ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 12, 2016

ஐந்து பேருக்கு... ஐம்புலனுக்கு ஒருத்தி...! - “திரௌபதை”

எனக்கு வேண்டாதவர்கள் வந்து
அவர்கள் நல்லது செய்தாலும்
இந்த கௌரவர்கள் (உடலுக்குள் உள்ள கௌரவ உணர்வுகள்) என்ன செய்கின்றார்கள்?

ஏற்றுக்கொள்கின்றார்களா?

இல்லை. கௌரவர்களுக்கும் பஞ்சபாண்டவர்களுக்கும் போர் நடக்கின்றது.

சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வுகள் வெப்பம், காந்தம் விஷம் என்றாலும் அவன் நல்லது சொல்லுகின்றான் அதனுடைய நிலைகளில். தை அந்தக் காந்தம் கவர்ந்து தன்னுடன் இணைத்து வெப்பம் என்ற உணர்வுகளால் அதனை இணைத்து விடுகின்றது.

அதோடு சேர்ந்த விஷம் இதனுடன் சேர்த்து அந்த நல்லதின் சத்தை எடுக்கப்படும் போது அதனுடைய மணம் ஞானம். அந்த ஞாத்தின் வழி அதை நுகர்ந்து எண்ணங்கள் வருகின்றது. அந்த எண்ணத்தின் வழிதான் அவன் சொல்லுகின்றான்.

அப்படிச் சொல்லப்படும்போது இங்கே நம் உடலிலே அவன் நல்லவன் என்று எடுத்துக் கொண்டால் அவன் சொன்னது தீமை என்று உள்ளுக்குள் விடாதபடி இந்த உடலுக்குள் கௌரவப்போர் நடக்கின்றது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா? உள்ளுக்குள் விடமாட்டேன் என்கிறது.

கண்ணன் (கண்கள்) கண்ணனின் சகோதரி திரௌபதை .ஆக, நாம் சுவாசிப்பது எல்லாம் இந்த ஐந்து புலனுக்கும் கட்டுப்பட்டுத்தான் ஆகும். அது இயக்கியே தான் தீரும்.

கண்களால் பார்க்கிறோம் அதுதான் திரௌபதை என்று.
கண்களால் நாம் நுகர்ந்து
      உயிரிலே பட்டபின் - திரௌபதை
அந்த உணர்ச்சிகளை உடலுக்குள் காட்டுகின்றது.

நாம் கண்ணால் பார்க்கின்றோம் நமக்குள் அந்த உணர்ச்சிகளை உள்ளே  செல்லப்படும்போது உள்ளுக்குள் இருக்கும் உணர்வுக்கும் இதற்கும் என்ன செய்கின்றது?

அந்த கௌரவப் பிரச்சினைகள் போர் நடக்குது.

உள்ளுக்குள் சென்றபின் நம் உடலிலே இருக்கக்கூடிய ஒவ்வொரு குணங்களுக்கும் எதிர்மறையான பதட்டமும் பயமும் நமக்குள் வருகின்றது.  அங்கே திரௌபதை அது உண்மையின் உணர்வைச் சொல்கின்றது.

னென்றால், கண்களால் நம் புறத்தால் பார்க்கின்றோம். உயிர் நாம் அகத்தால் காண்கின்றோம். உள்ளுக்குள் நமக்குள் உணர்த்துகின்றது.

அதனால் தான் இந்த உயிரை திரௌபதை என்று நாம் புரிந்து கொள்வதற்காக காரணப்பெயர் வைக்கின்றனர். நாம் கண்ணால் பார்க்கின்றோம்.
நுகர்ந்த உணர்வு உயிரால் உணர்ச்சியால் உணர்கின்றோம்.
அதனால்தான் இப்படிக் காரணப்பெயர் வைக்கின்றார்கள்.

இங்கே உயிர் ஈசன் என்றாலும் கடவுள் என்றாலும் ஆனால் அந்தக் காரணப்பெயர் வைத்து இப்படி அழைக்கின்றார்கள். திரௌபதை ஆனால் அந்தப் புலனறிவு சுவாசித்தபின் அதற்குக் கட்டுப்பட்டுத்தானே நடக்கிறது.

அது ஐந்து பேருக்கு (ஐம்புலனுக்கு) ஒருத்தி. நீங்கள் எந்த நிலை ஆனாலும் அந்த ஒருத்தி தான் .

அப்பொழுது அந்த துயரப்படும் உணர்வின் நிலை ஆகும் போது அங்கு அவமதிக்கப்படுகின்றது என்பதனைக் காட்டுவதற்குத்தான்
இந்த வேதனைப்படுத்தும் உணர்வுகளை
அதை அவமரியாதைப்படுத்துகிறான் என்ற நிலை வரும்போது,
நாம் தெரிந்து கொள்வதற்குக் காரணப்பெயர் வைக்கின்றனர்.

