சில
குடும்பங்களில இளம் பருவத்தில்
திருமணமாகாத நிலையில் சிலர் இறந்திருப்பார்கள். அந்த ஆன்மாக்களை இந்த
முறைப்படி எண்ணி சப்தரிஷி
மண்டலத்துடன் கலக்கச் செய்து உடல்
பெறும் உணர்வுகளைக் கரையச் செய்திட வேண்டும்.
பிறவியில்லா
நிலையை அடைந்திட வேண்டும்
என்று அங்கு செலுத்தி
விட்டால் நம் உடலிலிருந்து
உருவான அந்தக் கருவின்
தன்மையை நாம் செலுத்தும்போது நமது ஈர்ப்பு வட்டத்தில் அது வளரும்.
அதாவது,
தாயின் கருவின் உணர்வைக் கொண்டு பாலாக எடுத்து வளர்வது
போல இந்தப் பிறவிக்
கடனை மீண்ட பின்
நாம் செலுத்திய பின் இது விண்ணிலே சூழல
அந்த
உணர்வின் சக்தி கொண்டு
நமது
உணர்வின் துணைகொண்டு
நமது
ஈர்ப்பு வட்டத்தில் அது
வளரும் பருவம் பெறும்.
இளமைப்
பருவத்தில் எண்ணங்கள் இல்லாது,
ஒரு குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டால்
தாய் ஏக்கத்தின்
உணர்வு கொண்டு
அந்த ஆன்மா
தாயின் உடலுக்குள்ளே திரும்பிச்
சென்று
மனிதனாக உருபெறும்
கருவாக மாறுகின்றது.
தாய்ப் பாசம் கொண்டு அந்தக் குழந்தை இறந்தால் தாய் பாசத்தால்
எண்ணும்போது அந்தக் குழந்தையின்
உயிரான்மா தாயின் உடலுக்குள்
செல்கின்றது.
தாய்
பாசத்தால், அன்பால், பேணிய
இந்த உணர்வின் தன்மையும் அந்த அன்பின் தன்மை
கொண்டு
அந்தக் குழந்தையின் உணர்வுகள் தாய்க்குப் பேரன்பை ஊட்டும்,
மகிழ்ச்சியான உணர்வுகளை தாய்க்கு ஊட்டும்
தாய்க்குப் பாதுகாப்பாக வரும்.
ஆகவே,
இதைப்போன்று நம் எண்ணத்தின் தொடர் கொண்டு ஒவ்வொரு உடல்களிலே சார்ந்து உணர்வின் வலிமை
கொண்டபின் இப்படி வருகின்றது.
உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்கள் அடையும் நிலைகளை - இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது
அவசியம். அந்த ஆன்மாக்களை நாம் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய செய்ய வேண்டும்.
எங்களுடன்
வாழ்ந்து வளர்ந்து உடலை
விட்டுப் பிரிந்து சென்ற
குலதெய்வங்களின் உயிரான்மாக்கள்
சப்தரிஷி
மண்டல ஒளி அலையுடன்
கலந்து
உடல்
பெறும் உணர்வுகள் கரைந்து
பெருவீடு
பெரு நிலை என்ற
நிலை அடைந்து
பிறவியில்லா
நிலை அடைந்து
அழியா
ஒளிச் சரீரம் பெற்றிட
அருள்வாய் ஈஸ்வரா
என்று இப்படி நீங்கள் காலை துருவ தியான நேரங்களில் எடுத்துப் பழக வேண்டும்.