ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 17, 2016

“ரிமோட் கன்ட்ரோல்” போல் விபத்தைத் தடுத்துக் காண்பித்தார் குருநாதர் - நடந்த நிகழ்ச்சி

ஒரு சமயம் என்னைப் பொள்ளாச்சிக்குள் வரச் செய்தார் குருநாதர். பஸ் ஸ்டாண்டு அருகே வரும்போது வேகமாக வந்து கொண்டிருக்கும் பஸ்ஸுக்குக் குறுக்கே என்னை இழுத்துச் சென்றுவிட்டார்.

திடீரென்று அவர் விலகிக் கொண்டார். ஆனால், பஸ் நின்றுவிட்டது.

எப்படி “பிரேக்..,” ஆனது என்று தெரியவில்லை. இல்லை என்றால் நாங்கள் இரண்டு பேரும் அங்கே நசுங்கியிருப்போம்.

அந்த மாதிரி இழுத்துக் கொண்டு விபத்தில் அது எப்படி அந்த உணர்வுகள் இயக்குகின்றது?

அதே சமயத்தில், இப்பொழுது ரிமோட் கன்ட்ரோல் போல தன் சக்தியின் துணை கொண்டு அது எப்படி பிரேக் போட வேண்டும் என்று என்னை பஸ்ஸுக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துத் தள்ளிவிட்டார் குருநாதர்.

அப்பொழுது பஸ்ஸில் பிரேக் எப்படி அணைக்கின்றது? மனிதனின் உணர்வுகள் எண்ணங்களுக்கு எப்படி இருக்கின்றது?

“இயந்திரத்திற்குள் இருக்கக்கூடிய மேக்னட்” மனிதனின் உணர்வுகள் அவன் எண்ணி அங்கே பாய்ச்சப்படும் பொழுது அதே உணர்வின் துணை கொண்டு இது எவ்வாறாகின்றது என்று இதை உணர்த்துகின்றார்.

ஏனென்றால், இதை அனுபவபூர்வமாக எனக்குக் கொடுத்தார் குருநாதர். நடந்த நிகழ்ச்சி.