ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 3, 2016

விபத்தில் அடிபட்டவர்களைப் பார்க்கும்போது எப்படித் தியானிக்க வேண்டும்

இன்று நாம் மனிதர்களாக இருக்கின்றோம் என்றால் எங்கேயோ ஆக்சிடென்ட் ஆகும் பொழுது சிதைந்த சரீரத்தை உற்றுப் பார்த்து அஞ்சி எண்ணுவோரின் உணர்வுகள் “பார்த்தேன் பயமாகிவிட்டது...,” என்று அவர் பார்த்த உணர்வுகள் அவருக்குள் பதிவாகின்றது.

பதிவானாலும் ஓம் நமச் சிவாய சிவாய நம ஓம். தன் உடலாக்கிய பின் இந்த உணர்வின் தன்மையை வெளிப்படுத்தும் பொழுது கேட்டுணர்ந்தோர் உணர்வுகளிலும் இது பதிவாகிவிடுகின்றது.

பின் இந்த உணர்வைப் பதிவாக்கிவிட்டால் எங்கே சிதைந்த உணர்வுகளோ அந்த உணர்வுகள் பரவியிருப்பதை இவர்களும் நுகர்ந்து இதைப் போல இவர்கள் அறியாமலேயே அந்த வேதனையும் அச்சுறுத்தும் உணர்வுகளும் இங்கே (எல்லோருக்கும்) வந்துவிடுகின்றது.

இதைப் போன்று நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ இதை நம் உயிர் உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றது. இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் “விடுபட வேண்டுமா இல்லையா..?”

இதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைகள் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். இதிலிருந்து விடுபடும் சக்தியை நாம் பெறுவதற்கு ஒவ்வொரு நொடியிலேயும் நாம் அந்தத் துருவ மகரிஷிகளின் ஆற்றலைப் பெறும் தகுதி பெறவேண்டும்.

அந்தத் தகுதி பெறும் தன்மைக்கே இப்பொழுது உங்களுக்குள் உபதேசிப்பது. ஆகவே, உபதேச உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொள்ளுங்கள். பதிவான உணர்வை நீங்கள் வளர்க்க என்ன செய்ய வேண்டும்?

அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணி வரையிலும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் சக்தி வாய்ந்த ஒளியான உணர்வலைகள் நம் பூமியின் துருவப் பகுதி வழியாக வெளி வருகின்றது.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அதன் தொடர் கொண்ட உணர்வைக் கவர்ந்து நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், இந்த உயிரணுவின் தோற்றமும் பிரபஞ்சத்தின் தோற்றமும் உயிரணுவின் வளர்ச்சியும் வளர்ச்சியடைந்த மனிதரில் துருவ மகரிஷி எவ்வாறு உருவானரோ அந்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

அந்தப் பதிவின் நினைவு கொண்டு உங்களுக்குள் உருவாக்கி விட்டால் இந்த உணர்வின் துணை கொண்டு எளிதில் அந்தச் சக்திகளைப் பெற முடியும்.

காலை நான்கிலிருந்து ஆறு வரையிலும் நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்ற இந்த உணர்வினை உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.

பின் அங்கே அடிபட்டவர்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற உணர்வினைப் பாய்ச்சுதல் வேண்டும். அவர்கள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும், உடல் நலம் பெறவேண்டும் என்ற உணர்வினைப் பாய்ச்ச வேண்டும்.

ஆக, துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை உடலுக்குள் உள் புகுத்தி விட்டால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றியவுடன் செம்பையும் வெள்ளியையும் ஆவியாக மாற்றித் தங்கம் எப்படிப் பரிசுத்தமாகின்றதோ அதைப் போல நம் ஆன்மாவில் புகுந்த எத்தகைய கொடுமையான தீமைகளையும் அப்புறப்படுத்திவிடும்.

நம் ஆன்மா பரிசுத்தமாகிவிடும்.