ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 16, 2016

உடலை விட்டுப் போனால் “எங்கே போகிறோம்” என்பதை நீங்கள் நிர்ணயம் செய்துகொள்ளுங்கள்

சாகாக்கலை என்ற நிலைகளில் இன்றைக்கும் சிலர் சொல்வார்கள்.

நான் முந்திய பிறவியில் இப்படிப் பிறந்தேன்,
இந்தப் பிறவியில் இப்படி இருக்கின்றேன்.
அடுத்தபடியாக இன்னொரு பிறவிக்குச் சென்றேன் என்றால்
நான் இன்னாராக இந்த இடத்தில் இருப்பேன் என்று சொல்லி
இந்தப் பிறவிக்கடலில் தான் இருக்கின்றார்கள்.

இதுவெல்லாம் மந்திர ஒலியால் உருவாக்கப்பட்ட அரசன் தான் சாகா நிலை என்ற நிலைகளை வைத்து இந்த உடலிலே தனக்குள் பெறவேண்டும் என்ற உணர்வின் சக்தியை வளர்த்துக் கொண்டவன்.

அதிலிருந்து இந்த உடலுக்குள் சென்றவன் இனி அடுத்த உடலையும் தேடி தன் உணர்வின் சக்தியை இறந்த பிற்பாடு அங்கே போய் அதுவாகும்.

ஆக இந்தப் பிறவிக்கு வந்து மீண்டும் மீண்டும் வந்து கூடு விட்டுக் கூடு பாய்வதுதான். இந்த உணர்வின் தன்மை கொண்டு சுகத்தை வேண்டுமென்றால் அனுபவிக்கலாம்.

விண் செல்லும் பாதைகளைக் காட்டவில்லை.

இந்த மண்ணின் ஆசை கொண்ட நிலைகளும் இந்த உடலின் ஆசை கொண்ட நிலைகளும் அன்று ஆண்ட அரசர்களால் உருவான நிலைகள் தான்.

அதே சமயத்தில் “சொத்து கொடுக்கின்றேன்.., தலையைக் கொடுத்தால் தங்கத்தை விரித்துக் கொடுக்கும் இந்தத் தெய்வம்.., என்றும், உனக்குக் கஷ்டமெல்லாம் போய்விடும் நான் பார்த்துக் கொள்கிறேன் மகனே..” என்று இங்கே ஜோதிடம் சொன்னால் இதுவும் அரசனால் உருவாக்கப்பட்டு இவனின் நிலையிலிருந்து அடுத்து உடலுக்குள் போகும்.

இந்த உடலின் பற்றுக்கு அங்கே போகலாம். ஆனால், இந்த உடலில் எத்தனை நாளுக்கு இது நிலைத்து நிற்கும்?

ஆனால், பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதனாக வாழும் போது விஷத்தன்மைகள் அனைத்தையும் ஒடுக்கி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு
அகஸ்தியன் இன்று நம் பூமியின் துருவப் பகுதியில்
துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

இந்தப் பிரபஞ்சத்திலிருந்து உணவை எடுக்கின்றது நம் பூமி. ஆனால், இதிலே விளைந்த உணர்வின் தன்மை இந்த உயிர் தான் இதையெல்லாம் எடுத்து உணர்வின் ஒளியின் சரீரமாகப் பெற்று உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக இன்று நிலைத்துக் கொண்டிருக்கின்றான் துருவ மகரிஷி.

விண்ணிலிருந்து வரக்கூடியது அனைத்தையும்
நஞ்சினை ஒடுக்கி உணர்வின் ஒளியாக மாற்றி
தன் விழுதுகளைப் பரப்பி
எத்தகைய தீமைகள் வந்தாலும் அதை ஒடுக்கி தன் உணவாக எடுத்து
ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது துருவ நட்சத்திரம்.

அவனைப் பின்பற்றியவர்கள் அனைத்தும் இன்று சப்தரிஷி மண்டலங்களாக முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்பார்கள். பண்டைய காலத்தில் சென்றவர்கள் எண்ணிலடங்காதோர் அவன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டுள்ளார்கள்.

இப்பொழுது போவதென்றால் நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அங்கே விண் செல்லும் பாதையைக் காட்டிய பின்புதான் சிறிது பேரையாவது அங்கே உந்தித் தள்ளுகின்றோம்.

அதற்கு முன்னாடி தள்ளுவதற்கில்லை.

உயிருடன் ஒன்றும் நிலைகளையும்,
உணர்வை ஒளியாக மாற்றும் நிலைகளையும்
சப்தரிஷி மண்டல எல்லையை அடையும் வழிகளைத்தான்
திரும்பத் திரும்ப இங்கே உபதேசித்து வருகின்றோம்.

ஆகவே, உடலை விட்டுச் சென்றால் எங்கே போகிறோம் என்ற நிலையை நீங்கள் நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்.

அதை நிர்ணயம் செய்துவிட்டுப் போனால் பரவாயில்லை.