ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 29, 2016

குரு எம்மிடம் சொன்னது - எவரைக் கண்டும் வேதனையோ, சோர்வோ அடையாதே, அவர்கள் அருள் சக்தி பெறவேண்டும் என்ற வலுவை நீ கூட்டிக் கொள்

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியினை நம்முடைய முந்தைய காலங்களில் விட்டுவிட்டோம்.

முந்தைய காலத்தில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை பெறும் தகுதியை ஏற்படுத்தினார்கள். அது காலத்தால் மறைந்துவிட்டது. அதனைப் பெறும் தகுதியே நம்மிடத்தில் இல்லாது போய்விட்டது.

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்றால் எண்ணத்திற்கு வலு இழந்துவிட்டது. வலுவிழந்த நிலைகளில் நாம் எதைச் செய்யப் போகின்றோம்?

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்றால் அவர்களின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். உணர்வின் தன்மை வலுப் பெறச் செய்ய வேண்டும். வலுப் பெற்ற பின் இத்தகைய தியானத்தைச் செய்ய வேண்டும். தியானத்தில் மகரிஷிகளின் அருள் சக்தியைக் கவரும் திறன் பெறவேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் வழியினை நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார். மகரிஷிகள் காட்டிய அருள் வழியை நீங்கள் அனைவரும் இப்பொழுது எளிதில் பெற முடியும்.

குருநாதர் காட்டிய நிலைகளில் எம்மிடம் அவர் சொன்னது:-
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக எண்ணு.
2.கடவுளால் அமைக்கப்பட்டது அந்தக் கோட்டை என்று எண்ணு.
3.அதற்குள் நல்ல குணங்களால் உருவாக்கப்பட்ட உடலை ஆலயம் என்று எண்ணு. ஆகவே இதை போதி.
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற ஏக்கத்துடன் நீ தியானி.
5.அவர்கள் பெறவேண்டும் என்று நீ இந்த உணர்வின் தன்மையைப் பதிவு செய்.
6.எவரொருவர் எண்ணி எடுக்கின்றனரோ அவர்கள் அந்த நற்பயனைப் பெறட்டும்.
7.அந்த ஆலயத்திற்குண்டான ஈசனை அவர்கள் மதிக்கட்டும்.
8.அந்த மனிதனாக உருவாக்கிய நல் உணர்வுகளை மதிக்கட்டும்.
9.அதன் உணர்வைப் பெறும் அந்த உணர்வின் தன்மையை நீ பதிவு செய்.
10.நினைவு கொள்ளட்டும். பெறட்டும். அவர்கள் வாழ்க்கை இது என்ற நிலையை எண்ணு.
11.இதைச் சொல்லியும் அதை அவர்கள் எடுக்கவில்லை என்றால் அதைக் கண்டு நீ வேதனைப்படாதே.
12.அவர்கள் பெறவேண்டும் என்று மீண்டும் நீ உன்னுடைய வலுவை ஏற்றிக் கொள்.
13.அவர்களிடம் சொன்னோம் கேட்கவில்லையே என்ற வேதனை உணர்வை உனக்குள் எடுக்காதே.
14.இது உன்னைத் தாழ்வின் நிலைகளுக்கு அழைத்துச் செல்லும்.
15.எப்படியும் அவர்கள் பெறவேண்டும் என்ற உணர்வின் வலுவைச் செருகேற்று.
16.உனக்குள் அவர் பெறவேண்டும் என்ற தியானத்தை நீ கூட்டு.
17.அந்த உணர்வின் அலைகளை உலகிலே பரப்பு.
18.அந்த உணர்வின் துணை கொண்டு பெறட்டும்.
19.அவர்கள் வாழ்க்கையில் அறியாத இருள்கள் நீங்கட்டும்.
20.மெய்ப் பொருள் காணும் உணர்வுகள் அவர்களுக்குள் விளையட்டும்.
21.மெய்ப் பொருள் கண்டுணரும் சக்தி அவர்கள் பெறட்டும் என்ற நிலையில் உன்னுடைய தியானத்தைக் கூட்டிக் கொள்
22.எவரைக் கண்டும் பெறவில்லை என்றால் நீ சோர்வடைந்துவிடாதே.
23.“எல்லோரும் பெறவேண்டும்” என்ற வலுவினை நீ கூட்டிவிடு என்றுதான் சொன்னார்.

அதனைத்தான் நான் செய்கின்றேன்.

பிறர் போற்றுவதற்காக நான் வரவில்லை. பிறர் புகழ்ந்த நிலைகள் அவருக்குள் மகிழ்ந்திடும் நிலை வரப்படும் போதுதான் என் உணர்வுக்குள் இருக்கும் நல்ல உணர்வுகள்
1.என் எண்ணமே என்னைப் போற்றும்.
2.எனக்குள் மகிழ்ந்திடும் நிலைகள் ஊட்டும்.

பிறர் எந்த அளவிற்கு மகிழ்கின்றார்களோ அவரிடமிருந்து வெளிப்படும் உணர்வே
1.உனக்குள் அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளாக வளர்ந்து
2.உயர்ந்த உணர்வின் சத்தாக உனக்குள் ஊட்டும்

3.அவர்கள் மெய்ப் பொருள் பெறுவதைக் கண்டு நீ மகிழ வேண்டும் என்றுதான் குருநாதர் கூறினார்.

அவர் எமக்குள் ஊட்டிய இந்த உணர்வின் தன்மைதான்
நீங்கள் அனைவரும் எளிதில் பெறமுடியும் என்று
எனக்கு நம்பிக்கை உண்டு.

நாம் எண்ணியது எதுவோ
அதை நம் உயிர் இயக்குகின்றது
என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.