ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 3, 2016

“அருள் ஞானியுடன் வட்டத்தில்” உங்களை அவர்கள் தன்னுடன் அழைத்துக் கொள்ளும் உணர்வே செயல்படுகின்றது

விஞ்ஞான அறிவால் உலகம் அழிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் மெய்ஞானிகளின் உணர்வுகள் இங்கே படர்ந்து கொண்டுள்ளது. வளர்ந்து கொண்டுள்ளது.

ஆக, நான் (ஞானகுரு – சாமிகள்) மூடனாக இருப்பினும் நான் பேசுகின்றேன் என்றால் இது நான் அல்ல.

ஞானிகளால் வளர்க்கப்பட்ட உணர்வின் செயல்கள் அதிலே விளைந்த உணர்வை நுகரும் ஆற்றல்களை நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுத்தார்.

அந்த உணர்வை நுகரப்படும்போதுதான்
அந்த உணர்வின் இயக்கமாக
சொல் வடிவிலே உங்களுக்குள் வருவதும்
உணர்வின் நிலைகளை நீங்கள் புலனறிவால் உணர்வதும்
உணர்ந்த உணர்வு உங்களை இயக்கச் செய்வதும்
நினைவு கூறும்போது அருள் ஞானியுடன் வட்டத்தில்
அவர்கள் தன்னுடன் அழைத்துக் கொள்ளும் உணர்வே அங்கே வருகின்றது.

ஒரு மாங்கனியின் வித்தை ஊன்றிவிட்டால் அதனின் சத்தாகத் தான் அதனின் சுவை கொடுக்கும்.

இதைப் போல அருள்ஞானியின் உணர்வை நமக்குள் ஞானிகளாக விளைந்தபின் அதிலே விளைந்த அந்தச் சத்து அவர்கள் கண்ட சுவையைத்தான் கொடுக்கும்.

இதைப் போலத்தான் அவர்களுக்குள் விளைந்த உணர்வின் சுவையை
நாம் அந்தச் சுவையை நுகரப்படும் போது
அந்த உணர்வின் சத்தாக நமக்குள் உணர்வுகள் இயக்கி
அதனின் துணையால்தான் நாம் விளைய முடியும்.

ஆக, அவர்கள் கண்டுணர்ந்த அவர்களுக்குள் விளைந்த உணர்வுகள் இங்கே படர்ந்திருப்பதை நாம் கவர முடியும்.

அதைக் கவர வேண்டும் என்பதற்குத்தான் குரு காட்டிய வழியில் உங்களுக்குள் இந்த உணர்வைத் தூண்டச் செய்து இந்த உணர்வின் ஆற்றலைப் பருக வேண்டும் நீங்கள் அதைப் பெறவேண்டும் என்று எண்ணுகின்றேன்.

எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய்ஞானிகளின் உணர்வுகள் நீங்கள் பெறவேண்டும். உங்கள் வாழ்க்கையில் வந்த அறியாத இருள்களைப் போக்க வேண்டும். மெய் உணர்வின் தன்மை உங்களுக்குள் ஒன்றிட வேண்டும்.

மெய் உணர்வின் தன்மை உங்களுக்குள் வளர்ந்து
அழியா பெரு வாழ்வு என்ற நிலையில்
இந்த ஜென்மத்திலேயே இந்த உடலிலேயே
நீங்கள் அடைந்திடல் வேண்டும்.

விஞ்ஞான உலகில் வரும் இருளைப் போக்கி அந்தப் பேரானந்த பெருவீடு என்ற மகிழ்ச்சி இங்கே தோன்றி உங்களுக்குள் விளைய வேண்டும் என்ற இந்த ஆசையில் இதை வெளிப்படுத்துகின்றேன்.

நீங்கள் பெறவேண்டும் என்ற எண்ணும்போது நானும் அதைப் பெருகின்றேன். இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயே நீ அதுவாகின்றாய் என்று உணர்த்தப்பட்டுள்ளது.