ஆகவே, இப்படி நமக்குள் நல்ல குணங்கள் இருந்தாலும் எத்தனையோ வகையான குணங்கள் நூறுவிதமான குணங்கள் உண்டு.

நாம் ஒரு குழம்பு வைக்கின்றோம் என்றால் காரம் உப்பு புளிப்பு மற்ற சீரகம்  எல்லாம் சேர்த்து ஒரு சுவையாக மாற்றுகின்றது.

அதில் நாம் எந்தச் சுவையை அதிகமாகச் சேர்க்கின்றோமோ உப்பு அதிகமானால் உப்பு. காரம் அதிகமானால் காரம் .புளி அதிகமானால் புளி .சீரகம் அதிகமானால் உமட்டல். இதைப்போல அதில் எது அதிகமோ அதைப்போல வந்து விடுகின்றது.

னால், எல்லாம் சமமாகப் போட்டால் ருசியா இருக்கின்றது.

இதைப்போல மனிதனான நாம் தீமை என்று தெரிந்து கொண்டபின் மாற்றி, அதைச் சுவையாக மாற்றும் சக்தி உண்டு.

அந்த நிலையைப் பெறச் செய்வதற்குத்தான் இங்கே இந்தத் திரௌபதை பற்றி உயிருடைய நிலைகளை எடுத்து காரமான உணர்ச்சிகளானால் அது உள்ளுக்குள் இருந்து எதிர்ப்பதில்லை.

ஆனால் ஒவ்வொரு குணங்களும் தனக்குள் எடுத்துக் கொண்டதற்கு ஒப்ப  உயிரிலே படும்போது வாலி என்றாலும் உடலுக்குள் சென்றால் அதன் உணர்வின் தன்மை அங்கே வலிமை கொண்டு நம் உடலில் இருக்கக்கூடிய குணங்களுக்குள் போர் செய்கின்றது.

அதனால்தான் ஒவ்வொரு நிமிடமும் நாம் பிறருடைய உணர்வுகளை
தீமைகளை நுகரப்படும் போது
உயிர் வழி சென்றபின்
திரௌபதை வேறு ஒன்றும் செய்யாது.

ஆனால், டலுக்குள் சென்றபின் நம் உடலில் உள்ள குணங்களுக்கு இது ஆகாது.

காரமான உணர்ச்சிகளில் ஒருவர் செயல்படுகின்றார் என்றால் நுகர்ந்து கொண்டபின் இதே உயிர்
(காரமான) உணர்ச்சிகளை உடலுக்குள் செலுத்தப்படும்போது
சாந்தமான நிலைகளில் இருப்பதையெல்லாம் வெறுகின்றது.
இந்தக் காரமான உணர்வை ஏற்றுக்கொள்கின்றது
காரமான உணர்ச்சிகளை உள்ளே .அதை ஏற்றுக்கொள்கின்றது.

காரத்தை வெறுத்த உணர்வும் உள்ளுக்குள் இருக்கின்றது. ஆக, இதற்கு இரண்டுக்குமே போர் நடக்கின்றது.

அந்தக் காரம் அதிகமானால் அதன் உடலுக்குள் இருக்கும் மற்ற நிலைகள் எல்லாம் சாந்தத்தின் நிலை வரப்படும் போது இரத்தத்தில் கலந்து செல்லும் உணர்வுகளுக்குள் போர் முறையாகின்றது.

இப்பொழுது காற்றிலே ஒரு காரமான உணர்வு வருமானால் நாம் சுவாசித்தால் நம் உடலிலுள்ள அத்தனை நிலைகளுக்கும் தும்மல் வருகின்றது. அப்பொழுது அது நம்மை இயக்குகின்றது.

இதே போலத்தான் போர்கள் நம் உடலில் நடந்து கொண்டிருக்கின்றது. என்ற நிலையை நாம் அறிதல் வேண்டும்.

இப்படி ஒவ்வொரு உடலிலேயும் போர் நடத்தி இந்த உடலிலே எது வென்றதோ அந்த வாலி என்ற நிலைகள் கொண்டு இரண்யன் என்ற நிலைகள் மாறி, அதற்குப் பிறகு உடலை விட்டு வந்தபின்
எப்படி ஒரு ஆட்டின் உயிரான்மா
நரியின் உடலுக்குள் சென்று நரியாகப் பிறந்ததோ
வாழ்க்கையில் நாம் எப்படி நடந்தோம்
என்று தெரிந்து கொள்வதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.