மார்கழி மாதம் வந்தால் தெய்வ
நிலைகளில் நமக்குள் நற்குணங்களை எப்படிப் பேணிக் காக்க வேண்டும்? வீட்டை எப்படிச் சுத்தப்படுத்த
வேண்டும் என்று காட்டியுள்ளார்கள்.
அதிகாலையில் கோலங்கள் போடுவதும்
அதில் மலர்களை வைப்பதும் வீட்டு வாசல்படியில் வைப்பதும் அதைக் கண்டு மகிழ்ந்திடும்
நிலையாக வைத்தார்கள்.
ஆக, இவையெல்லாம் நம் சாஸ்திர
விதிகளில் தெளிவான நிலைகளில் காட்டப்பட்டுள்ளது. அதை நாம் தெளிந்து ஒவ்வொரு நிமிடமும்
மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ளப் பழகுதல் வேண்டும்.
கோலமிடப்படும் பொழுது அந்தக் கோலத்தை நாம் எவ்வளவு
அழகுபடுத்துகின்றோமோ இதைப் போல நம் வாழ்க்கையில் “ஒன்று சேர்த்து…, இணைக்கும் நிலைக்கு..,”
வர வேண்டும்.
அதாவது, மகிழ்ந்திடும் நிலைகள்
கொண்டு மனித எண்ணங்களை ஒன்றுக்கொன்று இணைத்துக் கொண்டு வர வேண்டும்.
ஆக, அது எப்படிக் கோலத்தைப்
போட்டு நாம் மகிழ்கின்றோமோ இதைப் போல மனித வாழ்க்கையில் சிக்கலான நிலைகள் இருந்தாலும்
“பிணைப்பது ஒன்றாகி.., பார்ப்பதற்கு அழகாகவும்.., நன்மை பெறும் சக்தியாக” ஒருவருக்கொருவர்
நம்முடைய எண்ணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் இதைத்தான் சாஸ்திரங்களாகக் கதைகளாக
எழுதியுள்ளார்கள்.
ஆனால், கோலத்தை வெறுமனே போட்டு,
“நான் போட்டிருக்கின்ற கோலம் எப்படி இருக்கிறது பாருங்கள்..?” என்று இப்படித்தான் காட்டிப்
பழகுகின்றோம்.
கோலம் போடும் போது நம் நினைவுகள்
எப்படி வரவேண்டும்?
வாழ்க்கையில் நாம் சுழன்று
வரும் ஒவ்வொரு மனிதனிடத்திலும் தீமையிலும் தூய்மையற்ற நிலைகளிலும் நமக்குள் வளர்ந்து
வரும் நிலைகளிலிருந்து அதை அழித்திடாது “நாம் ஒருக்கிணைந்து மகிழ்ந்திடும் செயலாக,
நம் எண்ணங்களில் இணைத்திடும் நிலையாக, அழகுபடுத்தும் நிலையாக இந்த வாழ்க்கை அமைந்திட
வேண்டும் என்ற நினைவுடன் கோலம் போட வேண்டும்.
இதைத்தான் நம் வாழ்க்கையில்
ஒவ்வொரு நிமிடமும் ஞானிகள் காட்டிய அருள் நெறிகளில் தெளிந்தது தான்.
ஆனால், தெளிவற்ற நிலைகள் கொண்டு
இன்று கோலம் போட்டார்கள் என்றால், “ஆமாம்.., பெரிய.., யாரும் போட முடியாத கோலத்தை இவர்கள்
போட்டுவிட்டார்களாக்கும்..,” என்று பொறாமைப்பட்டுக் கொள்வார்கள்.
அடுத்தாற்போல் அவர்கள் போட்ட
கோலத்தைவிட “நான் எப்படிப் போடுகின்றேன் பார்..,” என்று அந்தப் பொறாமையைத்தான் நாம்
ஏற்றுக் கொள்கின்றோமே தவிர நன்மையின் நிலைகள் இல்லாது போய்விட்டது.
ஆகவே, இதைப் போல சாஸ்திரங்களை
அனர்த்தமான நிலைகளில் மாற்றியமைத்து அதனின் உட்பொருளைக் காண முடியாத நிலைகளில் நாம்
மறைத்துவிட்டோம்.