ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 16, 2016

கோபமாகத் தாக்குவது “கோழை”, அவர்களைச் சீர்படுத்திக் காட்டுவது “மன பலம்” - காந்திஜி

“தீமைகளிலிருந்து எப்படி விடுபட வேண்டும்” என்று உணர்ந்தவர் காந்திஜி.

நாட்டுப் பற்று கொண்ட காந்திஜி எத்தனை தொல்லைகள் வந்தாலும் சாத்வீக நிலை கொண்டு நாம் நாட்டிற்குச் சுதந்திரம் எப்படியும் வாங்க வேண்டும் என்ற வேட்கைகள் அதிகமாக உள்ளவர்.

ஆங்கிலேயர்களிடம் வெறுத்துப் பேசினால் மரண தண்டனை அல்லது தூக்குத் தண்டனை அல்லது அவனுக்குத் தக்க தண்டனை இப்படி ஏற்படுத்திக் கொண்டிருந்த நிலைகளிலிருந்து மக்களை மீட்டிட வேண்டும் என்று செயல்படுத்தியவர் காந்திஜி.

ஆகவே, “ஒருவரை எதிர்த்துத் தாக்கி…, ஒன்றும் செய்ய முடியாது”.

அன்பைக் கொண்டு அவனுக்குள் (ஆங்கிலேயருக்கு) நல்ல உள்ளம் வரவேண்டும் அவனை நாம் பேணிக் காக்கும் நிலை வரவேண்டும் என்று அதை அவருக்குள் உருவாக்குகின்றார்.

அதே வலுவின் தன்மை கொண்டு தான் மக்களைத் “தட்டியெழுப்பினார்”.

அப்பொழுது சுபாஷ் சந்திரபோஸ் இப்படி எல்லாம் நாம் அவர்களிடம் கையேந்தி நிற்க முடியாது. நம்மை வீழ்த்திவிடுவார்கள் என்று எதிர்த்துத் தீவிரவாதத்தைப் பற்றிப் பேசுகின்றார்.

நாம் தீவிரவாதத்தைக் கொண்டு வந்தால் அதன் வழி மக்கள் அனைவரும் தீவிரவாதிகள் ஆகிவிட்டால் நாளைக்கு நீ சுதந்திரம் வாங்கினாலும் “நாட்டுக்குள் இதே தீவிரவாதம் தான் வரும்” என்றார் காந்திஜி.

அதே மாதிரி இந்தியாவும் பாகிஸ்தானும் பிரியப்படும் பொழுது தீவிரவாதத்தில் செய்து கொண்ட நிலைகள் அங்கே சுதந்திரம் வாங்கியவுடன் என்ன ஆனது?

லியாகத் அலிகானை உடனே சுட்டுக் கொன்றார்கள். அவர் சொல்லும் புத்திமதிகளை எடுக்க வழி இல்லை. அதே தீவிரவாதம் வந்து அங்கே எப்படி அந்த நிலை பெற்றது என்று இன்றும் பார்க்கலாம்.

ஆனால், நம் நாட்டின் தன்மையில் சாந்தமும் விவேகமும் கொண்டு வந்த பின் இன்று வரையில் அந்த நிலை இருக்கின்றது.

ஏனென்றால், ஞானிகள் பரம்பரையில் வந்ததனால் அதன் உணர்வு கொண்டு நம் நாட்டின் தன்மையும் அத்தகையை நிலை பெற்றது. ஆகவே, எத்தனை நிலை வந்த போதிலும் சாந்தத்தைக் கையாண்டவர் காந்திஜி.

இந்து முஸ்லிம் போர்களானாலும் பல பேரை இரக்கமற்றுக் கொன்றிருந்தாலும் அந்த இடத்திற்குச் சென்று தன் உணர்வின் நிலையைச் செயல்படுத்திக் காட்டினார்.

மற்றவர்கள் எல்லோரும் “அங்கே போகவேண்டாம்..,” என்று சொல்கின்றார்கள்.

