ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 27, 2016

தூணிலும் இருக்கின்றான், துரும்பிலும் இருக்கின்றான், உன்னிலும் இருக்கின்றான், என்னிலும் இருக்கின்றான், அனைத்திலும் இருக்கின்றான் கடவுள்

நம்முடைய சாஸ்திர விதியே இது தான்.

நமது உயிர் நமக்குள் “ஓ” என்று இயக்கி அந்த உணர்வின் துணையால் பல கோடி உணர்வின் தன்மைகளை நாம் பெற்றுப் பல மிருக இனங்களாகப் பிறந்தும் அதிலிருந்து நம்மைக் காத்திடும் உணர்வின் துணை கொண்டு இன்று நம்மை உருவாக்கியுள்ளது.

இதை அறிந்து கொள்ளும் நிலைகள் பெற்ற நிலைகளில் அறிந்த மனிதன் தான் அணுவிற்குள் அணுவின் ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்து இந்த உணர்வின் செயலைத் தெளிவாக எடுத்துரைத்தது அகஸ்தியர் தான்.

அவருக்குள் கண்டுணர்ந்த உணர்வின் சக்து விளைந்து இன்றும் நம் பூமியில் நமக்கு முன் பரவிப் படர்ந்து கொண்டுள்ளது.

அவன் அந்த உடலிலே தீமைகளை அகற்றி உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகி இன்றும் துருவத்தில் நிலை கொண்டு “துருவ மகரிஷியானான்”. துருவ நட்சத்திரமாக இன்றும் இயங்கிக் கொண்டுள்ளது.

அவன் காட்டிய நிலைகள் தான் சாஸ்திரத்தில் - முதலிலே பேரண்டத்தின் நிலைகள் எதுவாக இருப்பினும் “கடவுள் எங்கேயோ ஒளிந்து கொண்டுள்ளான்..,” என்ற நிலை இல்லை.

நமக்குள் நம்மை உருவாக்கியது நம் உயிரே.

பேரண்டத்தின் ஆற்றலை அந்த உணர்வின் தன்மை கவர்ந்து வெளிப்பட்டாலும் அந்த உணர்வைப் பிளந்து உணர்வின் இயக்கத்தை அறிந்து அறிந்த நிலைகள் நம்மை இயக்கி இத்தகையை உடலின் உணர்வை மனிதனாக உருவாக்கியது நம் உயிரே.

ஆகவே, கடவுள் எங்கேயோ இல்லை நமக்குள் நின்றே இயக்குகின்றான், அவன் இயக்குகின்றான்.

நாம் எத்தகையை உணர்வின் தன்மை நாம் கவர்கின்றோமோ இந்த உணர்வினை “ஓ” என்ற ஜீவனாக்கி நமக்குள் ஜீவ அணுவாக மாற்றும் பொழுது நாம் எண்ணிய குணமும் நமக்குள் பதிந்த உணர்வும் மீண்டும் அது நினைவுபடுத்தி இயக்கப்படும் பொழுது “அதுவும் கடவுளாகத்தான்..,” இயக்குகின்றது.

தூணிலும் இருக்கின்றான், துரும்பிலும் இருக்கின்றான், உன்னிலும் இருக்கின்றான், என்னிலும் இருக்கின்றான், அனைத்திலும் இருக்கின்றான் என்று “பிரகலாதன்” கதையில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஆக, சூரியனின் காந்தப் புலனறிவு ஒரு உணர்வின் சத்தை அது கவர்ந்து கொண்டால் அதே சூரியனால் இயக்கப்படும் உடலின் இயக்கத்திற்குள் நம் உயிரால் கவரப்பட்ட உணர்வின் தன்மை அதைப் பிளந்து உணர்வின் தன்மை இயக்கத்தை உணர்ந்து அது உணர்ந்த உணர்வின் செயலாக நம்மை இயக்கும் செயலாகக் “கடவுளாக அது எப்படி இயக்குகின்றது…?” என்ற நிலையை நமது சாஸ்திரத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

ஆகவே, அந்தச் சாஸ்திர விதிப்படி நமது உயிர் கடவுள். உள் நின்றே இயக்குகின்றது. நாம் எண்ணிய உணர்வின் சத்தை “ஓ” என்று ஜீவனாக்கி “ம்” என்று உடலாக்கி நம்முள் நின்று அக்குணமே கடவுளாக இயக்குகின்றது.

இந்தப் பேருண்மையைக் கண்டவன், உணர்ந்தவன் அகஸ்தியன். அணுவின் ஆற்றலையும் அணுவின் இயக்கத்தையும் தெளிவாக எடுத்துரைத்தவன் அகஸ்தியன்.

அதன் உணர்வே பல நிலைகளில் இங்கே படர்ந்து கொண்டுள்ளது என்ற இந்த உண்மையைத் தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் இதை உணர்த்துகின்றார்.