
என்ற நிலையில் அவர்கள் அறியாது சேர்த்துக் கொண்ட உணர்வுகள், அவர்கள் அறிந்தபின் காத்திடும்
நிலையாக எடுத்த உணர்வுகள் அவர்கள் நல்ல உணர்வுடன் கலந்து தீமையின் செயல்களாக விளைந்து
விடுகின்றது.
அறியாது உட்புகுந்த அந்தத்
தீமைகளை நீக்க முறையற்றிருக்கும் அவர்களைக் காத்திட வேண்டும் என்ற உணர்வு கொண்டு நீ
அந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்து என்றார் குருநாதர்.
இவ்வாறு நீ செய்தாய் என்றால்
கீதையிலே சொன்னது போல பிறர் வாழ வேண்டும் பிறர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற
எண்ணங்களை நீ எடுத்துக் கொண்டால்.., “உன் உயிர் உன்னைத் தூய்மைப்படுத்தச் செய்கின்றது,
தூய்மைப்படுத்தும் உணர்வை உனக்குள் வளர்க்கச் செய்கின்றது”.
அதனின் வழித் தொடர் கொண்டு
“நீ இவ்வாறு செய்து வா” என்று கட்டளையிட்டார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
அவர் இட்ட கட்டளைப்படித்தான்
அருள் சேவையாகச் செய்து கொண்டிருக்கின்றேன். எமது அருளாசிகள்.