இத்தனை பேர் இறக்கும் பொழுது நான் ஒருவன் போய்விட்டால் பரவாயில்லை. எத்தனை பேருடைய உணர்வுகள் அவர்கள் நல்ல மனங்களை மாற்றவேண்டும் என்று அங்கே நடைப்பயணமாகச் சென்று வந்தார்.

அப்பொழுது அங்கே வாழும் மக்களின் மனதை மாற்றி ஓரளவிற்கு அமைதி காத்து மற்றவர்களைக் கொல்லும் நிலையைத் தடுத்து நிறுத்தினார்.

காந்திஜியின் உணர்வைக் கடைப்பிடித்ததனால் அரக்க உணர்வு கொண்ட நிலைகள் இருந்தாலும் மதத்தின் பெயரால் பல தொல்லைகள் கொடுத்தாலும் (காந்திஜியின் சொல்லைக் கேட்டு) அந்த மன உறுதியுடன் இன்றும் பாகிஸ்தானில் அந்த வலு கொண்ட மக்கள் இருக்கின்றார்கள்.

ஆகவே, “கோபமாகத் தாக்குவது.., கோழை”. “மன உறுதி கொண்டு..,” அவருடைய நிலைகளைச் சீர்படுத்திக் காட்டுவது மன பலம். ஆகவே, அது உறுதியானது என்று எடுத்துக் கூறினார் மகாத்மாஜி.

அதைப் போன்ற நிலைகளைத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உணர்த்துகின்றோம்.

ஒருவர் நம்மைக் கோபிக்கின்றார் அல்லது தொழில்களில் பலவீனமடைகின்றது என்கிற போது பலவீனத்தை எண்ணிக் கோழையானால் நம்முடைய செயல்களில் நிரந்தரமாகச் செய்ய முடியாது.

செய்த வேலையைச் சீர்படுத்தவும் முடியாது. இனி எதிர்காலத்தில் நல்வழிப்படுத்தவும் முடியாது. குடும்ப வாழ்க்கையில் க்ஷீனிக்கச் செய்து நாம் தரித்திரவாதியாகி கீழே தான் போக வேண்டும்.

ஆகவே, காந்திஜியைப் போல மன உறுதி கொண்டு வாழ்க்கையைச் சீர்படுத்தும் மன வலிமை நமக்குத் தேவை.

ஏனென்றால், நீங்கள் எந்தச் சாமியைக் கும்பிட்டாலும் எந்தச் சாமியாரைப் பார்த்தாலும் உயர்ந்த ஞானத்தின் உணர்வை உங்களுக்குள் பெறச் செய்வது அதற்குத்தான்.

இதைப் பதிவு செய்து கொண்டபின் இந்த உணர்வின் வலிமை உங்களுக்குள் அந்த நல்ல நேரமாக மாற்றிவிடும். ஆகவே, அருள்ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்துக் கொள்வோம்.

நம் காலத்தில் வாழ்ந்த காந்திஜியின் உணர்வலைகள் இங்கே உண்டு. அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் கூட உண்டு.

இன்றைக்கு மறந்திருந்தாலும் இந்த வாழ்க்கையில் ஞாபகப்படுத்தி காந்திஜியின் மன உறுதியைக் கொண்டு வரப்படும் பொழுது அது பதிவானால் அந்தப் பதிவின் நினைவு மக்கள் மத்தியில் நல்ல நிலையையும் உருவாக்கும்.

காந்திஜி அரசியல் நிலைகளில் வாழ்ந்தாலும் கடுமையான பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நம் நாட்டுக்கு மட்டுமல்ல, சிலோனுக்கும், பாகிஸ்தானுக்கும் இந்தோசீனா இதைப் போன்ற நாடுகளுக்கும் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தவர்.

“அவருடைய மன உறுதி..,” பிரிட்டிஷ் ஆட்சியரின் மனதை மாற்றி எல்லோருக்கும் சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஊட்டியது காந்திஜி தான்,